தர்மபுரியில் ஒன்றிய, நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல்

தர்மபுரி அக் 7-

தர்மபுரியில் நடந்த ஒன்றிய, நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர்.

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சிகளுக்கு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான நேர்காணல் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கி நேர்காணலை தொடங்கி வைத்தனர். கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர். சிவகுரு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆர். பி.முத்தமிழன், வக்கீல் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்திக்,  மகேஷ்குமார், ஹரி பிரசாத், கோடீஸ்வரன், நாசர், தங்கசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் எஸ். ஜோயல், இன்பா ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், பி.எஸ். சீனிவாசன், க. பிரபு, ஜி.பிரதீப்ராஜா, சி. ஆனந்தகுமார் ஆகியோர் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்புகளுக்கு விண்ணப்பத்தவர்களிடம் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினர். வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, கட்சி உறுப்பினர் அட்டை மற்றும் இளைஞர் அணி போன்ற கட்சியின் பல்வேறு அமைப்புகளில் ஏற்கனவே பணியாற்றிய விவரங்கள் குறித்த புகைப்படங்கள் ஆகியவற்றை சரி பார்த்து விண்ணப்பதாரர்களிடம் கட்சிப் பணி குறித்து ஒரு சில கேள்விகளை கேட்டனர்.
தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி, 2 பேரூராட்சி மற்றும் 8 ஒன்றியங்களுக்கு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் என மொத்தம் 62 பொறுப்புகளுக்கும், தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் 17 ஒன்றியங்கள் மற்றும் 8 பேரூராட்சிகளுக்கு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் என 134 பொறுப்புகளுக்கும் என மொத்தம் 196 அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர்.

Previous Post Next Post

نموذج الاتصال