Thursday, February 29, 2024

கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டத்தின் கீழ் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் - விளையாட்டு வீரர், வீராங்னைகளிடம் இன்று வழங்கினார்

கோயம்புத்தூர் பிப் 29-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 12,620 கிராம பஞ்சாயத்துகளுக்கும், ரூ.86 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கிடும் கலைஞர் Sports kits திட்டத்தை மதுரையில் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளுக்கும்  கலைஞர் Sports kits திட்டத்தின் கீழ் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் - விளையாட்டு வீரர், வீராங்னைகளிடம் இன்று வழங்கி மகிழ்ந்தார்.  

கூட்டுமுயற்சி - ஒற்றுமையுணர்வு இவைகளை வெளிப்படுத்தும்  விளையாட்டுகள் கிராமங்கள் தோறும் வலுப்பெற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு நட்சத்திரங்கள் உருவாக வேண்டுமென வீரர்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உரையாற்றினார்.

Labels:

காவேரிப்பட்டணம் - நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட கோபுர மின் விளக்கு திறப்பு விழா

கிருஷ்ணகிரி பிப் 29-

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெரு ஐந்தாவது வார்டில் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கோபுர மின்விளக்கு சிறப்புள்ள நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் கலந்துகொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் 

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் மாலனி மாதையன்,
நகர திமுக செயலாளர் ஜே.எஸ்.பாபு,தொழிலதிபர் 
கே.வி.எஸ்.சீனிவாசன், அமைப்பு சாரஒட்டுனர் அணி துணை தலைவர் செந்தில்குமார், நகர காங்கிரஸ் தலைவர் தேவநாராயணன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணன், செல்வராஜ், சேகர், சேசுதுரை, ஆடிட்டர் வடிவேலு, அசோகன், கோவிந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஐந்தாவது வார்டுவட்டச் செயலாளர் சிவபிரகாசம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Labels:

Wednesday, February 28, 2024

அரசு கலைக் கல்லூரியில் அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு


கோயம்புத்தூர் பிப் 28-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று கோவையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார்.

மாணவர்கள் தங்குமிடம் - குளியலறை - உணவுக்கூடம் - அரிசி,எண்ணெய், மளிகை பொருட்கள் வைக்கக்கூடிய சேமிப்பு அறை உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு, அப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார்.

அங்கு தங்கி பயிலும் மாணவர்களிடம் விடுதியில் மேற்கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார் .

Labels:

தருமபுரி நகர கூட்டுறவு வங்கியில் நகை பெட்டகம் முன்பு நடைபெற்ற ரகசிய பூஜை


தருமபுரி பிப் 28-

தருமபுரி கடை வீதி பகுதியிலுள்ள, தருமபுரி கூட்டுறவு நகர வங்கியில் தான் இந்த பூஜை நடத்தப்பட்டிருக்கிறது, இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

விடுமுறை தினமான நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பூஜை 8 .30 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது,. வாடிக்கையாளர்களின், பணம், நகைகள்,மதிப்பு மிகுந்த ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கக்கூடிய லாக்கர் முன்பு சாமி படம் ஒன்றை வைத்து அதன் இருபுறமும் குத்து விளக்கேற்றி வைத்து, நெருப்பு மூட்டி, புரோகிதர் ஒருவர் மூலம் மந்திரங்கள் சொல்லி அக்னி யாக பூஜையானது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்து முடிந்திருப்பது தான் தருமபுரியில் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது

வங்கியின் துணை பதிவளராக பணியாற்றி வரும் ராஜா என்பவர் அவரது மனைவியுடன் வங்கிக்குள் லாக்கர் முன்பு அமர்ந்தபடி பூஜையை நடத்தியதாகவும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி பகுதியிலுள்ள வங்கிக்குள் நடைபெற்ற இந்த பூஜை விவகாரம் வெளியே தெரிந்துவிடாதபடி, வங்கியின் ஜன்னல், கதவுகளை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு பூஜையை நடத்தியிருக்கின்றனர், வங்கியில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணியை இழந்த முன்னாள் ஊழியர்களும், தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலரும் இந்த பூஜையில் பங்கேற்றதாக கூறப்படுகிறது

வங்கிக்குள், அதுவும் லாக்கர் முன்பு நெருப்பு மூட்டி எதற்காக இந்த அக்னி பூஜை நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளது..

கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு வங்கி கணணி மயமாக்கும் சமயத்தில் அப்போது, பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று அது கண்டுபுடிக்கப்பட்டது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலையில் முறைகேடு சர்ச்சைக்குள் சிக்கிய அதே வங்கிக்குள் ஜோதிடர் ஒருவர் கூறிய ஆலோசனையி்ன் பேரில் இந்த அக்னி யாக பூஜை நடைபெற்றதாகவும், வங்கிக்குள் நடைபெற்று வரும் தொடர் முறைகேடுகள், மோசடிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காகவும், துணை பதிவாளருக்கு நேரம் சரியில்லை என கூறப்பட்டதாலும் வங்கியிலுள்ளதை போல தங்களுக்கும் கட்டு கட்டாக பணம், தங்க நகைகள், செல்வம் வந்து சேரவும் இந்த பூஜை நடைபெற்றதாகவும், பேசப்பட்டு வருவது தருமபுரியில் பெரும் பரப்பை கிளப்பியிருக்கிறது.

மக்களி்ன் பொது சொத்தான வங்கிக்குள் தங்களது சொந்த விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள வங்கியை தவறாக பயன்படுத்தியும்,ஆபத்தை அறிந்தும் நெருப்பு மூட்டி பூஜை நடத்தபட்டிருக்கிறது, நெருப்பால் எதாவது ஒரு வகையில் எதிர்பாரதவிதமாக அசம்பாவிதங்கள் நடைபெற்றிருந்தால் மொத்த வங்கியும் தீ க்கு இரையாகியிருக்கும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது, 

வங்கியை தங்களின் சொந்த விருப்பத்திற்காக பயன்படுத்தியுள்ள சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது, வங்கியிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பூஜையில் ஈடுபட்டது யார் யார் என கண்டறிந்து உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Labels:

நல்லம்பள்ளி - திமுக அரசின் சாதனையை விளக்க பிரச்சார வாகன மூலம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது

நல்லம்பள்ளி பிப் 28-

திமுக அரசின் சாதனைகளை விளக்க  இல்லம் தோறும் "ஸ்டாலினின் குரல்" பிரச்சார வாகனத்துடன்  நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு A.S.சண்முகம்  அவர்கள் தலைமையில் திமுக அரசின் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு சாதனைகளை விளக்கும் மற்றும் 2024 தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை சிறப்பு அம்சங்களை  நார்த்தம்பட்டி ஊராட்சி,  இலளிகம் ஊராட்சி, மிட்டாரெட்டி அள்ளி ஊராட்சி, மிட்டா தின்னள்ளி ஊராட்சி, மாதேமங்கலம் ஊராட்சி, ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் LD. பழனிச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சின்ன பெருமாள், ரங்கநாதன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் NS. கலைச்செல்வன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் R. சரவணகுமார், NV. துரை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், மோகன் மாவட்ட பிரதிநிதி, செந்தில் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர், முரளி, சண்முகம், மற்றும் திமுக  நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Labels:

Saturday, February 24, 2024

மாணவர்கள் இலக்கை அடைய தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டு தொடர் முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டி பிப் 24:-

போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் செல்பேசியை மாணவர்கள் பயனுள்ள தொழில் நுட்பமாக மாற்ற வேண்டும் என்று இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இராம. செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தகடூர் புத்தக பேரவை சார்பில் போட்டித் தேர்வு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் போட்டிகள் நிறைந்த உலகில் போட்டு தேர்வுகள் என்ற தலைப்பில் இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் இராம. செல்வம் சிறப்புரையாற்றினார்.

