தருமபுரி அக் 09-
அரசு புறம்போக்கு நிலம் அபகரிப்பு
அதிமுக நிர்வாகி மீது புகார்..
தருமபுரி மாவட்டம், பழைய இண்டூரை சேர்ந்த ஜெகதிஷ் என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர் திடிரென ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
இண்டூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் திருமதி. சாலா, இவரது கணவரும் அதி்முக நிர்வாகியுமான கன்னியப்பன் என்பவர் மீதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜெகதீஷ் புகாரிளித்திருக்கிறார்
இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட கொரங்கணத்து கோவில் கொட்டாய் பகுதியில், கன்னியப்பனுக்கு சொந்தமான நிலத்திற்கு செல்ல அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தினை அபகரித்து, எந்த ஒரு அரசு அதிகாரியின் அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக சாலை அமைத்து வருவதாகவும், சாலை அமைத்து வரும் இடத்திலிருந்து நொறம்பு மண் அள்ளி விற்பனை செய்து வருவதாகவும், இது தொடர்பாக இண்டூர் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் சம்மந்தபட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவீத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும், அதிகிாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருவதால் தன்னை லாரி ஏற்றி கொன்று விடுவதாக கன்னியப்பன் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், அரசு புறம்போக்கு நிலத்தை தனது சுய லாபத்திற்காக அபகரித்து வரும் அதிமுக நிர்வாகி கன்னியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனுவில் தெரிவித்துள்ளார், நடவடிக்கை எடுக்க காலம் கடத்தினால் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம், போரட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளார்
Tags
தர்மபுரி