தர்மபுரி மே 13-
தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 2002 2004 ஆம் கல்வி ஆண்டில் படித்த வணிகவியல் வகுப்பு மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வகுப்பாசிரியர் லதா தலைமை தாங்கினார் ஆசிரியர்கள் ரத்தினசேகர், உமாதேவி உள்ளிட்டால் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர் முன்னதாக மாணவர் முரளி, நதியா, மணிகண்டன், வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் அன்றைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் பெற்றோரை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள் தங்களது குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுடன் கூறினர் இதேபோல் மாணவர்கள் தங்களின் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்தனர் இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இறுதியாக நேதாஜி ரமேஷ் ஆகியோர் நன்றி உரை தெரிவித்தனர்.
Tags
தர்மபுரி