அவர் மாணவர்கள் மத்தியில் பேசும் போது "மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது மிக அவசியமாகிறது. தங்களுக்குள் உள்ள திறமைகளை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். இன்றைய காலகட்டத்தில் செல்பேசி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. செல்பேசி தொழில்நுட்பத்தை மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள தங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சி அடைந்தவர்களை பின்னோக்கி பார்த்தால் அவர்களின் கடின உழைப்பே வளர்ச்சிக்கு காரணமாக அறிய முடியும். உழைப்பு, தன்னம்பிக்கை, தைரியத்துடன் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும். 

தங்களது இலக்கினை அடைய மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை அகற்றிவிட்டு தொடர் முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற வேண்டும். 

தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல. முயற்சியே செய்யாதவர்கள் தான் தோல்வி அடைந்தவர்கள். இதை மனதில் வைத்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டும்.

மாணவப் பருவம் ஆற்றல் மிக்க பருவம், நேரத்தை வீணடிக்காமல் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டும். என்றார் இராம.செல்வம்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்தி டாக்டர் செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் இரா. அருண், தமிழ்நாடு சிறுபான்மையினர் துறை மாநில கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, பேராசிரியர் மனோகரன், கல்லூரி முதல்வர் அன்பரசி, தகடூர் புத்தகப் பேரவையின் மருத்துவர் செந்தில், சிசுபாலன், தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Labels:

தர்மபுரியில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காரிமங்கலம் பிப் 24:-

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அவரசர செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12.30 க்கு காரிமங்கலம் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில்மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன். Ex.MLA, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள்

மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சார கூட்டங்கள்
BLA-2 நிர்வாகிகள் வீடுதோரும் சென்று கழக அரசின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

திமுக தலைவர் அவர்களின் 
71 வது பிறந்தநாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

திமுக அரசின் சாதனைகளை விளக்கி விளம்பர பிரச்சார வாகனம் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி டி.சுப்பிரமணி,
மாவட்ட துணை செயலாளர்கள்
ஆ.மணி, சி.கிருஷ்ணகுமார்,
தலைமை செயற்குழு உறுப்பினர்
BCR.மனோகரன், மாவட்ட பொருளாளர்
MM.முருகன், ஒன்றிய கழக செயலாளர்
எல்.கிருஷ்ணன், MVT.கோபால்,
T. அன்பழகன், முனியப்பன், பி.கே.அன்பழகன், ஆர்.வேடம்மாள்,
வே.செளந்தரராசு சி.முத்துகுமார்,
பி.எஸ்.சரவணன், சிவபிரகாசம், சக்திவேல், ETT.செங்கண்ணன்,
ரத்தினவேல், பேரூர் கழக செயலாளர்கள்
சீனிவாசன், பி.கே.முரளி, MA.வெங்கடேசன், முல்லைரவி,
ஜெயச்சந்திரன், மோகன், கெளதமன், மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாள்
குதமிழழகன், கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Labels:

Sunday, February 18, 2024

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்


சென்னை பிப் 18-

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்று உள்ளது.பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 
2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.தங்களது மதுக்கூட வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Labels:

ஒகேனக்கல் தேசநாதஸ்வரன் ராஜகோபுர பணி அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம்


ஒகேனக்கல் பிப் 18-

ஒகேனக்கல் தேசநாதஸ்வரன் ராஜகோபுர பணி அடிக்கல் நாட்டல் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த நிலையில் ஒகேனக்கல் தேசநாதஸ்வரர் ஆலய ராஜ கோபுர பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்டிட பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் உள்ள தேச நாதேஸ்வரர் கோயிலில் ரூ.1.22 புதிய ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டும் பணிக்கான பூமி பூஜையினை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வே.சபர்மதி, குத்துவிளக்கேற்றி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதில் கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம், தக்கார் பா.சங்கர், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், கோயில் அர்ச்சகர் ராமச்சந்திரன், உதவியாளர் மாரிமுத்து, மற்றும் திருக்கோயில் பணியாளர்கள்  பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Labels:

