பஞ்சாலை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

தருமபுரி அக்-10

பஞ்சாலை தொழிலாளர்களுக்கு போனஸ் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி சிஐடியு தருமபுரி டிஸ்ட்ரிக் டெக்ஸ்டைல்ஸ் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாவட்ட பொதுச்செயலாளர் எம்.கண்ணதாசன் தலைமை வகித்தார்.

மாநில செயலாளர் சி.ந்கராசன் மாவட்ட துணைத்தலைவர் பி.ஆறுமுகம் சங்க மாவட்ட நிர்வாகிகள் கே.வேலு,ஏ.முருகன்,பி.ராஜி, எம்.எம்.பழனிச்சாமி,ஜேவேலு,ஆர்.ரவி,சி.கோவிந்தராஜி, வி.பழனிச்சாமி ,பி.கோபால், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2022-23 ஆண்டிற்குரிய போனஸ் 20 சதவீதம் ஊக்கத்தொகை 10 சதவீதம் வழங்கவேண்டும்.

மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கும் வருங்கால வைப்பு நிதிக்கும் பிடிக்கப்பட்ட தொகைகளை மாதமாதம் உரிய அலுவலகங்களில் செலுத்தி தொழிலாளர்களுக்குரிய
பலன்களை கிடைக்கச்செய்யவேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.512 க்கு ஊதியம் வழங்கவேண்டும்.

இருபது ஆண்டுகளாக மாநில அளவில் ஊதிய உயர்வு இல்லாத பஞ்சாலைத்தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யவேண்டும்.ஆகிய கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
Previous Post Next Post

نموذج الاتصال