தருமபுரி மார்ச் 7-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஆரம்ப கால பயிற்சி மைய குழந்தைகளுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.03.2024) கொடியசைத்து துவக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறைபாடுடைய இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் குழந்தைகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி.தனப்பிரியா, சுற்றுலா அலுவலர் திரு.து.உமா சங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, உதவி சுற்றுலா அலுவலர் திரு.கதிரேசன், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி