நீர் வரத்து வினாடிக்கு 2.5லட்சம் கன அடியாக அதிகரிப்பு
பென்னாகரம், ஆக.2-
கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனையெடுத்து இரண்டு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு அதிக அளவில்உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தர்மபுரி மாவட்ட ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு 1.41 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது.இந்த நீர் வைத்து மேலும் அதிகரித்து 8மணி நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக அதிகரித்தது. 2மணி நிலவரப்படி 1 லட்சத்து 90ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.இந்த தண்ணீர் மேலும் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி ஆக அதிகரித்து.இதன் காரணமாக மெயின் அருவி, சினிப்பால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஐந்தருவியில் பாறை தெரியாதபடி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிக்கவும் பரிசல் இயங்கவும் விதிக்கப்பட்ட தடையானது 16 நாளாக தொடர்ந்து நீடிக்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.மேலும் ஆலம்பாடி பகுதியை ஒட்டியுள்ள காவிரி ஆற்றங்காரையோர பகுதியில் கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் மற்றும் சொகுசு விடுதிகள் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.மேலும் அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையை தண்ணீர சூழ்ந்தது. இதன் காரணமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் போலீசார், வருவாய் துறையினர் , தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர் காவல் படையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags
ஒகேனக்கல்