பென்னாகரம் ஏப்.28-
பென்னாகரம் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏவும், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை தலைவருமான பி என் பி இன்ப சேகரன் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி,வாழை, மோர், வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்டவர்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன், ஏரியூர் ஒன்றிய செயலாளர் என்.செல்வராஜ், சமூக வலைதள அணி பொறுப்பாளர் மணிமேகலை பெருமாள், பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சிவகுமார், பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags
பென்னாகரம்