தருமபுரி மே 5-
தருமபுரி உழவர் சந்தை அருகில் இளைஞர் அணி சார்பில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் கோவிந்தன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.சுப்ரமணி Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழரசங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்த தண்ணீர் பந்தலில் முக்கனிகள், வெள்ளரி, இளநீர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி ரவி, சம்பந்தம், கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குமார், ரவி, ரஹீம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
தருமபுரி