குமரி மாவட்டம் - தக்கலை :
பத்மநாபபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர் ரமேஸ்வரி என்பவர்
மேட்டுக்கடை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த மூன்றரை பவுன் தங்க நகையினை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அந்த நகை உரியவரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை பத்மநாபபுரம் நகர் மன்ற தலைவர் அருள் சோபன் பாராட்டி தூய்மை பணியாளருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.
Tags
#தூய்மைபணியாளர்