Monday, November 24, 2025

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்


தருமபுரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகம் தளபதி அரங்கத்தில்

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்

மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி

வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்
 மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் MGS.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட துணை அமைப்பாளர்கள்
கே.ஆர்.சி.செல்வராஜ்,
பெ.ராஜகோபால், N.S.கலைச்செல்வன், ஆர்.பி.முத்தமிழன், கோ.அசோக்குமார்,
தீ.கோடீஸ்வரன், தங்கச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் மாண்புமிகு துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர்  உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் நவம்பர் 27 ல் ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மாணிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Labels:

Tuesday, November 11, 2025

ஆசியா விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லைக்கா நிறுவன சி.இ.ஓ. ஜி.கே.எம்.தமிழ்குமரன்


சென்னை 

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 நேற்று நிறைவடைந்தது. 

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை நடைபெற்ற நிகழ்வு ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் தலைமையில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தடகள வீரர்கள் கலந்துகொண்டனர். 

நேற்று நடைபெற்ற போட்டி நிறைவு நிகழ்வினில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு. எஸ்.ஜே. சூர்யா, நடிகர், இசையமைப்பாளர் திரு. விஜய் ஆண்டனி, நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் ஜி‌.கே.எம்.தமிழ்குமரன், எம்.செண்பகமூர்த்தி – தலைவர், டி. கிருஷ்ணசாமி வாண்டையார் - துணைத் தலைவர் , டி. டேவிட் பிரேம்நாத் – ஏற்பாட்டு செயலாளர் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Labels: