சென்னை அக் 02-
உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்த நாளையொட்டி உத்தமர் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உத்தமர் காந்தியடிகள் அவர்களின் 155-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று (2.10.2023) சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என். ரவி அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. இ. பரந்தாமன், திரு. த. வேலு, திரு.ஏ.எம்.வி. பிரபாகரராஜா, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags
சென்னை அக் 02-