Friday, February 16, 2024

மேச்சேரி சீராமனூர் ஶ்ரீ மஹா மாதேஸ்வரன் கோவில் அருகில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு திறக்கப்பட்டது

மேட்டூர் பிப் 16-

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்றத் தொகுதி - மேச்சேரி பேரூராட்சி, வார்டு எண் : 8, சீராமனூர் ஶ்ரீ மஹா மாதேஸ்வரன் கோவில் அருகில் தனது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு (MPLADS) நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ். செந்தில்குமார் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மேச்சேரி ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.சீனிவாசபெருமாள், ஒன்றிய பொருளாளர் காந்தி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் செல்வக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ரேவதி வேலு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மஞ்சுளா செங்கோடன், சதீஸ்குமார், விமல், செயல் அலுவலர், உதவி செயற் பொறியாளர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்...

Labels:

"மக்களுடன் முதல்வர்" திட்டப் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் இன்று 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தருமபுரி பிப் 16-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக "மக்களுடன் முதல்வர்" திட்டப்  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சியின் வாயிலாக "மக்களுடன் முதல்வர்" திட்டப்  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் இன்று 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சென்று சேர நடைமுறைப்படுத்தப்பட்ட "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ்  பெறப்பட்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்றைய தினம் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் தருமபுரி நாகரட்சியின் சார்பில் 161 பயனாளிகளுக்கு தெருவோர வியாபாரிகள் கடன் உதவிகள், சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட ரூ.20,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் பேரூராட்சிகளின் துறையின் சார்பில் 67 பயனாளிகளுக்கு சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி நிர்ணயம் செய்தல், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும், மின்சாரத்துறையின் சார்பில் 145 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வருவாய் துறையின் சார்பில் 166 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிசான்றிதழ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும்,
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு சலவைப்பெட்டிகள், தையல் இயந்திரம் என ரூ.1.41 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தொழில் தொடங்க கடன் உதவிகளும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு 28,800/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு 68,160/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 43 பயனாளிகளுக்கு காதொலிகருவிகள், செயற்கைக்கால், வங்கி கடன் உதவிகள், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட ரூ.6.22 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தனிநபர் கோரிக்கை மனு 2878, பல்வகை மனு 11042 ஆக மொத்தம் 13920 மனுக்களில் ஏற்பளிக்கப்பட்ட 5264 மனுக்களில் சுமார் 827 பயனாளிகளுக்கு ரூ.32.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் திரு.டி.தழிழ்செல்வன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி பவித்ரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.சாகுல் அமீத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி,  தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஸ்வரன், நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.அ.நித்யா, தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் தருமதி.கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Labels:

அரூர் வானியாறு அனையில் இருந்து பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து வைத்தனர்

அரூர்.பிப்.16

அரூர் வானியாறு அனையில் இருந்து
பாசனத்துக்காக இன்று 16.02.2024
காலை 10.00 மணிக்கு தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன் அவர்கள்
அரூர் கோட்டாட்சியர் வில்சன், அவர்கள் 
தண்ணீர் திறந்துவைத்தனர்

நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்
சி.முத்துகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.சித்தார்த்தன்மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் ஆ.சத்தியமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன், பேரூர் கழக செயலாளர் மா.ஜெயசந்திரன்,
ஒன்றிய குழு தலைவர் உன்னாமலை குணசேகரன், தலைமை கழக பேச்சாளர்
இராசு. தமிழ்ச்செல்வன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர்
Dr.பழனிசாமி, மாவட்ட துணை அமைப்பாளர் கெளதமன், மலர்மாரப்பன்,
துரைபாண்டி, தேன்மொழி ஜெயராஜ்,
மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Labels:

அரூர் ஜம்மணஅள்ளி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா

அரூர் பிப் 16-

அரூர் ஊராட்சி ஒன்றியம்
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம். தர்மபுரி மாவட்டம். ஜம்மணஅள்ளி. கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில். ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள். அவர்களின் பெற்றோர்கள். ஊர் பொதுமக்கள். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். அனைவரும் கலந்து கொண்டனர். 

