செய்யாறு அருகே மாங்காலில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்:
எம் எல் ஏ ஒ. ஜோதி பங்கேற்பு.
செய்யாறு ஜூலை. 24,
செய்யாறு அடுத்த மாங்கால் கிராமத்தில் திராவிட மாடல் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த மாங்கால் கிராமத்தில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஓ. ஜோதி தலைமை தாங்கி, நான்காண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் .சங்கர் வரவேற்றார் .மாவட்ட அயலக அணி துணைத்தலைவர் எம். கே. கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே சி கே .சீனிவாசன் ,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மதியழகன் ,விவசாய அணி துணை அமைப்பாளர் லோகநாதன், தொழிலாளர் அணி கருணாநிதி, விளையாட்டு அணி ஞானமுருகன் ,மாவட்ட பிரதிநிதிகள் தெய்வமணி, ராமலிங்கம் ,ஒன்றிய துணை செயலர்கள் ஏகாம்பரம் ,லோகநாதன், சத்யா பெருமாள், பொருளாளர் ரவி, வெண்பாக்கம் கார்த்திகேயன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் விஜயகுமார், சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் முருகானந்தம் ,ரத்தீஷ் ,மணிகண்டன், ஹரிகுமார் கோகுல், ஷர்மா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.கே ஸ்ரீராம், ஜெயபாரதி ஆகியோர் திமுகவின் நான்காண்டு சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேசினர்.