நல்லம்பள்ளி டிசம்பர் 11-
தருமபுரி மாவட்டத்தில், சேலம் பெங்களூரு சாலையில் இருக்க கூடிய முக்கிய ஊர்களுள் நல்லம்பள்ளியும் ஒன்று, வாரந்தோறும் நடைபெறும் செவ்வாய் சந்தை பிரபலமானது, ஆடு, மாடு, கோழி, காய்கறிகள், மளிகை பொருட்கள், விவசாய உபகரணங்கள் என நல்லம்பள்ளி சந்தையில் கிடைப்பதால், சுற்றுவட்டார கிராம மக்கள் பெரிதும் நம்பியிருப்பது நல்லம்பள்ளி வாரச்சந்தையை, ஆடு, மாடு, கோழிகள் வாங்கவும் விற்கவும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், நல்லம்பள்ளி்க்கு வந்து செல்வோர் ஏராளாம்..
நல்லம்பள்ளியில் வட்டாச்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுலவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காகவும் மக்கள் வந்து செல்லக்கூடிய மிக முக்கிய ஊராக விளங்கும் நல்லம்பள்ளியில் தான் இரவு நேரங்களில் சாலையி்ன் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகள் எரிந்தே பல மாதங்கள் ஆகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது, இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க படவே இல்லை என தெரிவிக்கின்றனர் நல்லம்பள்ளி பகுதி பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள், விவசாயிகள்..
நல்லம்பள்ளியின் முக்கிய பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கி கிடப்பதால் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, எரியாத மின் விளக்குகளால் தினந்தோறும் இருளில் மூழ்கி கிடக்கும் நல்லம்பள்ளியில் மீண்டும் நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மின் விளக்கு எரிய சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
Tags
தருமபுரி