Wednesday, July 31, 2024

சி.ஐ.டி.யு. சங்கத்தின் 14 வது ஆண்டு பேரவை கூட்டம் காந்திபுரம் கேரளா சமாஜ அரங்கில் நடைபெற்றது


கோயம்புத்தூர் ஜூலை 31-

கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு.14 வது ஆண்டு பேரவை கூட்டத்தில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது..


கோவை மாவட்ட லாட்ஜ், ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சங்கத்தின் 14வது ஆண்டு பேரவை கூட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள கேரளா சமாஜ அரங்கில் நடைபெற்றது..

 சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
 
சிறு பேக்கரிகள் வைத்து தொழில் செய்து வருபவர்களிடம் முறையில்லா வரிகளை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
 
ஹோட்டல்களில் தொழிலாளர் துறை ஆய்வு நடத்தி தொழிலாளர்களுக்கு அனைத்து சட்டசலுகைகளும் அமல்படுத்த வேண்டும்,
 
கேட்டரிங் தொழில் செய்யும் சமையல் தொழிலாளர்களுக்கு நலவாரிய பணப்பலன்களை அதிகப்படுத்த,விழா நடத்துபவர்களிடம் இருந்து, மண்டப உரிமையாளர் மூலம் இரண்டு சதவீதம் செஸ்வரி வசூல் செய்து நல வாரியத்தில் இணைக்க வேண்டும்,
 
இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு உண்டான சம்பள வரம்பு ரூபாய் 21 ஆயிரம் என்பதை வாபஸ் பெற்று அனைத்து தொழிலாளர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்,
 
ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பெற்று வரும் இபிஎப் பென்ஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

கூட்டத்தில் ஆறுமுகம்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சங்க நிர்வாகிகள் செல்வகுமார், செந்தாமரை,
சந்தோஷ், தங்கராஜ் ,ராஜன், ராமச்சந்திரன், முஜீப்ரகுமான், ரத்தினக்குமார், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Labels:

Thursday, July 25, 2024

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அமைச்சரிடம் மனு


தருமபுரி ஜூலை 25-

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு ஆ .மணி அவர்கள்  இன்று ஒன்றிய அரசின் மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர்  திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை 
டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜோதி அள்ளிசுற்று வட்டார பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருவது குறித்தும்
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்மனூரில் செயல்பட்டு வந்த ரயில் நிலையம் மூடப்பட்டதை மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை மனுவினை வழங்கினார்.

Labels:

Thursday, July 11, 2024

தருமபுரி அரசு விழாவில், 2637 பயனாளிகளுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

தருமபுரி ஜூலை 12-௯

தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 2637 பயனாளிகளுக்கு ரூ. 56.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வங்கி கடன் இணைப்புக்கான காசோலைகள் மற்றும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு காப்பீட்டிற்கான அட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு. M. K. Stalin அவர்கள் வழங்கினார்கள்.

Labels: