திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ளது கீழ்ப்பாக்கம் . இந்த கிராமம் கீழ்க்கொடுங்காலூரில் இருந்து கீழ்நர்மா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான புதிய தனித்த கட்டிடத்தில் புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட உள்ளது.
இந்த கடை திறக்கப்பட்டால் ,கடை அருகிலே உள்ள தொடக்கப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறும் பொதுமக்கள், மது பிரியர்கள் வீசிச் செல்லும் கண்ணாடி போத்தல்களால் கால்நடைகளும்,விளைநிலங்களும் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகும் என அச்சம் தெரிவித்த விவசாயிகள் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாழ்குடை புருஷோத்தமன்,கொவளை டாஸ்மாக்கடை- கீழ்ப்பாக்கம் இடையே 500 மீட்டர் துாரம் உள்ளது. கீழ்நர்மா டாஸ்மாக்கடை- கீழ்ப்பாக்கம் இடையே 1000மீட்டர் தூரம் உள்ளது.
கீழ்ப்பாக்கம் எல்லையில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளோம் 20 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் கீழ்ப்பாக்கத்தை சுற்றியுள்ள விவசாயிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.
அப்போது, தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாய சங்கம்வாழ்குடை புருசோத்தமன்.தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் ரமேஷ்,ஒன்றிய பாமக செயலாளர் சிங்கப்பள்ளி முருகன், மருதாடு வீரராகவன் தெய்யார் செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்
Tags
#tassmac #collector