பள்ளியின் ஆண்டரிக்கையை. பள்ளியின் ஆசிரியர் திரு தமிழ்மணி அவர்கள் வாசித்தார். அதனை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு அன்பரசன் அவர்கள் வழிமொழிந்தார். விழாவின் நிறைவில் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு அறிவழகன் அவர்கள் நன்றி கூறினார்.

Labels:

Thursday, February 15, 2024

நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.


சென்னை பிப் 15-

நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ1 கோடி நிதி ஒதுக்கீடு 

சென்னை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என்பதற்காக நடிகர் சங்க நிர்வாகிகள் தொடர் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில், நடிகர் சங்க கட்டடப் பணிகளை தொடங்குவதற்கான வைப்பு நிதிக்காக, நமது சொந்த நிதியிலிருந்து, ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்க நிர்வாகிகளிடம் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாட்டு திரைக் கலைஞர்களின் பல நாள் ஏக்கமாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டடப்பணியை விரைந்து நிறைவு செய்ய வாழ்த்தினோம். மேலும், அவர்களின் கோரிக்கைப்படி இப்பணிக்கு கழக அரசு துணை நிற்குமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கூறினார்.

Labels:

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும் பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பிப் 15-

சென்னை எல்லைக்கு உட்பட்ட சாலைகளில், விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும், ஒரு வழிப்பாதை, புதிய வேக வரம்புகள் போன்ற பல்வேறு முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுமக்களுக்கு போக்குவரத்தை பற்றி அறிவூட்டும் வகையில், சென்னை காவல் துறையுடன் ஒருங்கிணைந்து, திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய, 'நீங்க ரோடு ராஜாவா' என்ற விழிப்புணர்வு குறும்படம் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டிகள் தவறான வழிகளிலிருந்து வாகனத்தை இயக்குவது குறித்தும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையிலும் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கான நுண்ணறிவுகளை வழங்கும் மற்றொரு வீடியோவும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேசியதாவது:

விழிப்புணர்வு குறும்படத்திற்கு நடிகர்கள் யோகிபாபு, சாந்தனு, அர்ச்சனா மட்டுமின்றி தொழில்நுட்ப கலைஞர்களும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்துள்ளனர். சென்னையில், 2021ம் ஆண்டில் விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை 573 ஆகவும், 2023ல் 204 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய போது, 279 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ல், இந்த உயிரிழப்புகள் 196 ஆக குறைந்துள்ளது. இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் 38 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், கடந்த ஆண்டு 60,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 100 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இணை கமிஷனர் மகேஷ் குமார், துணை கமிஷனர்கள் பாஸ்கரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் பேசியதாவது:

விழிப்புணர்வு குறும்படத்திற்கு நடிகர்கள் யோகிபாபு, சாந்தனு, அர்ச்சனா மட்டுமின்றி தொழில்நுட்ப கலைஞர்களும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்துள்ளனர். சென்னையில், 2021ம் ஆண்டில் விபத்துகளில் இறப்பு எண்ணிக்கை 573 ஆகவும், 2023ல் 204 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய போது, 279 பேர் உயிரிழந்துள்ளனர். 2023ல், இந்த உயிரிழப்புகள் 196 ஆக குறைந்துள்ளது. இந்த விபத்துகளில் உயிரிழப்புகள் 38 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

தவறான பாதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், கடந்த ஆண்டு 60,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 100 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இணை கமிஷனர் மகேஷ் குமார், துணை கமிஷனர்கள் பாஸ்கரன், குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Labels:

திமுக இளைஞரணி சார்ந்த மாவட்ட - மாநில - மாநகர இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று சென்னை நடைபெற்றது


சென்னை பிப் 14-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி   DMK Youth Wing -ன் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்தாண்டு நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள். 

இந்நிலையில் பொறுப்பேற்றது முதல் அவர்கள் மேற்கொண்ட கழகப் பணிகளை ஆய்வு செய்கின்ற விதமாக இளைஞர் அணியின் மண்டலம் 1-க்கு உட்பட்ட மாவட்ட - மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று நேரில் சந்தித்தார்கள்.

