பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை


சென்னை நவ 3-

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சென்னை தி.நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 30 கார்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.எ.வ. வேலுக்கு சொந்தமான கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Previous Post Next Post

نموذج الاتصال