Sunday, December 31, 2023

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்ய நட்சத்திரமாகிய இன்றைய தினம் குரு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது


கோயம்புத்தூர் டிச 31 -

வரதராஜபுரம், என்.ஜி. ராமசாமி மேல்நிலைப்பள்ளி பின்புறம், எல்.ராமசாமி நகர் ,கே.ஜி.கார்டன் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில்,  ,,மற்றும் நாகசாந்தி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை , வரதராஜபுரம் எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன் பகுதியில் பக்தர்கள் அனைவராலும் ஃபாரின் விநாயகர் என அழைக்கப்படும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது..

கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளும் பிரார்த்தனைகளும் உடனுக்குடன் தீர்ந்து கோவையில் மிக சக்தி மிக்க கோவிலாக உள்ள இந்த கோவில் வளாகத்தில் அனைத்து ராசிகளுக்குமான செடிகள் கொண்ட ஆன்மீக தோட்டம் அமைந்துள்ளது.. 

அதே போல கோவில் வளாகத்தில்,, பாரின் விநாயகர்,ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் , ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர்,ஸ்ரீ அகத்திய மகரிஷி , ஸ்ரீ கோமாதா மற்றும் ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ ஐஸ்வர்யேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோவையின் சிறப்பு வாய்ந்த கோவிலாக இருந்து வருகின்றது . இந்நிலையில், ஸ்ரீ அகத்திய மகரிஷியின் பிறந்த தின நட்சத்திர விசேஷ தினமான ஆயில்ய நட்சத்திரத்தில் அகத்தியருக்கு ஆயில்யம் மகா குரு பூஜை விழாவுடன்,நாக சாந்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது..

இதில் பால்,தயிர்,பழங்கள் உள்ளிட்ட 18 திருமஞ்சனங்கள் கொண்டு அகத்திய மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகம்,மகா தீபாராதனை நடைபெற்றது.. இதில் நடைபெற்ற சிறப்பு வாத்திய இசை மூலம் பல்வேறு ராகங்களின் மூலம் ராக இசை ஆராதனை பாடல் களை பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் ரசித்தனர்.. ..இந்த சிறப்பு பூஜையில் குடும்ப சுபிட்சத்திற்காக பக்தர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பாக்கட் காலண்டர் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் எல் ராமசாமி நகர் , கேஜி கார்டன் , சான்வி அபார்ட்மெண்ட் , சிவாநகர் வெங்கடேஸ்வரா அபார்ட்மெண்ட் , ஜோதி நகர் மற்றும் இந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்…இங்கு வழிபடும் பக்தர்களுக்கு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாகத்தோச நிவர்த்தி, குழந்தையின்மை பிரச்சனை தீருதல்,கல்வியில் ஆர்வமின்மை தீர்ந்து சிறப்பான கல்வி பெறுதல், திருமணங்கள் விரைவில் கூடுதல், சகல திருஷ்டி, சகல தோஷங்கள் நிவர்த்தியாவதையும் கொடிய நோய்களும் குணமாவதையும் பக்தர்கள் அனுபவத்தில் உணரலாம்..
கோவையில் அமைந்துள்ள இந்த சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு அனை வரும் வந்து இறையருள் பெற கோவில் பக்தர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Labels:

Saturday, December 30, 2023

கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான அரிசி உட்பட மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் வழங்கினார்

தூத்துக்குடி டிச 31.

முன்னாள் முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கேற்ப கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி எம்ஜிஆர் நகர்பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சர் முன்னாள் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாநில கழக வர்த்தக அணி செயலாளர் சித செல்ல பாண்டியன் வழங்கினார்

மேலும் மேற்படி பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு அரிசி பை சீனி கோதுமை ரவா மைதா போர்வை சேலைகள் உட்பட ஏராளமான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் வழங்கினார்

நிகழ்ச்சியில் 
தூத்துக்குடி நாசரேத் திருமண்டுல சண்முகபுரம் பேராலய திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர். மாவட்டஅம்மா பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ராஜகோபால். முன்னாள் நகர மன்ற தலைவர் மனோஜ் குமார். மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வழக்கறிஞர் ஜேஜே குமார். தூத்துக்குடி வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ். வடக்கு பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜன் கண்ணா. . அம்மா பேரவை செயலாளர் காசி. வட்ட பிரதிநிதி அய்யப்பன். உட்பட ஏராளமான கழகத்தினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Labels:

தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தருமபுரி தென் பென்னை ஆற்றில் 1.75 இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன


தருமபுரி டிச 31

காரிமங்கலம் வட்டம் மொரப்பூர் வட்டாரம் கம்பைநல்லூரில் உள்ள K. ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றில் கடந்த 29 ம் தேதி தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2022 - 23 -ன் கீழ் 1.75 இலட்சம் கட்லா, ரோகு, மிர்கால், சேல்கெண்டை, கல்பாசு போன்ற நாட்டின மீன் குஞ்சுகள் தென்பெண்ணை ஆற்றில் மீன் உற்பத்தி அதிகரிக்கும் பொருட்டு ஆற்றில் விடப்பட்டது. 

தருமபுரி மீன்துறை துணை இயக்குநர், சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மீன்துறை உதவி இயக்குநர் கோகுலரமணன், மேட்டூர் உதவி இயக்குநர் உமா கலைச்செல்வி, மீன்வள ஆய்வாளர் அ.ஜெயஸ்ரீ மீன்வள சார் ஆய்வாளர் வெங்கடேசன், மற்றும் மீன்வள மேற்பார்வையாளர்கள் பூபதிராஜா, மகேந்திரன் வருவாய்த்துறை அலுவலர் மகாலிங்கம், நீர்வளத்துறை அலுவலர், கம்மைநல்லூர் மீனவர் கூட்றவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Labels:

இடுப்பில் சாகச வளையத்தை சுற்றி கொண்டே உடை மாற்றுவது, கேம் விளையாடுவது என அசத்தும் சிறுவன்


கோயம்புத்தூர் டிச 30-

கோவையில் பதினோரு வயது சிறுவன்,  ஹூலா ஹூப் எனும்  சாகச வளையத்தை  சுற்றி கொண்டே, வீடியோ கேம்,விளையாடுவது, உடை மாற்றுவது, நடந்து செல்வது  என பல்வேறு செயல்களை செய்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்…


கோவை சாய்பாபாகாலனி பகுதியை  சேர்ந்த அசோக்,ரஞ்சனி ஆகிய தம்பதியரின் மகன்  ஆரவ்,பதினோரு வயதான இவர், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்..சிறு வயது முதலே  ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் ஈடுபாடு கொண்ட இவர்,, சாகச வளையத்தை சுற்றி கொண்டே பல்வேறு செயல்களை செய்வதை  வழக்கமாக கொண்டுள்ளார்.இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர்,இவருக்கு அளித்த பயிற்சியின் காரணமாக தற்போது கோவை வந்த சிறுவன் ஆரவ்,இடுப்பில் வளையத்தை சுற்றுவதில் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் படி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிவ முருகன் முன்னிலையில்,உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.இதில் சிறுவன் ஆரவ் இடுப்பில் வளையத்தை சுற்றி கொண்டே,உடை மாற்றுவது,தண்ணீர் குடிப்பது,க்யூபிக் சரி செய்வது,வீடியோ கேம்,செஸ் என பத்துக்கும் மேற்பட்ட செயல்களை செய்தார்.இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் சகோதரி வசுப்பிரதா ஆகியோர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர்..ஆரவ்   செய்த இந்த சாதனை முயற்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது…

Labels:

Friday, December 29, 2023

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் இறுதி சடங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்


சென்னை டிச 29-

மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி,அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு இன்று (29.12.2023) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் அளிக்கப்பட்ட அரசு இறுதி மரியாதை நிகழ்வில் கலந்து கொண்டார். 

உடன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு, மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன்,  நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Labels:

அகில இந்திய பசும்பொன் தேசியப்படை சார்பில் தே.தி.மு.க தலைவர் விஜயகாந்த் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது


கோயம்புத்தூர் டிச 29-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவை ஒட்டி அகில இந்திய பசும்பொன் தேசியப்படை சார்பாக சிங்காநல்லூர் பகுதியில் ராமானுஜம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 உடன் மாநில தலைவர் எஸ் செந்தில் குரு மாநில செயலாளர், ஆனந்தன் கௌரவ ஆலோசகர் காலனி பிரபு, சிறுபான்மையினர் அணி மாநில பொறுப்பாளர் நசீர், மாநில அமைப்பாளர் சூலூர் நித்தி இளவரசன்,  கோவை மாவட்ட தலைவர் பரமேஸ்வரன்,  கோவை மாவட்ட செயலாளர் உதயகுமார்,  துணைச் செயலாளர் சுரேஷ்,  மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

Labels:

டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் ' 6 வது பதிப்பு' கோவையின் மாபெரும் உணவு திருவிழா ஜனவரி 5ம் தேதி துவக்கம்!


கோயம்புத்தூர் டிச 29-

ஜனவரி 5,6 மற்றும் 7 மூன்று நாட்கள் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (CDHA) சார்பில் 'டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் என்கிற மாபெரும் உணவு திருவிழாவில் 6வது பதிப்பு வரும் ஜனவரி 5.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடிசியா மைதாலத்தில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (29/12/23) நடைபெற்றது. 

இதில் சங்கத்தின் தலைவர் திரு கே.ஏ.ராமசாமி, செயலாளர் திரு பாலச்சந்தர் ராஜு, பொருளாளர் திரு கோவிந்தராஜ் மற்றும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2024 நிகழ்வின் தலைவர் திரு டேவிட் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்

இந்த உணவுத் திருவிழா மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும் இதில் கோவையைச் சேர்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 160 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் சைய மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், சாட் எனும் துரித உணவு வகைகள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்தும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம் என திரு கே.ஏ.ராமசாமி கூறினார்.

இந்த உணவு திருவிழாவில் அனைத்து ஸ்டால்களில் உள்ள உணவுகளை மக்கள் உண்டு மகிழவேண்டும் என்பதற்க்கேற்ப உணவின் அளவு அமைக்கப்பட்டிருக்கும். விலையும் நியாயமாக இருக்கும். இந்த உணவு திருவிழா நிச்சயமாக கோவை மக்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும் மேலும் இது நிச்சயம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம் என திரு.பாலச்சந்தர் ராஜு கூறினார்.

டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் 2023 ன் தலைவர் திரு டேவிட் கூறுகையில் நுழைவு கட்டணம் விலை ரூ. 249 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது. கோயம்புத்தூரில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களில் நேரடியாகவும் Book My Show மற்றும் Pa Insider செயலிகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம். 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியின் டிக்கெட்டுகளை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் கொடிசியா மைதானத்தில் பெற்றுக்கொள்ளலாம். என்றார்.

திரு கோலிந்தராஜ் கூறுகையில், கோயம்புத்தார் மாவட்ட ஆட்சியர் திரு கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் திரு.சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன். மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனர் திரு சதீஷ் குமார் ஆகியோர் விழாவைத் சங்க அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் தொடங்கி வைக்க உள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வு நடைபெறும் 3 நாட்களும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், சைந்தவி, சத்யபிரகாஷ் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆஸந்த் அரவிந்தாக்ஷன், நித்ய ஸ்ரீ ஆகியோர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

Labels:

மாநில அளவில் வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பாக பாராட்டு விழா..


கோயம்புத்தூர் டிச 29-

தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர், வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை

கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பாக பாராட்டு விழா..

தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது. இதில்,கயகோவை,,மதுரை,திருச்சி,தஞ்சை என  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மாநில அளவில் நடைபெற்ற இதில் கோவையில் இருந்து 5 வயது முதல் 21 வயது வரையிலான ,52 மாணவ,மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்றனர். 

சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. 

தொடுமுறை,ஒற்றை மற்றும் இரட்டை கம்பு என அனைத்து பிரிவிகளிலும்  கோவையில் இருந்து  சென்ற  52 மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். தங்கம்,வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை குவித்து  கோவை திரும்பிய  மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டியின் தலைவர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கவுரிவிக்கப்பட்டது.. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிலம்பம் கமிட்டி நிர்வாகிகள் சிவமுருகன்,அரவிந்த் மற்றும் பயிற்சியாளர்கள் விது சங்கர்,பரத் கிருஷ்ணா,மதன்,பிரசாந்த் உட்பட மாணவ,மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Labels:

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ10 இலட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள்


கோயம்புத்தூர் டிச 29-

கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சுமார் 800 குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம்  மதிப்பிலான மளிகை பொருட்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது

நமது பாரம்பரியமிக்க கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார்  ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் துணிமணிகள் என  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக நிர்வாகிகள் மகாசபை உறுப்பினர்கள் நேரடியாக அவர்கள் இல்லம் தேடி பொருட்களை முறையாக விநியோகம் செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

26.12.23 காலை நமது ஜமாத்தின் நிர்வாகிகள்  தலைமையில் 16-க்கும் மேற்பட்ட நபர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், தெற்காத்தூர், வடகத்தூர், காயல்பட்டணம், ஏரல், செம்பட்டி, அம்பேத்கர் நகர், சுனாமி நகர்,
மதினா நகர், முக்காணி, பழைய காயல், உள்ளிட்ட கிராமங்களுக்கு ஜாதி மதம் பாராமல் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நேரடியாக அவர்கள் இல்லங்கள் தேடி சுமார் 800 குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான   அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள், புதிய ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களையும் முறையாக அல்லாஹ்வின் கிருபையால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ஒரு வாரம் காலமாக நமது பள்ளிவாசலில் வசூல் செய்யப்பட்டு, பொருட்களை சேகரித்து வந்த நிலையில் அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைந்தது. இந்த நல்ல காரியத்தில் பங்கெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்  பொருளாதார உதவி செய்த நபர்களுக்கும், பொருட்கள் தந்த நபர்களுக்கும்,மற்றும் இந்த பணிகளை இரவு பகல் பாராமல் பேக்கிங் செய்து இரண்டு நாட்கள்  தங்களுடைய உடல் உழைப்பையும் செலுத்திய நல் உள்ளங்களுக்கும் மற்றும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் ஒருங்கிணைத்த நிர்வாகிகளுக்கும் பள்ளியின் ஊழியர்களுக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த மகாசபையாளர்களுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்

Labels:

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு சீல்

பாப்பிரெட்டிப்பட்டி டிச 29- 

கடத்தூர், கம்பைநல்லூர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் மற்றும் சீல்.

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் மற்றும்  கடை  செயல்பட தடை  உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட மளிகை மற்றும் பெட்டி பீடா கடைகளுக்கு  சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் பரிந்துரை பேரில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் உத்தரவின் பெயரில் கடத்தூர் மற்றும்  கம்பைநல்லூர்  பகுதிகளில்  மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் முருகன் உடன்  கடத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார்,  மற்றும் சாமிதுரை உள்ளிட்ட குழுவினர் கடத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூரில் ஒரு மளிகை கடை, தாளநத்தம் பகுதியில் ஒரு பெட்டி பீடா கடை மற்றும் கம்பைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  கதிர்நாயக்கனள்ளி அஞ்சல் குண்டல்பட்டியில் ஒரு பெட்டி கடை உடன் கம்பைநல்லூரில் செம்மணள்ளி ரோடடில் ஒரு மளிகை கடை என ஒரே நாளில் மொத்தம் நான்கு கடைகளுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு  கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.  மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து கடை சாவியை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Labels:

மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த் அஞ்சலி செலுத்திய கோவை பா.ஜ.க.வினர்

கோயம்புத்தூர் டிச 29-

கோவை, சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜய்காந்த்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ஜ.க மாவட்ட தலைவர் J.ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாநில துணை தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி பா.ஜ.க மாவட்ட தலைவர் பேசும்போது :-

உண்மை வாழ்வில் நடிக்கத் தெரியாத ஒரு நல்ல மனிதர். சமூக அவலங்களை திரைப்படத்திலும் நிஜ வாழ்விலும் தட்டிக் கேட்ட துணிச்சல் மிக்க நபர். பசி என்று தன்னை அணுகி வரும் யாரும் இருந்து விடக் கூடாது என்று எந்த நேரத்திலும் வந்தவருக்கு உணவு விட்டு மகிழ்ந்தவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது அவருக்கு.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பா.ஜ.க சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். என்று பேசினார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

Thursday, December 28, 2023

கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி

அரூர் டிச 28-

கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி

தருமபுரி கிழக்கு மாவட்டம் விசிக சார்பில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவிற்கு  அரூர் கச்சேரிமேட்டில் அவரது உறுவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர் இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி நிர்வாகிகள் அழகரசன் அ.சி.தென்னரசு. வை தமிழ்சின்னதம்பி ஜெய்சாந்த் துரைவளவன் குமார்வளவன் மணிவேல் அன்பரசன் ராம்குமார் கடத்தூர் நிர்வாகிகள் சிந்தைதமிழன் செ.ராஜசேகர் அம்பைஅன்பரசு
மகளிரணி ஞானச்சுடர் சிபிஐ வேலாயுதம் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Labels:

அரூரில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பில் கிராம செழிப்பு விரிவாக்கதிட்ட பயிற்சி முகாம்

அரூர் டிச 28-

தர்மபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திட்ட இயக்குநர் பத்ஹீ முகமது நசீர் உத்தரவின் பேரில் கிராம செழிப்பு விரிவாக்க திட்டம் தொடர்பான பயிற்சி வட்டார மேலாளர் அறிவழகன்,
தலைமையில் நடைபெற்றது.

கிராமத்தின் குடிநீர், சுகாதாரம், சமூக மேம்பாடு, பொருளாதார வாழ்வாதார
மேம்பாடு உள்ளிட்ட கிராம வளர்ச்சி
திட்டம் குறித்து. மாவட்ட வள பயிற்றுனர்
ஜி.பெருமாள், பயிற்சி அளித்தார்.இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மார்கரெட், ஊராட்சி மன்ற தலைவர்கள்,
செயலர்கள், ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு செயலாளர்கள் பயிற்சி பெற்றனர்.

Labels:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை டிச 28-

அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட 
ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று இரங்கல் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார் 

Labels:

Wednesday, December 27, 2023

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம்


தர்மபுரி, டிச.27-

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி
சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் 

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழா 

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி இன்றுஅதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும்,சாமிக்கு மகா தீபாராதனை மற்றும் உபகார பூஜைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரை களி சிறப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை சாமிக்கு பால், பன்னீர், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஆருத்ரா தரிசன காட்சியும், உபகார பூஜைகளும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
குமாரசாமிப்பேட்டை
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாம சுந்தரி உடனாகிய ஸ்ரீ ஆனந்த நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு கோவில் வளாகத்தில் பால், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் பல்வேறு வகையான பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ரா தரிசனக் காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிவகாமசுந்தரி உடனாகிய ஸ்ரீ ஆனந்த நடராஜர் மற்றும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சாமி திருவீதி உலா நடைபெற்றது.


இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவில், தர்மபுரி ஆத்துமேடு ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் உடனாகிய அருளீஸ்வரர் கோவில், சவுலுப்பட்டியில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், பழைய தர்மபுரி லிங்கேஸ்வரர் கோவில், மற்றும் தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதேபோல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் காவிரி அம்மன் உடனாகிய தேசநாதேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Labels:

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிறுகுறு தொழில் நிறுவனங்களின் 8 -ம் கட்டம் போராட்டமாக மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு..

கோயம்புத்தூர் டிசம்பர் 27-

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள COWMA அலுவலகத்தில்
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைப்பின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ், மற்றும் அமைப்பை சேர்ந்த ஜெயபால் பேசுகையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வினால் தொழில் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதை தெரிவித்தனர். 
30 வகையான மின் கட்டண உயர்வு ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அதில் நாங்கள் முன் வைப்பது 5 வகையான கட்டண குறைவுக்கான கோரிக்கை தான் எனவும் தெரிவித்தனர். இது குறித்து முதல்வரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறோம் என கூறிய அவர்கள் சிறுகுறு தொழில்களை பாதுக்காக்க கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்தனர். 
430% நிலைக்கட்டணத்திற்கு கட்டணம் உயர்த்தி உள்ளனர். மாதாந்திர கட்டணம் உயர்த்தி உள்ளனர். இதனால் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

நகை நட்டல்லாம் வைத்து மின் கட்டணம் செலுத்தும் அளவிற்கு தொழில் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்றனர்.  118 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என தெரிவித்த அவர்கள் தந்தி அனுப்புவது, கடை அடைப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் சந்திப்பு என தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றனர். மேலும் 
தொழில் நிறுவனங்களின் மேற்கூரைகளில் சோலர் போர்டு அமைப்பதற்கு 1.53 காசு என மின் வாரியம் எங்களிடம் வசூல் செய்து வருகின்றனர் எனவும் ஆனால் பிற மாநிலங்களில் 50% அரசு ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்தனர். 

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். மேலும் தொழில்த்துறையினர் அரசியலுக்கு அப்பாற்பட்டு வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமே தவிர.. இதை அரசியலாக்க வேண்டும். வாழ்வாதார பிரச்சனையாக மின் கட்டணம் உயர்வு உள்ளது. முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். அரசு பிரச்சனைக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்கிறோம். மேலும் தொழில் பாதுகாப்பு மற்றும் நலிந்த தொழிலை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.   

மின்சார வாரியம் தொடர்ச்சியாக தொழில் துறையினருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தனர். 1.75 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதிமுக , பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என பல்வேறு கட்சியினர் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மனித சங்கிலி போராட்டத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபடுகின்றனர் என கூறினர். தமிழ்நாட்டில் திட்டமிட்டு MSME யை அழிப்பதற்கு வழிக்காட்டபடுகிறதோ என அச்சம் எழுவதாக கூறினர். எனவே முதல்வர் விழித்து கொண்டு தொழில்துறையை பாதுகாக்க வேண்டும் என்றார். பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகையினால் நம் மாநிலத்தில் இருக்க கூடிய சலுகைகளை வாங்கி கொண்டு நம் இடத்தை உற்பத்தி சென்டர்களாக இல்லாமல் அசம்பல் சென்டர்களாக மாற்றி வருவதாக குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகிறது எனவும் இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

அதிமுக பொதுக்குழுவில் ஏற்கப்பட்டுள்ள தீர்மானத்தில் சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் கொண்டு வராது பற்றி தெரியவில்லை என கூறிய அவர்கள் ஆனால் எதிர்கட்சி தலைவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் என தெரிவித்தனர்.

Labels:

Tuesday, December 26, 2023

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர், டிச.27-

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் எழுதிய "நீர்வழிப்படூஉம்" என்ற நாவலுக்கு சாகித்யா அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி திரு.என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் எழுதிய "நீர்வழிப்படூஉம்" என்ற நாவலுக்கு சாகித்யா அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. நேற்று (26.12.2023) திருப்பூர் மாவட்டம். காங்கேயம் வட்டம். புது வெங்கரையாம் பாளையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன் எழுத்தாளர் தேவிபாரதி என்.ராஜசேகரன் நேரில் சந்தித்து பொன்னாடை அனிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ஒன்றிய அரசின் சார்பில் எழுத்தாளர் தேவிபாரதி என்கின்ற .என்.ராஜசேகரன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான விருதுக்கு ராஜசேகரன் எழுதிய நீர்வழிப்படூஉம்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எளிய மனிதர்களாகிய நாவிதர் சமூகத்தின் வாழ்வியலை தன்னுடைய 'நீர்வழிப்படூஉம்' என்ற இந்த நாவல் மூலம் பதிவு செய்துள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எளிய மக்களின் வாழ்வியலை எதார்த்த நடையில் எழுதி வரும் ராஜசேகரன் ஏற்கெனவே நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ்ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். தற்போது சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ள 'நீர்வழிப்படூஉம்' இவரது மூன்றாவது நாவலாகும்.

"நீர்வழிப்படூஉம்" சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு
தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும்
உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். நொய்யல் ராஜசேகரன் அவர்களின் நாவல்களில் இறுதியாக வெளிவந்தது. நொய்யல் ஆற்றை மையமாகக் கொண்டு
கொங்கு வட்டாரத்தின் பண்பாட்டு மாற்றங்களைச் சித்தரிக்கும் படைப்பாக அமைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் புதுவெங்கரையாம் பாளையத்தில் 1957-ம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் ஏறத்தாழ கவிதைகள், சிறுகதைகள் அதே போல நாவல்கள் என்ற வகையில் 40 படைப்புகளை தந்துள்ளார்கள். இது பாராட்டுக்குறியதாகும். அதே போல நொய்யல் கரையையொட்டி அவர் வாழ்ந்து வருவதால் நொய்யலை பற்றி ஒரு நாவலை எழுதினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை வழங்கினார்கள்.

1980 களில் சிறுகதைகள் மூலம் அறிமுகமான தேவிபாரதி தொடர்ந்து சிறுகதைகள்,கவிதைகள், அரசியல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். எழுதிவருபவர். 1993-ல் வெளிவந்த இவரது சிறுகதைத் தொகுப்பு 'பலி' பரவலான கவனம் பெற்றது. இவரது படைப்புகளில் பலி, பிறகொரு இரவு, 'கறுப்பு வெள்ளைக் கடவுள்'. 'வீடென்ப' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகளும் 'நிழலின் தனிமை', 'நட்ராஜ் மகராஜ்'. 'நீர்வழிப்படூஉம்' ஆகிய நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவையாகத் திகழ்ந்து வருபவை. புழுதிக்குள் சில சித்திரங்கள்', 'அற்ற குளத்து அற்புத மீன்கள்' என இரண்டு கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு வெளிவந்த இவரது 'நொய்யல்' நாவல் தமிழ் படைப்பிலக்கியத்தின் முக்கியமாக கருதப்படுகிறது.

நம்முடைய திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த எழுத்தாளர் சாகித்யா அகாடமி விருது பெறுவது மாவட்ட மக்களுக்கும் பெருமையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. விருது பெறவுள்ள எழுத்தாளர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சார்பிலும், எனது சார்பிலும், மாவட்ட மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 
இவ்வாறு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Labels:

Monday, December 25, 2023

தருமபுரியில் கீழ் வெண்மணி தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்


தருமபுரி டிசம்பர் 25-

தஞ்சாவூர் மாவட்டம்,கீழ் வெண்மணியில் விவசாய தொழிலாளர்கள் வர்க்க போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் 55-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி கூட்டம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் ஜெ.பிரதாபன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் எஸ்.தேவராசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் மாதையன்,வட்டார செயலாளர்கள் நல்லம்பள்ளி முருகேசன்,தருமபுரி பச்சாகவுண்டர், இண்டூர் பண்டஅள்ளி மாதையன்,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன்,கிருஷ்ணராஜ்,ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி,நிர்வாகிகள் சுதர்சனன், மனோகரன்,முனுசாமி,மாதேஸ்,மாதம்மாள்,அலமேலுகலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Labels:

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா

தருமபுரி டிசம்பர் 25-

தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

தேமுதிக கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டு தர்மபுரி நகரப் பகுதியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர், தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் புல்லட் மாரிமுத்து மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மேற்கு மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் தேவ தேவன் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

Sunday, December 24, 2023

தருமபுரியில் தந்தை பெரியாரின் 50-ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி டிசம்பர் 24-

தருமபுரி  மாவட்ட திமுக சார்பில்
தந்தை பெரியார்  அவர்களின் 50 - ஆம்  ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex MLA அவர்கள் தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள பெரியார் மண்டபத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

தர்மபுரி நகர மன்ற தலைவர்  இலட்சுமி மாது அவர்கள் முன்னிலை வகித்தார்

மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொருளாளர் தங்கமணி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர்,  மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் மே.அன்பழகன், நகர நிர்வாகிகள் அழகு வேல், முல்லை வேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, சம்பந்தம், சுருளிராஜன், கனகராஜ்  மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தாஸ், டி.ஏ.குமார்,  காசிநாதன், ரஹீம், விஜயன்,  பழனிசாமி, துணை அமைப்பாளர்கள் டி.ஏ.ரவி, வெல்டிங் ராஜா, சக்திவேல், மற்றும் நகர மன்ற உறுப்பினர் ஜெகன் முன்னாள் ஒன்றை கழக செயலாளர் 
பி.சி.துரைசாமி, மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Labels:

வந்தே பாரத் ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தர்மபுரி எம்.பி செந்தில்குமார் ஒன்றிய இரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்


டெல்லி டிசம்பர் 24-

தர்மபுரி - மொரப்பூர் - சென்னை செல்லும் இரயில்வே திட்டத்திற்கு மூக்கனூர் மற்றும் A.ரெட்டிஹல்லி கிராமங்களில் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வண்ணம் கையகப்படுத்துக மேலும் வந்தே பாரத் ரெயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நிறுத்த வேண்டும் - தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் திரு செந்தில்குமார் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறைஅவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்தார்.

தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். டி என்.வி செந்தில் குமார் அவர்கள் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து தர்மபுரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தர்மபுரி- மொரப்பூர் சென்னை செல்லும் இணைப்பு இரயில் ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கி அந்த நிலங்களுக்கு தேவையான இழப்பீடு வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது‌. ஆனால் இந்த தர்மபுரி - மொரப்பூர் இடையே ரயில் பாதை அமையும் இடத்தில் மூக்கனூர் மற்றும் A.ரெட்டிஹல்லி ஆகிய இரு கிராமங்களில் 6000திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் மேலும் விவசாய மக்களின் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகள் இந்த பாதை அமைக்கும் பகுதியில் உள்ளதால் இந்த நிலங்களை கையகப்படுத்தும் பொழுது நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகிறது. எனவே இரயில் பாதை அமையும் இடத்திலிருந்து சுமார் 600 மீட்டர் அளவிற்கு வேறு பாதையில் இந்த ரயில் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் இந்த இரு கிராம மக்களின் விவசாயிகளின் நிலங்கள் பாதிக்காத வகையில் இந்த ரயில்வே திட்டத்தின் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் மேலும் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கையான கோவை சூப்பர் ஸ்டார் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் பொம்மிடி ரயில் நிலையத்திலும் சென்னை திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கோயம்புத்தூர் திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என்றும் அதுபோல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி கோரிக்கை விடுத்தார்.

Labels:

நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவால் காலமானார்


சென்னை டிசம்பர் 24-

சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது 2 சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்தநிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் போண்டா மணி. தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்.மேலும் ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

Labels:

Saturday, December 23, 2023

பெருமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள்.. உதவி கரம் நீட்டியுள்ள தருமபுரி மாவட்ட இஸ்லாமியர்கள்..

தருமபுரி டிங23-

தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த பெருமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தருமபுரி மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய மக்களும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருப்பது நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..

அரிசி, பருப்பு, சர்க்கரை, உப்பு,சமையல் எண்ணை, ரவை, மைதா, சேமியா,உள்ளிட்ட மளிகை பொருட்களும், புடவை, வேட்டிகள், பெட்சீட், துண்டுகள், நாப்கின்கள் பாய்கள், குளியல் சோப்புகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், மற்றும் பிஸ்கட்டுகள், வறுக்கி உள்ளிட்ட திண்பண்டங்கள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என பல்வேறு வகையான பொருட்கள் ஒன்று திரட்டி, தருமபுரி பேருந்து நிலையம் எதிரிலுள்ள அஹ்லே சுன்னத் ஜாமத்திடம் ஒப்படைத்தனர், இதனை தொடர்ந்து ஜமாத் தலைவர் முனவர் ஜான், செயலாளர் டி.எஸ்.எக்பால்,
  பொருளாலர் முஸ்தாக், மாவட்ட முத்தவல்லி சங்க தலைவர் ஜப்பார் உள்ளிட்ட நிர்வாகிகள் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை லாரி மூலம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர், முன்னதாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொருட்கள் அனைத்தும் நல்லபடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர வேண்டும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைத்தனர், இந்த நிகழ்வின் போது செயலார் பாபு, தருமபுரி மாவட்ட அரசு காஜி பஜல் கரீம் ஜமாத்துல் உலமா, சபை நிர்வாகிகள், ஹபிப்புல்லாஹ், நௌசாத், ஆசீப்,ஜிபேர்,உவேஸ்,மௌலானா முஹம்மதலி முன்னேற்ற சங்க தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Labels:

தருமபுரி வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு :

தருமபுரி டிசம்பர் 23-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தர்மபுரி கோட்டை அருள்மிகு வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ சுவாமி திருக்கோவில் உட்பட தருமபுரியில் பல்வேறு பெருமாள் கோவில்களில் சனிகிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தருமபுரி கோட்டை அருள்மிகு வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ சுவாமி திருக்கோவில் சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.

இதைத்தொடர்ந்து 4.30.மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரவாசுதேவ சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியே வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பல்லக்கில் சாமி திருவீதி உலா நடைபெற்றது . இதில் தருமபுரி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சொர்க்க வாசல் வழியாகத் சென்று சுவாமியை வழிபட்டனர்.

இந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் ஸ்ரீ வாரி சேவா சங்கம் சார்பில் லட்டு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி மாது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கௌதமன், திருக்கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், கடைவீதி அருள்மிகு பிரசன்னா வெங்கடேஸ்வர சுவாமி கோவில், மூக்கனூர் ஆதிமூல வெங்கட்ரமண சுவாமி கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில், அதியமான் கோட்டை சென்றாய பெருமாள் கோவில் , அதகப்பாடி ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோவில், ஆட்டுக்காரன்பட்டி ராதே கிருஷ்ணர் திருக்கோவில் உட்பட தருமபுரி நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் உள்ள பெருமாள் திருக்கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகாலை முதலே ஏன்டா வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Labels:

Friday, December 22, 2023

மொரப்பூரில் மத்திய கதர் கிராம ஆணையம் சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா

தருமபுரி டிசம்பர் 22-

இந்திய கதர் கிராம தொழில்கள் ஆணையத்தின் சார்பில் மண்பானை,பனைஏரி,தேனி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மொரப்பூரில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு மாநில கதர் கிராம வாரிய துணை இயக்குனர் சுரேஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் கதர் கிராம தொழில்கள் ஆணைய சேர்மன் மனோஜ்குமார் கலந்து கொண்டு பேசினார்.அப்போது தமிழ்நாட்டில் கைவினைர்களின் கரத்தை வலுப்படுத்த பிரதமர் மோடி அவர்களின் தூதராக ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வந்துள்ளேன்.மின்சாரத்தில் பானை தயாரிக்கும் இயந்திரம்,தேனீக்கள் வளர்க்கும் பெட்டி,பனைவெல்லம் இயந்திரம்,வேர்ஸ்ட் வுட் கிராப்ட், டர்ன்வுட் உள்ளிட்ட இயந்திரங்கள் இங்கு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 8000 புதிய குடிசை தொழில்கள் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் 88000 வேலை வாய்ப்புகள் படித்த வேலை இல்லா இளைஞர்களுக்கு கிடைக்கும்.இதில் தமிழ்நாட்டில் 8000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.

