தருமபுரி பிப் 5-
தருமபுரி - யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனம் நடத்தும் மாவட்ட அளவிலான போட்டி நிறுவனத் தலைவர் நந்தினி அழகர் தலைமையில் நேற்று முன்தினம் பூபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கையெழுத்து, ஓவியம், நடனம், சிலம்பம், மனக்கணக்கு போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 700 மாணவ மாணவியர்களுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், விஷ்வ பாரதி பள்ளி தாளாளர் ரவி, விஜய் டிவி மூக்குத்தி முருகன், செவன்த்டே பள்ளி முதல்வர் புஷ்பராஜ், பி.எஸ். பி அசோக், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்தமிழன், தகடூர் குரல் செய்தி ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு கோப்பைகளை வழங்கினர்.
Tags
தருமபுரி