தருமபுரி அக்-10,
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதம்,மனித உயிர்சேதத்தை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி வழங்கி, சம்பவம் நடந்து ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு தொகை கிடப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
வேளாண் பயிர் சேதத்திற்கு முழுமையான நஷ்ட ஈடு கால தாமதம் இன்றி வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் காயங்கள், பாதிப்புக்கு முழுமையான மருத்துவ உதவியும், வாழ்வாதாரஉதவியும் வழங்க வேண்டும். வனவிலங்கு நடமாட்டத்தை குறைக்க வேளாண்மை துறை, வனத்துறை பரிந்துரைத்துள்ள வாசனை திரவியங்கள் முழுமையான மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகள் பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் நிலையில் கேரள மாநிலத்தில் உள்ளது போல்காட்டுப்பன்றிகளை அழிப்பதற்கு உரிய ஆணையை தமிழக அரசு இயற்றி அமல்படுத்த வேண்டும்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வனத்தையொட்டி சாகுபடி செய்யும் விவசாயிகளை வனத்துறையினர் அப்புறப்படுத்த கெடுபிடி செய்வதை நிறுத்த வேண்டும்.
வனத்தை ஒட்டியுள்ள விவசாயிகள் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கொண்டு செல்லும்போது வனத்துறையினரின் கெடுபிடியை தவிர்த்து பழைய நடைமுறைப்படி மேய்ச்சல் பாஸ், பட்டிபாஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.குமார், தலைமை வகித்தார்.
மாநில பொருளாளர் கே.பி.பெருமாள்,மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன்,மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி ,மாவட்ட துணைத்தலைவர்கள் கே.என்.மல்லையன்,எஸ்.தீர்த்தகிரி,டி.ஆர்.சின்னசாமி,ஏ.நேரு,மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு,ஆ.ஜிவானந்தம்,பி.சக்கரைவேல்,ஆர்.சக்திவேல்,ஒன்றிய செயலாளர்கள் பி.முருகன்,மாது,எம்.முருகன் ,தங்கராஜ்,எம்.மகாராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் பேசுகையில் :
இந்தியாவில் யானைகளால் 2398 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில் 2020 -ம் ஆண்டில் 58 பேரும் 2021 - ம் ஆண்டில் 57 பேரும்,2022 - ம் ஆண்டில் 37 பேரும் இறந்துள்ளதாக மத்திய அரசின் வனத்துறை கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வனவிலங்குகளால் இலட்சக்கணக்கான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை. இழப்பீடுகளுக்கு சொற்பதொகையே வழங்கியுள்ளது.உரிய இழப்பீடு கிடைக்க வனத்துறையும் வருவாய்த்துறையும் கணக்கெடுப்பு நடத்தி நஷ்ட ஈடு வழங்கவேண்டும்.வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியே செல்லாமல் இருக்கு வனத்தில் உரிய உணவு தண்ணீர் கிடைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க தலைவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Tags
தர்மபுரி