அரூர் அக் 17-
கலைஞர் நூற்றாண்டு விழாவை
முன்னிட்டு தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நேற்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்க்கு பேச்சு, கட்டுரை போட்டி முத்தமிழறிஞர் கலைஞர்100 பேச்சும் எழுத்தும்! நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.சந்தர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பேச்சு,கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ். பதக்கம்,
பரிசுகள் வழங்கி தருமபுரி
மாநில மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர்.இரா.தமிழரசன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.சி.பிரபு, இரா.முனுசாமி, செ.அரவிந்த், சகா.சுர்ஜித், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மாரி.கருணாநிதி, கவி.முகிலன்,
அ.வேடியப்பன், கார்த்திகேயன், அண்ணாமலை, பிரேம்சந்தர், ஆகியோர் நடுவராக பணியாற்றினர்.
நிகழ்வில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி டி.சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.மணி, செ.கிருஷ்ணகுமார், எம்.ராஜகுமரி,
மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன்,
பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன், வே.செளந்தரராசு, எம்.ரத்தினவேல், சி.முத்துக்குமார். பி.எஸ்.சரவணன், பேரூர் கழக செயலாளர்கள் முல்லை ரவி,
பி.கே.முரளி, எம்.எ.வெங்கடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டி.சந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு முகாமுகமது அலி, மாவட்ட விவசாய அணி தலைவர் சி.தென்னரசு, ஆதிதிராவிடர் நலக்குழு கே.திருமால், இலக்கிய அணி ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ.கோடிஸ்வரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் சி.சண்முகம், எம்.ராஜ்கமல், ஆதம், மற்றும் 300 க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஆர்.புனிதா நன்றியுரை ஆற்றினார்.
Tags
அரசியல்