தருமபுரி நவ 25-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி வின்சென்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஜி.சதீஸ் தலைமை வகித்தார்.மாவட்டதுணைத்தலைவர் ஆர்.ஆனந்தவிஜியரங்கன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலசெயற்குழு உறுப்பினர் ச.இளங்குமரன் வரவேற்றார். மாநிலதுணைத்தலைவர் இரா.ஆறுமுகம் துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் பா.சங்கர் வேலை அறிக்கை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் கு.சரவோத்தமன் வரவு செலவு கண்க்கை சமர்பித்தார். மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி கு.மரியம்ரெஜினா , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.வட்டாரவளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.விமலன், மாவட்ட துணைத்தலைவர கோபிநாத், மாவட்ட இணைசெயலாளர்கள் வினோத்குமார்,பெ.கிருஷ்ணமூர்த்தி வெ.தர்மன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக மு.முகமது இலியாஸ்,மாவட்ட செயலாளராக வெ.தர்மன்,மாவட்ட பொருளாளராக க.வினோத்குமார்,மாநில செயற்குழு உறுப்பினராக பா.சங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளராக சா.இளங்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்ட பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்-2 ஐ விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அதிகமாகவுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் அடிப்படை வசதிகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இண்டூர்,
அரூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தீர்த்தமலை மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து மாரண்டஅள்ளி என மூன்று புதிய ஊராட்சி ஒன்றியங்களை தோற்றுவிக்க வேண்டும்.
ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தை மலைப்பகுதியென வரையறுத்து அதற்கேற்ற மலைப்பகுதிப் படி வழங்க வேண்டும்.
ஒகேனக்கல், வத்தல்மலை மற்றும் தீர்த்தமலை ஆகிய சுற்றுலா தளப் பகுதிகளுக்கு தினந்தோறும் வெளியூர் மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இப்பகுதிக்கேற்ற புதிய திட்டங்களை அனுமதிக்கவேண்டும்.
தருமபுரி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த சிப்காட் பணியினை விரைவில் செயல்படுத்தவேண்டும்.
மாவட்ட ஊராட்சி, சத்துணவுப் பிரிவு மற்றும் மாவட்ட இயக்கக மேலாண்மை அலகு ஆகிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான பணியிடம் உருவாக்கவேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பதவிகளான இளநிலை உதவியாளர்
மற்றும் உதவியாளர் பதவிகளை இளநிலை ஊரக அலுவலர் மற்றும் முதுநிலை ஊரக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். தொலை தூரம் பயணம் செய்து பணிபுரிந்து வருவதால் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாறுதல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்கப்படும் நேர்வுகளில் அரசாணை (நிலை) எண்.127-னை பின்பற்ற வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags
தருமபுரி