தருமபுரி மே 6-
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, காரிமங்கலத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பாப்பாரப்பட்டி, காரிமங்கலத்தில் கஸ்தூர்பா காந்தி பாலியா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி, தமிழ்நாடு அரசு - சமக்ர சிக்சா ஒருங்கிணைப்பில் சீட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2013-2024 ஆம் கல்வி ஆண்டில் 19 மாணவிகள் தங்கி படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாளது.இப்பள்ளிபடித்த 19 மாணவிகளும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இந்தப் பள்ளியில் பயின்ற 19 மாணவிகளும் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவிகள் என்பது குறிப்பிடதக்கது.
இப்பள்ளியில் படித்த தீபிகா 497,யுவத்ரா 494,நர்த்திகா 490, காவிய ஸ்ரீ 481, அனிதா 476, ஷாலினி 471, பூஜா 456 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித்தாளாளர் சரவணன், மேற்பார்வையாளர்கள் எல்ஜி சரவணன்,முல்லைவேந்தன் தலைமையாசிரியை சாந்தி மற்றும் மஞ்சுளா தேவி ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.
Tags
தருமபுரி