திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.
தென்னாங்கூர் சளுக்கை புலிவாய் உள்ளிட்ட கிராமங்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் தலைமையேற்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, அனைத்து துறை அதிகாரிகள் மக்களை அவர்கள் வாழும் இடங்களுக்கருகே சந்தித்து மனுக்களை பெற்று தீர்வளிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் 10,000 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3600 முகாம்கள் நடைபெற்று இருக்கின்றன வந்தவாசி தொகுதியில் மட்டும் இது 8-ஆவது முகாம். இந்த முகாமில் இதுவரை 277 மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லாத திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்தி திராவிட அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.மக்களை தேடி மருத்துவம்,இன்னுயிர் காப்போம் திட்டங்களை தொடர்ந்து இந்த அரசு இந்த திட்டம் நடைபெற்று வருகிறது.இந்த திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று தகுதிவாய்ந்த மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்..இத்தகைய முகாம்களை இந்த பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என பேசினார்.
இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், நகர திமுக செயலாளர் எ. தயாளன், வந்தவாசி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சி. ஆர். பெருமாள்,
, வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, மேலாளர் மாணிக்கவாசகர்,துணை வட்டார கல்வி அலுவலர் ராஜேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மருதாடு எம். சி சந்திரன்,ரமேஷ், சளுக்கை நாகராஜன், கீழ்நர்மா ரமேஷ் ,வேல்முருகன், இளைஞர் அணி விக்டர், , கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்ணன் , கணேஷ், , மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சமூர்த்தி, வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் குப்பன், ஊராட்சி செயலாளர்கள் திருநாவுக்கரசு செந்தில்குமார், மஞ்சுளா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.