'நீட் விலக்கு நம் இலக்கு', இல்லந்தோறும் இளைஞர் அணி - மாநில மாநாடு - மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றை தனித்தனியாகக் கேட்டறிந்து. மினிட் புக் - புகைப்படங்கள் - பத்திரிகை செய்திகள் உள்ளிட்டவற்றை காண்பித்து, தங்களின் பணிகளை அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். 

அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற லட்சியத்தை எட்டுகிற வகையில் அயராது களப்பணியாற்ற நிர்வாகிகளை அறிவுறுத்தினார்கள் 

Labels:

Tuesday, February 13, 2024

சபரிமலை ஐயப்பன் கோவில் 4 நாட்கள் திறக்கப்படும்

திருவனந்தபுரம் பிப் 13-

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். 

பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

Labels:

அண்ணா அறிவாலயம் துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவிற்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

சென்னை பிப் 13-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு

தி.மு.கழகத்தின் முதல் தலைமையகமான ராயபுரம் அறிவகத்தில் 1970-ஆம் பணிக்குச் சேர்ந்து, அதன் பின்னர் அன்பகம், அரசினர் தோட்ட சட்டமன்ற அலுவலகம், அண்ணா அறிவாலயம் என தலைமைக் கழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த தலைமைக் கழக துணை மேலாளர் அண்ணன் அறிவாலயம் ஜெயக்குமார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றோம்.

சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள அவரது இல்லம் சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்ததோடு

முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழகத்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்கள், நம் தலைவர்களின் எண்ணத்தை செயலாக்குவதில் வல்லவராக திகழ்ந்தார்கள். 

நம் தலைமைக் கழக அலுவல் பணிகளில் பல ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த அண்ணன் ஜெயக்குமார் அவர்களின் மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி கழகத்திற்கும் பேரிழப்பாகும். அவரது குடும்பத்திற்கு கழகம் என்றும் துணை நிற்கும் என்று  மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது x தளத்தில் பதிவிட்டு இருந்தார் .

Labels:

Sunday, February 11, 2024

திருப்பூரில் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதிய குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேச்சு

திருப்பூர் பிப் 11-

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் இன்று புதிய குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. 

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகள் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், ரூ.53.48 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு கூடம் மற்றும் ரூ.12.87 மதிப்பில் புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் , 15-வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.72.92 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென 10 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் ஆகியவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 5ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1362 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்திற்கு உண்டு. அது திருப்பூரை மனதில் வைத்துதான் சொல்லப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு பெரியார் மண்ணான ஈரோட்டில் ரூ.310 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தேன். இன்று விழாவில் பங்கேற்க வரும் போது மகளிர் சுய உதவி குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். எனது இல்லத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரித்த பொருட்கள்தான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கூட மகளிர் சுய உதவிக்குழு பொருட்களைத்தான் பயன்படுத்துகிறார்.சட்டமன்றத்தில் பேசும் போது உறுப்பினர்கள் அனைவரும் மகளிர் சுய உதவி குழு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றார். ஏனென்றால் அந்த அளவுக்கு பொருட்கள் தரமாக இருப்பதுதான். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்-முறையாக திருப்பூர் வந்துள்ளேன். திருப்பூர் நிகழ்ச்சி முடிந்ததும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்.தமிழகத்தின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெரியார் அண்ணா கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக முதல்வர் உள்ளார். மாநில நிதி சுமையை மீறி திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் ஜி.எஸ்.டி என்பது என்னவென்று தெரியாமல் படித்து கொண்டிருந்த போது அதன் பாதகங்களை மக்களிடம் கொண்டு சென்றவர்கள் திருப்பூர் மக்கள் தான்.நாம் மத்திய அரசுக்கு 5 ஆண்டுகளில் கொடுத்த வருவாய் ரூ. 6 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி கொடுத்தது ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி மட்டுமே. 1 ரூபாய்க்கு 23 பைசா மட்டுமே தருகின்றனர்.அமைச்சர் கே.என் நேரு கழகத்திற்கு மட்டும் முதன்மை செயலாளர் அல்ல. மக்களின் களப்பணியில் முதன்மையானவர். திராவிட இயக்கம் , திராவிட மாடல் அரசு அன்றைய தேவையை சிந்திப்பது மட்டுமல்ல. எதிர்கால தேவையை சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 2024க்கு மட்டுமல்ல 2040 ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திருப்பூருக்கு குடிநீர் உள்ளிட்ட திட்டத்தை வழங்கியுள்ளோம்.தொழில்துறையினர் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநாட்டு அரங்கம் மிகப்பெரிய அளவில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் திருப்பூர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.மகளிருக்கு உதவித்தொகை , அரசு பேருந்தில் இலவச பயணம் , கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை , இல்லம் தேடி கல்வி என அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர். தெலுங்கானாவில் இருந்து வந்து நம் திட்டங்களை பார்த்து செல்கின்றனர். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையிலும் நாம் சாதித்து வருகிறோம். இதற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகிறது.இந்த அரசு மக்களுக்கான திட்டங்களை தருகிறது. பாராட்டும் நன்மதிப்பும் எட்டு திக்குகளில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நீங்கள் பயனாளிகள் அல்ல. இந்த அரசின் பங்கேற்பாளர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் முதல்வரின் முகமாக இங்கு இருக்கிறீர்கள். அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Labels:

Monday, February 5, 2024

ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உரை


ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே நேற்று (4-02-2024) கலந்துரையாடிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்; செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

Labels:

காவல்துறை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் விபத்துகள், குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சென்னை பிப் 5-


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் திருடு போன பல ரூபாய் கோடி மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த 2023ஆம் ஆண்டு சென்னையில் ரூ.19.21 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், 50 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.3.6 கோடி ரொக்கப் பணம், 798 கைப்பேசிக் கருவிகள், 411 இருசக்கர வாகனங்கள், 28 ஆட்டோக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

அவை மீட்கப்பட்டு பொதுமக்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

அதேபோல் கடந்த ஆண்டு மத்திய குற்றப்பிரிவு விசாரித்த 811 வழக்குகளில் தொடர்புடைய ரூ.265 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 450 குற்றவாளிகள் உள்பட 1,109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஆணையர் கூறினார்.

“கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைதான 714 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“மேலும், 70 ரவுடிகள், 78 போதைப் பொருள் குற்றவாளிகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கைது செய்யப்பட்ட 74 குற்றவாளிகள் உட்பட 2,748 குற்றவாளிகளுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது,” என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 499 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும் அவற்றில் சிக்கி 504 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் காவல் ஆணையர் குறிப்பிட்டார்.

மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பாக 21 வழக்குகளும் பெண்களைக் கடத்துவது தொடர்பாக 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

310 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ள போதும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சென்னையில் முந்தைய ஆண்டைவிட குற்றச் செயல்களும் விபத்துகளும் குறைந்துள்ளன என்றார் காவல் ஆணையர்.

Labels:

யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனம் நடத்தும் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்றது.

தருமபுரி பிப் 5-

தருமபுரி - யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ்  நிறுவனம்  நடத்தும் மாவட்ட அளவிலான போட்டி  நிறுவனத் தலைவர் நந்தினி அழகர் தலைமையில் நேற்று முன்தினம் பூபதி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. 

கையெழுத்து, ஓவியம், நடனம், சிலம்பம், மனக்கணக்கு போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 700  மாணவ மாணவியர்களுக்கு  தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், விஷ்வ பாரதி பள்ளி தாளாளர் ரவி, விஜய் டிவி  மூக்குத்தி முருகன், செவன்த்டே பள்ளி முதல்வர் புஷ்பராஜ்,   பி.எஸ். பி அசோக், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்தமிழன், தகடூர் குரல் செய்தி ஆசிரியர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு கோப்பைகளை வழங்கினர்.

Labels: