தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் சட்ட பேரவை உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தர்மபுரி, ஜூன்.13- 

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 40
நாடாளுமன்றத் தொகுதிகளிலும்
வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சீர்மிகு வெற்றிக்கு கட்சியை வழி நடத்திச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல்-அமைச்சர் தலைமையில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெருந்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال