தருமபுரி டிசம்பர் 11-
இலக்கியம்பட்டி கிராமத்தில்1000 பேர் திருப்பதி சென்றனர் போலீசார் பாதுகாப்பு தருமபுரி இலக்கியம்பட்டி கிராமத்தில் இருந்து 1000 பேர் திருப்பதிக்கு பஸ், வேன், கார்களில் சென்றனர். இக்கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி இலக்கியம்பட்டி கிராமத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை விரதம் இருந்து திருப்பதி சென்று வழிபட்டு வருவது வழக்கம். அதுபோன்று நேற்று காலை கிராம மக்கள் ஊர் விளையாடி சாமி அழைப்பு நடந்தது. பின்னர் இலக்கியம்பட்டியைச் சேர்ந்த இலக்கியம்பட்டி, செந்தில் நகர், அண்ணா நகர், அழகாபுரி, ராஜாஜி நகர், கலெக்ட்ரேட் ஆகிய பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் 1000 பேர் நேற்று இரவு திருப்பதிக்கு புறப்பட்டனர். இலக்கியம்பட்டி பெருமாள் கோயில் இருந்து 8 பேருந்து, வேன், கார்களில் இலக்கியம்பட்டி கிராம மக்கள் திருப்பதி சென்றனர். இதனால் இலக்கியம்பட்டியில் பெரும்பாலன வீடுகளில் முதியோர்கள், கோயிலுக்கு செல்லமுடியாத பெண்கள் , சிறுவர்கள் மட்டுமே நேற்று இரவு இருந்தனர். இலக்கியம்பட்டி மக்கள் திருப்பதி சென்றுள்ளதால் தர்மபுரி நகர காவல் துறையினர் இரண்டு நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags
தருமபுரி