விழாவில் மண்பானை செய்யும் தொழிலாளர்கள் 100 நபர்களுக்கு மின்சார மண்பானை இயந்திரம்,பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் 60 பேருக்கு பனை மரம் ஏறும் இயந்திரம்,தேனீ வளர்ப்பு பெட்டி 200 நபர்களுக்கும்,ஊதுபத்தி தயார் செய்யும் இயந்திரம் 100 நபர்களுக்கு என மொத்தம் ரூ 2 கோடி மதிப்பில் நல திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நரசிம்மன்,விஷ்வபாரதி கல்வி நிறுவனர் சாட்சாதிபதி,அரூர் கோட்டாட்சியர்,வட்டாட்சியர்,மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் பெண்கள் உரிமை மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் எம்.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

Labels:

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் - முதலமைச்சர்

திருநெல்வேலி டிசம்பர் 22-

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலிக்கு நேரில் சென்று, பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.

Labels:

லம்பாடி மக்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க தருமபுரி எம்பி செந்தில்குமார் ஒன்றிய அமைச்சருக்கு நேரில் கடிதம்


டெல்லி டிசம்பர் 22-

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு செந்தில்குமார் அவர்கள் “குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் ஆகிய மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் தமிழக அரசின் முன்மொழிவை விரைவுபடுத்தவும் மற்றும் “லம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஒன்றிய பழங்குடி நலன் அமைச்சர் மாண்புமிகு திரு அர்ஜூன் முண்டா அவர்களை 20.12.2023 அன்று நேரில் சந்தித்து கோரிக்கைவிடுத்தார்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு செந்தில்குமார் அவர்கள்” ஒன்றிய பழங்குடி நலன் அமைச்சர் மாண்புமிகு திரு அர்ஜூன் முண்டா அவர்களை நேரில் சந்தித்து “குருமா, குருமன், குரும்பா, குருமன் கவுண்டர், குரும்பன் மற்றும் குரும்பர் ஆகிய மக்களை குருமன்ஸ் என பழங்குடி பட்டியலில் தமிழக அரசின் முன்மொழிவை விரைவுபடுத்தவும் மற்றும் “லம்பாடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் கோரிக்கை அடங்கிய கடிதத்தின் விவரங்கள் பின்வருமாறு.
.
பழங்குடி சமூகமான 'குருமன்ஸ்' என்ற பழங்குடி சமூகத்தின் ஒத்த சொற்களை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் அங்கீகரித்து இணைப்பதற்கான நீண்டகால முயற்சி தொடர்பாக எழுதுகிறேன். S.T பட்டியலில் குறும்பர் (S.T) என்ற பெயருக்கு இணையான பெயராக குருமா, குருமன், குரும்பன், குரும்பகவுண்டர், குறும்பன் மற்றும் குரும்பர் சேர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சருக்கும் இது பற்றி நன்கு தெரியும்.
ஒன்றிய அரசுக்கு குருமன்ஸ் (எஸ்டி) பட்டியலில் 6 ஒத்த பெயர்களைச் சேர்ப்பதற்காக தமிழ்நாடு அரசு அனுப்பிய விரிவான பரிந்துரை செய்து இருப்பதாக அறிவேன்.

சவால்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் அரசாங்க ஆதாரங்கள் அவர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த என்னைத் ஈடுபடச்செய்தது பழங்குடி சமூகத்தின் சார்பாக நான் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

12.03.2021 அன்று நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் குருமன்ஸ்களின் இணையான சொற்களையும் எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தப் பிரச்சினையை எழுப்பி, அதற்குப் பதிலாக 12.04.2021 அன்று ஒன்றிய பழங்குடி நலன் அமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்த விவகாரம் பரிசீலனையில் இருப்பதாகக் கடிதம் வந்தது.

07.04.2022 அன்று குருமா, குருமன், குரும்பா, குரும்பகவுண்டர், குரும்பன், குரும்பர் ஆகிய பெயர்களை எஸ்டி பட்டியலில் குருமன்ஸ்களுக்கு இணையான வார்த்தைகளாக அங்கீகரித்து பட்டியலிடுவதை நோக்கமாகக் கொண்டு, நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. 21.12.2022 அன்று குருமன்ஸ் ஒத்த பெயர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது. 04.07.2023 அன்று அதி திராவிடர் மற்றும் பழங்குடி நல வாரியம் இயக்குநர், டிஆர்சி, ஊட்டி ஆகியோருக்கு, தேவையான அறிக்கைகளை உங்கள் அலுவலகத்திற்கு விரைவாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் "லம்பாடி" சமூக மக்களை அங்கீகரித்து இணைப்பதற்கான நீண்டகால முயற்சி தொடர்பாக டாக்டர் செந்தில்குமார் அவர்களின் கடிதம் பின்வருமாறு. தமிழ்நாட்டில் உள்ள லம்பாடிகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பட்டியல் சமூகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் லம்பாடி மக்களின் மொத்த மக்கள் தொகை சுமார் 2 லட்சம் ஆகும் அவற்றில் தருமபுரியில் பாராளுமன்ற தொகுதியில் மட்டும் 50,000 மக்கள் அரூர் (சிட்லிங்கி தண்டா, சிட்லிங்கி பஞ்சாயத்து), பென்னாகரம் மற்றும் தர்மபுரி தாலுகா மற்றும் மேட்டூர் தாலுகாவில் (லக்கம்பட்டி) வசித்து வருகின்றனர்.

இந்தச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய எனது தனிப்பட்ட அறிமுகம், அவர்களைச் சேர்ப்பதற்காக தொடர்ந்து வாதிடுவதற்கு என்னை இட்டுச் சென்றது. பழங்குடி சமூகத்தின் சார்பாக நான் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். 21.12.2022 அன்று லம்பாடி சமுதாய மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க நாடாளுமன்றத்தில் பேசினேன் மற்றும் 12.08.2023 அன்று லம்பாடி சமூகத்தை எஸ்டி பட்டியலில் அங்கீகரிக்கும் நோக்கில், நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

1969 ஆம் ஆண்டில், எஸ்சி/எஸ்டியைச் சேர்ப்பது மற்றும் விலக்குவது தொடர்பான மசோதா மீதான கூட்டுக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் லம்பாடிகளை எஸ்டி பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைத்தது. சென்னை பல்கலைக்கழக மானுடவியலாளர்கள் நடத்திய மானுடவியல் ஆய்வின் அடிப்படையில் லம்பாடிகளை ST பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்துள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் இணைத்து அமைச்சர் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளார். குருமா, குருமன், குரும்பா, குரும்பகவுண்டர், குரும்பன், குரும்பர் மற்றும் லம்பாடி சமூகத்தை ஆகிய பெயர்களை ST பட்டியலில் இணைத்திருப்பது வெறும் அடையாளச் செயலாக இல்லாமல், வரலாற்று அநீதிகளைச் சரிசெய்வதற்கான ஒரு படியாகும். உங்கள் உடனடி நடவடிக்கை சமூகத்திற்கு மிகவும் பயனளிக்கும், சமூக கட்டமைப்பில் அவர்களின் சரியான இடத்தைப் பெற வழி வகுக்கும் என்று ஒன்றிய பழங்குடி நலன் அமைச்சர் மாண்புமிகு திரு. அர்ஜூன் முண்டா அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வாயிலாக கோரிக்கைவிடுத்தார்.

Labels:

Thursday, December 21, 2023

தருமபுரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்று கொண்டனர்.

தருமபுரி டிசம்பர் 21-

தர்மபுரியில் கடந்த 15ஆம் தேதி தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது இதில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இன்று க்ஷக் பதவி ஏற்று கொண்டனர். இதில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் சிவம் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செயலாளர் பதவிக்கு தர்மன், துணைத் தலைவர் பதவிக்கு முனிராஜ், பொருளாளர் பதவிக்கு சதாசிவம், துணை செயலாளராக குமரன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.பின்னர் சக வழக்கறிஞர்கள் பதவியேற்றுக் கொண்டவர்களுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்துக்களை கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூத்த முன்னால் வழக்கறிஞர் சங்க தலைவர் அப்புனு கவுண்டர் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Labels:

ஊட்டமலை பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென ஆய்வு செய்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி.

பென்னாகரம் டிசம்பர் 21-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை அடிப்படை மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் வனப் பகுதியை கடந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததை அடுத்து இன்று திடீரென்று ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்ய பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார் அப்போது அங்கு வந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவம் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்றும் மருத்துவ அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார் அதனை அடுத்து மருத்துவர் அருண் இடம் வரும் நோயாளிகள் நலன் குறித்து சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மக்களிடம் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் பற்றாக்குறையாக உள்ள செவிலியர்களை பணி நியமம் செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் இடம் பேசுவதாகவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாகவும் வாக்குறுதி அளித்தார் இதனை அடுத்து இரவு நேரங்களில் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை திறந்து இருக்க வேண்டும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

Labels:

Tuesday, December 19, 2023

இராகி கொள்முதலினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்கள்

பென்னாகரம் டிசம்பர் 19-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இராகி சிறுதானியம் வழங்கும் பொருட்டு, பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கிவைத்தார்கள். 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ  ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு  ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வரப்பெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து சிறு/குறு விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 38.46 /- வீதம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2023-2024- தருமபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த வருடம் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து சிறு/குறு விவசாயிகளிடமிருந்து 32150 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டதில் 1084 நியாய விலை அங்காடிகளின் மூலம் 4,68,168 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொதுவிநியோக திட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இராகி விநியோகிக்க கடந்த ஜூன் 2023 முதல் தற்போது வரையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு 931 மெ.டன் வீதம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ வீதம் அரிசிக்கு பதிலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ராகி இறுதி இருப்பு 1152.746 மெ.டன் ஆக உள்ளது. கடந்த ஆண்டு ராகி ஒரு கிலோ ரூ.35.78/- என்ற விலையிலும் நடப்பு ஆண்டு ரூ.38.46/- என்ற விலையில்சிறு/குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோ ரூ.26/- முதல் ரூ.30/- வரை என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் இராகி கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களுக்கான தொகையினை வழங்கினார்கள். பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.73.76 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.36,000/- மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் விதைகளை வழங்கினார்கள்.

தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.  பி.பழனியப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.நா.செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.ரா.கவிதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், பென்னாகரம் பேரூராட்சித்தலைவர் திரு.வீரமணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Labels:

Monday, December 18, 2023

சென்னையில் டி.யூ.ஜெ. மாநில நிர்வாகக் குழுக் கூட்டம்.

தருமபுரி டிசம்பர் 18-

பத்திரிகையாளர்களுக்கு அளித்த தேர்தல்வாக்குறு திகளைநிறை
வேற்ற வேண்டும். தாலுக்கா செய்தியாளர்களையும் பத்திரிகையாளர் நலவாரியத்தில் இணைக்க வேண்டும்.

தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில நிர்வாக குழுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அலுவலக விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி. எஸ். டி.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 

மாநில நிர்வாகிகள்கள துணைத் தலைவர் பி. சண்முகவேலு, பொதுச் செயலாளர்கள் போளூர் A. சுரேஷ் கே.முத்து, பொருளாளர் வி.ரவிச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் எஸ். டேவிக்குமார், அமைப்புச் செயலாளர்கள், ஏ. தமிழ்ச்செல்வன், பி ஆர் வேளாங்கன், இணைச் செயலாளர் ஏ ஆர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் பொதுச் செயலாளர் போளூர் A. சுரேஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். பின்னர் மாநில நிர்வாகிகளின் கருத்துரைகளுக்குப் பின்னர் மாநிலத் தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு 

முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரையா அவர்களின் மறைவுக்கும், மாநில பொருளாளர் திரு ரவிச்சந்திரன் துணைவியார் திருமதி வசந்தி அவர்களின் மறைவிற்கும், திருவாருர் மாவட்ட பொருளாளர் திரு பாரி அவர்கள் மறைவிற்கும், சென்னை நிர்வாகி திரு ஜெயராஜ் அவர்களின் தந்தையார் திரு ரத்னம் அவர்களின் மறைவிற்கும், சென்னை,இந்து போட்டோகிராபர் திரு குமரேசன் மறைவிற்கும், சமூக ஆர்வலர் திருமதி சுசீலா மறைவிற்கும் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கும் இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் தாலுகா செய்தியாளர்களையும் இணைப்பது உள்ளிட்ட பத்திரிகையாளர் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் செய்தியாளர்கள் மீது செய்தி வெளியீடு சம்பந்தமாக தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருப்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அரணாக டியுஜெ எப்போதும் செயல்படும் என இக் கூட்டம் உறுதி அளிக்கிறது.

