தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டைமாட்டு வண்டி பந்தயம்


தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் மார்ச் 1ல் பிறந்த நாள் காணும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சிறப்பாக நடைபெற்றன இவ்விழாவை திமுக மாநில கழக நிர்வாக குழு இணைச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் மான எம் ஜெயக்குமார் அவர்களின் முழு ஏற்பாட்டில் நடைபெற்றன.இந்த மாட்டு வண்டி பத்தயத்தை மாநில கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து பெரிய மாடு' 07, பூஞ்சிட்டு 12, தட்டான் சிட்டு 32, கரிச்சான் 06,தேன்சிட்டு 15, புள்ளி மான் 10 ஆகிய பிரிவுகளில் இருந்து 82 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு 1 முதல் நான்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கம்பம் வடக்கு நகர் கழக செயலாளர் எம் சி வீரபாண்டியன், தெற்கு நகர் கழக செயலாளர் சி .பால் பாண்டிராஜா, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இந்த மாட்டு வண்டி போட்டிய கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்த்து கண்டு கழித்தனர்.
Previous Post Next Post

نموذج الاتصال