முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
வேதாரண்யம் வட்டம், தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ஆர். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துப்பேட்டை முதல் திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு வந்த நிலையில் மேற்படி குப்பைகளில் உள்ள மாமிச இறைச்சிகளை உட்கொள்வதற்காக சாலையோர தெரு நாய்கள், பன்றிகள், பசுமாடுகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றி வருவதால் அதிக அளவிலான வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் மேற்படி குப்பைகளை அகற்ற வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு 28.07.2025 அன்று விசாரணைக்கு வந்தது, அப்போது முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு 3.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திடகழிவு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தும் பணி நடைபெறுகிறது என்றும் ஆனால் உள்ளூர் மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறினார் மேலும் பேரூராட்சி செயல் அலுவர் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை வழக்கறிஞர் அருண்குமார் ஆஜராகி வாதிட்டார்.