அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தர்மபுரி அக் 07-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கி.சாந்தி அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப,, அவர்கள் இன்று (07.10.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
 மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பினை தொடர்ந்து இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி மாவட்டப் பிரிவு மூலமாக தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, தேவரசம்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, அதியமான் கோட்டம் வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் தொடங்கப்பட்டு, ஒட்டப்பட்டி வரை சென்று மீண்டும் அரசு கலைக்கல்லூரிக்கு வந்தடையுமாறும் இரண்டு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டது.
 ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2000/-மும், நான்கு முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப,, அவர்கள் வழங்கினார்கள். 
 இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன்,  தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.தே.சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா உட்பட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், வீரர், வீராங்கனைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال