Saturday, August 30, 2025

சேலம் அன்னதானப்பட்டியில் தாம்' என்ற பெயரில் புதிதாக மருத்துவமனை திறப்பு விழா


சேலம், ஆக.28 

சேலம் அன்னதானப்பட்டி வில் தாம்' என்ற பெயரில் புதிதாக மருத்துவமளை அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடை பெற்றது. இதற்கு மருத்துவ மனை நிறுவனர் ரமேஷ் முருகேசன் தலைமை தாங்கினார்.இணை நிறுவனவர்கள் பிரபு செங்குட்டுவேல், நட ராஜன் சுப்பிரமணியம் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். சிறப்பு அழைப்பாள ராக அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய மருந்துவமனையை திறந்து வைத்தார்.

Labels:

Monday, August 25, 2025

தர்மபுரி குமாரசாமி பேட்டையில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா


தர்மபுரி, ஆக.26-

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி 119-வது பிறந்தநாள் விழா குமாரசாமிப்பேட்டை 
சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி மடத் தெருவில் நடைபெற்றது. 

விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் ஆர்.மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கே. ஸ்ரீதர் வரவேற்றார். பொருளாளர் மணிவண்ணன்,  ஊர் பிரமுகர்கள் குமார், வேலாயுதம், மோகன், சுந்தரம், சதாசிவம், டி.ஜி.மணி, அன்பு, மணி, இளங்கோவன், செல்வமணி, நிர்வாகிகள் கணேஷ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர்  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் சந்தோஷ் சிவா அன்னதானம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி, மோகன், மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
----

ஜனவரி மாதம் திருச்சி மாநகரில் பார்க்கவ குலத்தின் என் மக்கள் என் பெருமை மாநாடு



சேலம் ஆக.25-

அகில பாரத பார்க்கவகுல சங்க நிறுவன தலைவர் திருமலை ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
115 ஆண்டு கால தமிழ்நாடு பார்க்கவகுல சங்கம், 15 ஆண்டுகளாக தீவிர சமுதாய பணியாற்றி வரும் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம், பார்க்கவ குலத்தின் மற்ற சங்கங்களையும் அழைத்து பேசி அவர்களின் தனித்தன்மை கெடாமல் பார்க்கவ குல கூட்டமைப்பு உருவாக்க அனைத்து அமைப்பினர், சங்கத்தினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பார்க்கவ அனைத்து சமுதாய தலைவர்களின் ஒத்துழைப்புடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் திருச்சியில் ஒரு மாநாடு நடத்த அகில பாரத பார்க்கவ குல சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இதற்கு அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பார்க்கவ குலத்தின் வளர்ச்சி, எழுச்சி, பாதுகாப்புக்கும் முக்கியமான தேர்தல் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும். மேலும் திருச்சியில் அக்டோபர் முதல் வாரத்தில் நிர்வாகிகள் கூட்டம், சங்கத்தின் கொள்கை முழக்கம், சங்கத்தின் கொள்கை பாடல் வெளியீடு, உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், இருபது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
 
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பார்க்கவகுல சங்க புரவலர் வேந்தர் வெங்கடாச்சல உடையார், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, இந்திய ஜனநாய கட்சி நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர், இளைய வேந்தர் ரவி பச்சமுத்து, லட்சிய.தி.மு.க தலைவரும் பன்முக கலைஞருமான விஜய டி.ராஜேந்தர் உள்பட பல்வேறு கட்சிகளில் பயணிக்கும் முக்கிய தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு திருச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, August 23, 2025

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள்

தருமபுரி -

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் (Forklift Operator) பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியானது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர்களின் முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும். குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு ஒரு மாதம் ஆகும். மேலும் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்கள்.

Monday, August 18, 2025

“சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம். அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார்!”


“தருமபுரியைப் புறக்கணித்திருந்தால் நாடாளுமன்றத்தில் நூற்றுக்கு நூறு வெற்றி எப்படி கிடைத்திருக்கும்?”

- கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சருமான திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை.

“2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரியில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வீழ்த்தப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில்தான் தருமபுரி மாவட்டத்தை முதலமைச்சர் புறக்கணித்து வருகிறார்’’ என திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சோற்றுக்குள் முட்டையை மறைக்கலாம்; அன்புமணி பூசணிக்காயையே மறைத்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை திமுக கூட்டணிக்கு மக்கள் தந்தது எப்படி? அன்புமணி சொல்வது போலத் தருமபுரியைப் புறக்கணித்திருந்தால், இந்த வெற்றி சாத்தியம் ஆகியிருக்குமா? இந்தக் கணக்குகூட தெரியாமல் அன்புமணி, வாய் புளித்ததோ மாங்காய் புளித்தோ என அவதூறுகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

“தருமபுரி மாவட்டம் மீதான வன்மத்தைக் கைவிடுங்கள்: காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துங்கள்” எனச் சொல்லியிருக்கிறார். சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம். தன் இயலாமையை மறைக்க இருப்பை தக்க வைத்துக் கொள்ள, தருமபுரியைப் பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். எந்தப் பாகுபாடும் காட்டாமல் தருமபுரியைச் சமதருமபுரியாகத்தான் திராவிட மாடல் அரசு நடத்துகிறது. அதனை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவு காட்டும்.

“தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்காக ஒரு கைப்பிடி மண் கூட கையகப்படுத்தப்படவில்லை” என்று சொல்லியிருக்கிறார் அன்புமணி. மொரப்பூர்‌ - தருமபுரி புதிய அகல இரயில்‌ பாதை திட்டத்திற்கான நிர்வாக அனுமதி 17.04.2023 அன்று வழங்கப்பட்டு, கடந்த வருடம் மட்டும் 78.54 ஹெக்டேரில் 54.14. ஹெக்டேர் நில எடுப்புக்காக அறிவிக்கை செய்யப்பட்டது. 60 விழுக்காடு நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. புறம்போக்கு நிலங்கள் 13.72.0 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 2000 பட்டாதாரர்களுக்கு இதுவரை ரூ.29 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 24.40.02 ஹெக்டர், ரயில் நிலையம் மூக்கனூரில் அமைவது குறித்துத் திருத்திய நில அட்டவணை தயாரிக்கும் பணியில் உள்ளது. நில எடுப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

ஒன்றிய அரசின் ரயில்வே திட்டங்களில் கூட தமிழ்நாடு அரசைக் குறை சொல்லும் அன்புமணி என்றைக்காவது மோடி அரசைப் பற்றி விமர்சனமாவது வைத்திருக்கிறாரா? ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தைகூட இடம்பெறவில்லை. அதையாவது கண்டித்திருக்கிறாரா? “ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயர் வந்திருக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் 25 எம்.பி.க்களை ஜெயித்து கொடுத்திருக்க வேண்டும்” என்று இறுமாப்புடன் சொன்னார் அன்புமணி ராமதாஸ்.

அப்படிச் சொன்னவர் நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்? அவருடைய பார்லிமெண்ட் ப்ராகிரஸ் ரிப்போர்ட் லட்சணம் என்ன தெரியுமா? அன்புமணி மக்களவையில் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில் மொத்தம் 304 நாட்கள் அவை நடைபெற்றன. அதில் வெறும் 92 நாட்கள் மட்டுமே அன்புமணி அவைக்குப் போனார். அதாவது அவரது வருகைப்பதிவு சதவிகிதம் வெறும் 30-தான். நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களுக்கு என்ன பெற்றுத் தந்தார்?

தருமபுரி காவிரி உபரி நீர்த் திட்டத்தைப் பொறுத்தவரையில் காவிரி வடிநிலப் பகுதியிலிருந்து ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாசனப் பரப்பைத் தவிரப் புதியதாகப் பாசனப்பரப்பைக் காவிரி வடிநிலத்தில் உருவாக்க இயலாது எனக் காவிரி நதிநீர் பங்கீட்டுத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. காவிரி வடிநிலத்தின் உபரிநீரைப் பிற வடிநிலத்திற்கு வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகளின் தீர்ப்பு கிடைத்த பின்னரே காவிரியில் நீரேற்று திட்டங்களைக் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலும். இவையெல்லாம் தெரிந்தும் தருமபுரி மக்களை ஏமாற்றுவதற்காக வெற்று நாடகம் போட்டிருக்கிறார் அன்புமணி.

சிப்காட் தொழிற் பூங்கா திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார் அன்புமணி. தருமபுரி தொழிற் பூங்காவிற்கு ஆரம்பக்கட்டப் பணிகளான அணுகு சாலை மற்றும் நுழைவாயில் தகவல் பலவை, தெரு விளக்குகள் மற்றும் இதர பணிகள் அமைக்கும் பணி ரூபாய் 12.39 கோடி திட்ட மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக 200 ஏக்கர் பரப்பளவில் உட்கட்டமைப்பு பணிகள் ரூ. 93 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலமாக 200 ஏக்கர் நிலத்தில் தொழில் முனைவோர்களுக்காக நிலம் ஒதுக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏழு தொழில் நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, தன் கட்சியிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் இடமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அன்புமணி இனியாவது விவரங்களை அறிந்து பேச வேண்டும். அல்லது அவரது சொந்தக் கட்சி பதற்றம் தீரும் வரை இப்படி அரைவேக்காட்டு அறிக்கை விடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்

Labels:

Wednesday, August 6, 2025

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் எஸ். சிவசங்கர் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணை செயலாளர் எம். பி. அர்ஜுனன் முன்னிலை வகித்தார்.வட்டச் செயலாளர் டி.இ. வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட துணைத் தலைவர் டி. கணேஷ் சிறப்புரை யாற்றினார்.

 10 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர் கள் என்று பெயர் மாற்றி அரசா ணை வழங்க வேண்டும் . அவர் களுக்கு பதவி உயர்வு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.
20-ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் கள் என்று பெயர் மாற்றி அரசா ணை வழங்கிட வேண்டும். அவர் களுக்கு பதவி உயர்வு நிலை ஊதியம் வழங்கிட வேண்டும்.நகர நில அளவைப் பதிவேடு  பட்டா மாறுதலில் அரசு முதன்மை செயலர் அவர்களின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். நகர நில அளவைப் பதிவேடு பட்டா மாறுத லில் கிராம நிர்வாக அலுவலர் களின் பரிந்துரை செய்வது தொடர்பான உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களின் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த் திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வல யுறுத்தி நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன

இந்த ஆர்ப்பாட்டத்தில்,வட்டத் துணைத் தலைவர் ஆர் ரமேஷ் போராட்டக் குழு தலைவர் பி. திரு நாவுக்கரசு வட்ட ஒருங்கிணைப் பாளர் ஏ. ராஜ், வட்ட அமைப்புச் செயலாளர் எல். தண்டபாணி உள்ளிட்ட 60- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பினர்.
நிறைவாக,வட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்

மூங்கப்பட்டி ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம்


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மூங்கப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஊர்மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கட்கிழமை கணபதி பூஜையுடன் துவங்கியது.
 நேற்று முன்தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அச்சம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து அருகில் உள்ள தமக்களப்பன் சுவாமி, முனியப்பன் சுவாமி, கொல்லாபுரி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து 
 பெண் பக்தர்கள் கரகம் எடுத்தும் மாவிளக்கு எடுத்தும், அம்மன் வேடம் அணிந்து மேளாதாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக ஸ்ரீஊர்மாரியம்மன் கோயிலை சென்றடைந்து அம்மனை வழிபட்டனர்.
பொங்கல் வைத்தும், கோழி, கிடா ஆகியவற்றை பலியிட்டும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 
ஸ்ரீ ஊர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர், நாட்டு கவுண்டர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆரணி அருகே காட்டுக்காநல்லூர் அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா


ஆரணி ஆக.7

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காட்டுக்காநல்லூர் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் நேற்று உலக தாய்ப்பால் வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு மேற்கு ஆரணி ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் நித்யா முன்னிலை வகித்தார். மைய பொறுப்பாளர் சுஜாரதி வரவேற்று பேசினார். அப்போது, தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், உலக தாய்ப்பால் வாரம் வருடம்தோறும் ஆகஸ்ட் 1 முதல் 7வரை கொண்டாப்படுகிறது.  உலக சுகாதார நிறுவனம்  உகந்த ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் அடைய, குழந்தைகளுக்கு வாழ்க்கையின் முதல் ஆறு மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும்போது சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.  இருப்பினும், தற்போது உலகளவில் ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து அனைவருக்கும் சத்துணவு வழங்கப்பட்டது. விழாவில் தாய்மார்கள் குழந்தையுடன் கலந்து கொண்டனர்.

வந்தவாசி அருகே சளுக்கை யில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்  சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

தென்னாங்கூர் சளுக்கை புலிவாய் உள்ளிட்ட கிராமங்களுக்காக நடைபெற்ற இந்த முகாமில் தலைமையேற்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 
தொடர்ந்து அவர் பேசும்போது, அனைத்து துறை அதிகாரிகள் மக்களை அவர்கள் வாழும் இடங்களுக்கருகே சந்தித்து மனுக்களை பெற்று தீர்வளிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் 10,000 முகாம்கள் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3600 முகாம்கள் நடைபெற்று இருக்கின்றன வந்தவாசி தொகுதியில் மட்டும் இது 8-ஆவது முகாம். இந்த முகாமில் இதுவரை 277 மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எந்த பகுதியிலும் இல்லாத திட்டத்தை தமிழ்நாட்டில் அமுல்படுத்தி திராவிட அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.மக்களை தேடி மருத்துவம்,இன்னுயிர் காப்போம் திட்டங்களை தொடர்ந்து இந்த அரசு இந்த திட்டம் நடைபெற்று வருகிறது.இந்த திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று தகுதிவாய்ந்த மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்..இத்தகைய முகாம்களை இந்த பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என பேசினார்.

இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், நகர திமுக செயலாளர் எ. தயாளன், வந்தவாசி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சி. ஆர். பெருமாள்,
, வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, மேலாளர் மாணிக்கவாசகர்,துணை வட்டார கல்வி அலுவலர் ராஜேஷ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மருதாடு எம். சி சந்திரன்,ரமேஷ், சளுக்கை நாகராஜன், கீழ்நர்மா ரமேஷ் ,வேல்முருகன், இளைஞர் அணி விக்டர், , கிராம நிர்வாக அலுவலர்கள் மணிவண்ணன் , கணேஷ், , மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பஞ்சமூர்த்தி, வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் குப்பன், ஊராட்சி செயலாளர்கள் திருநாவுக்கரசு செந்தில்குமார், மஞ்சுளா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 

நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த அருள்மிகு கருப்பராயன் கன்னிமார் திருக்கோவில் பூச்சாட்டு விழா.

கோவை. 06.08.25 - 

புதன்கிழமையன்று. அன்னூர் வட்டம் ஒட்டர் பாளையம் கிராமம் ஆயிக்கவுண்டனூர் பகுதியில் சுமார் 150,ஆண்டுகளுக்கு மேலாக பழமைவாய்ந்த அருள்மிகு கருப்பராயன் கன்னிமார்கள்.திருக்கோவில் பூச்சாட்டு திருவிழா. மங்கள கரமான விசுவாசு வருடம் ஆடி மாதம் 11ம் நாள் (27.07.2015) ஞாயிறுகிழமையன்று ஊர்மக்கள் ஒன்றுகூடி பூச்சாட்டு திருவிழா நடத்த ஆலோசிக்கப்பட்டு, 27.07.25. ஞாயிறு. இரவு 9 மணிக்கு மேல் கிராமசாந்தி நிகழ்ச்சியும் 28.07.2025.கணபதி ஹோமம். நிகழ்சியும். 29.07.25. செவ்வாய்கிழமையன்று பூச்சாட்டு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு, மாலை. 07.00. மணிக்கு மேல் சிறப்பு தரிசனம்..இரவு. 10.00. மணிக்கு மேல் கன்னிமார் அழைத்தல். இரவு. 12.00. மணிக்கு. அணிக் கூடை எடுத்தல்.06.08.2025. புதன்கிழமை அதிகாலை பொங்கல் வைத்தல். மாவிளக்கு எடுத்தல். காலை 10.00. மணிக்கு. அபிஷேக அலங்காரச்சி கால பூஜை மதியம். 01.00. மணிக்கு கிடாய் வெட்டுதல்.நிகழ்ச்சியும் . 07.08.2025. வியாழன் அன்று மறுபூஜையும். வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் உள்ளூர் மக்களும். வெளியூர் பொதுமக்களும் கலந்துகொண்டு. அருள்மிகு கருப்பராயன். கன்னிமார்களை வழிபட்டு அருள்பெற்று சென்றனர்

முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு



முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேதாரண்யம் வட்டம், தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் எஸ். ஆர். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துப்பேட்டை முதல் திருத்துறைப்பூண்டி செல்லும் நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு வந்த நிலையில் மேற்படி குப்பைகளில் உள்ள மாமிச இறைச்சிகளை உட்கொள்வதற்காக சாலையோர தெரு நாய்கள், பன்றிகள், பசுமாடுகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றி வருவதால் அதிக அளவிலான வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் மேற்படி குப்பைகளை அகற்ற வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு 28.07.2025 அன்று விசாரணைக்கு வந்தது, அப்போது முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு 3.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திடகழிவு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தும் பணி நடைபெறுகிறது என்றும் ஆனால் உள்ளூர் மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இதனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறினார் மேலும் பேரூராட்சி செயல் அலுவர் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை வழக்கறிஞர் அருண்குமார் ஆஜராகி வாதிட்டார்.

Saturday, August 2, 2025

கேரளாவில் இருந்து விறகு கட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில்,கேரளாவில் இருந்து விறகு கட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து-அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார் மேலும் அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் வாகன நெரிசல் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது-முதற்கட்ட விசாரணையில் டிரைவர் தூக்க மயக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது-காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தெள்ளாந்தி பகுதியைச் சேர்ந்த மனு(35) என்பவர் தற்போது வீடு திரும்பி உள்ளார், இது குறித்து கோட்டார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை.

Friday, August 1, 2025

ரூ 11.50 கோடி செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்


சென்னை ஆக 1-

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் ரூ. 6.94 கோடி செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் ரூ. 11.50 கோடி செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ரூ. 91.42 கோடி மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Labels: