தருமபுரி திமுக செயற்குழு கூட்டம் மே-25 ல் நடைபெறும். மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அறிவிப்பு !
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைப்படி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 25.05.2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், தருமபுரியில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் சிறப்புறையாற்ற உள்ளார்.அது சமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என தனது அறிக்கையில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
Tags
தருமபுரி