மிக்ஜாம் புயலின் போது வடசென்னை பகுதியில்மழை நீர் தேங்கியிருந்த பகுதிகளில்,உரிய
நிவாரண பணிகளை செய்யாததால்,
மக்கள் படும் அவதிகுறித்து விரிவான செய்தி சேகரித்து வெளியிட்ட மூத்த ஊடகவியலாளர், சென்னை பத்திரிகையாளர்கள் சங்க பொதுச்
செயலாளர்,நியூஸ்மினிட்ஆசிரியர் தோழர் சபீர் அகமது,அவர்களையும், இந்தியா டுடே, பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம் ஆகியோருக்கும் மிரட்டல் விடுத்த ஆளுங்கட்சி ஐ டி விங் செயல்பாட்டாளர்களுக்கும் இக்கூட்டம் வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
   
மேலும் ஆளும் கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின்
அவர்கள் பத்திரிகை, ஊடக
வியளர்களுக்கு கொலை மிரட்டல்
விடுத்த நபர்கள் மீது உரிய 
நட வடிக்கை எடுக்கவேண்டும்
என கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


மேலும் வெள்ளத்தில்
பாதிக்கப்பட்ட  பள்ளிக்கரணை பகுதி மக்களை சந்தித்து செய்திகளைசேகரிக்க சென்ற புதிய தலைமுறை
செய்தியாளர் சாந்தகுமாரை
தடுத்து தாக்கிய பள்ளிகரணை காவல்துறை துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள இக்கூட்டம்வலியுறுத்துகிறது.

திமுக அரசு பத்திரிகையாளர்களுக்கு அளித்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும்.தேதி
பின்னர் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்

2024 ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், மாவட்டங்களில் பேரவை கூட்டங்கள் நடத்தப்படும் இக்கூட்டம் முடிவு செய்கிறது

நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் மூன்று வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மாநில மையம் மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்த மாநில குழு முழு ஆதரவை தெரிவிக்கிறது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் (காஞ்சிபுரம், செங்கல்பட்டு) மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் நிலத்திற்கு உண்டான மதிப்புத்தொகையை பெற்றுக் கொண்டு ஒதுக்கப்பட்ட வீட்டுமனை இடங்களை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. மீண்டும் அந்த இடத்தை செய்தியாளர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கூட்டம் வலியுறுத்துகிறது.

 மாநிலம் முழுவதும்
பல்வேறு மாவட்டங்களில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் செய்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதை இக் கூட்டம்வன்மையாக கண்டிக்கிறது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்,தங்கள் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்கள் கண்டித்து மாவட்ட ரீதியாக போராட்டம் நடத்த படும் என இக் கூட்டம் முடிவு செய்கிறது.

திருக்கோவிலூர்
பகுதியில்,நடைபெறும்சமூக விரோத செயல்
பாடுகள் சம்பந்தமான செய்திகளை வெளியிட்டதற்காக மாநில துணைப் பொதுச் செயலாளர் டேவிட் குமார் மீது நகராட்சி தலைவர் அளித்த பொய் புகார் மீது திருக்கோவிலூர் காவல்துறையினரால் பொய்வழக்கு
பதிவு செய்ததை, இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. 

மேலும்,பொய் வழக்கை வாபஸ் வாங்க கூட்டம்வலியுறுத்துகிறது. 

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்ட முடிவில்,சென்னை மாவட்ட மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.

Labels:

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார்

தருமபுரி டிசம்பர் 18-

அரசின் சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்தவும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து இன்று கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக நகர்புற பகுதிகளுக்கான தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் இன்று நகராட்சிகுட்பட்ட மதிகோண் பாளையத்தில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 1 முதல் 6 வார்டுகளுக்கான முகாமினை மாவட்ட ஆட்சியர் சாந்தி துவக்கி வைத்தார். 

இந்த முகாம் இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை நடைபெறும். இம்முகாமில் வருவாய்துறை, மின்சார வாரியம், நகராட்சி துறை, மாற்று திறனாளிகள் நலதுறை உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். இன்று நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
 

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான தடங்கம் சுப்ரமணி நகர்மன்ற தலைவர் லட்சுமி மாது, நகராட்சி ஆணையர் புவனேஸ்வர், கோட்டாட்சியர் கீதாராணி, நகரமன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Labels:

மக்களுடன் முதல்வர் முகாம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார்

பென்னாகரம் டிசம்பர் 18-

பென்னாகரத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மனு அளிப்பு முகாமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மனு பெரும் முகமை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார். இதற்கு முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை காவல் துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை தொகை ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் வாழ்வாதாரக் கடன் உதவிகள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் மனு அளிக்கும் முகாம்களை பார்வையிட்டார். 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிலி ராஜ்குமார், தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், வட்டாட்சியர் சவுக்கத் அலி வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, செயல் அலுவலர் கீதா பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் வீரமணி மற்றும் அரசு அலுவலர்கள் முகாமில் கலந்து கொண்டனர் இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சந்தானம் மனுக்களை வழங்கினர்.

Labels:

Saturday, December 16, 2023

தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க நிரந்தர தீர்வு ரூ 775 கோடியில் உயர்மட்ட சாலை ஒப்புதல். எம்.பி செந்தில்குமாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு

தருமபுரி டிசம்பர் 16-

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி என் வி செந்தில் குமார் அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக தர்மபுரி தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க ரூபாய் 775 கோடியில் சாலை சீரமைப்பு பணி. 

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க மாற்றுப் பாதை அமைத்து விபத்துக்களை தடுக்க கோரிக்கை மனுவை நிதின் கட்கரி அவர்களிடம் வழங்கி இருந்தேன். அதன் தொடர் நடவடிக்கையாக 2020 ஆம் ஆண்டு நினைவூட்டல் கடிதமும் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் விதி 377 கோரிக்கை வைத்திருந்தேன்.  2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது தொடர் வலியுறுத்தல் காரணமாக ஒன்றிய அரசு 775 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்க ஒன்றிய அரசு டெண்டர் கோரி உள்ளது. இச்சாலை அமைக்கப்பட்டால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவு குறையும். இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரமும் குறையும்.  இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலன். இந்தியாவிலேயே தொப்பூர் கணவாய் பகுதியில் தான் அதிக விபத்துக்கள் நடைபெறும் என்ற நிலை மாறும். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் எங்கு சென்றாலும் நான்கு வழி சாலை உள்ளது பெங்களூர் செல்ல இரண்டு புதிய வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளை விட அதிகமான போக்குவரத்துக்கு மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைக்கு அதிக நிதியை பெற்று தந்திருக்கிறோம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் அலகு திட்டத்திற்கு 7800 கோடி நிதியில் ஒன்றிய அரசிடம் இருந்து நான்காயிரம் கோடியும் ஜிக்கா விடம் மீத தொகையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தர்மபுரி தொகுதி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தருமபுரி செயலாக்கத்திற்கு வந்துள்ளதாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகள் பாராட்டு

ஒன்றிய அரசால் "black spot" என்கிற அதிக விபத்துகள் நிகழும் பகுதி என அறிவித்திருந்த தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கனவாய் சாலை பகுதியில் நிகழ்ந்து வந்த விபத்து மற்றும் உயிரிழப்புகள் தடுக்கும் எண்ணத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  டி.என்.வி செந்தில்குமார் அவர்கள் ஒன்றிய தரைவழி போக்குவரத்துறை அமைச்சர் அவர்களை தொடர்ந்து பல முறை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று ஒன்றிய அரசு ரூ 775 கோடியில் உயர் மட்ட சாலை அமைக்க ஒப்பந்தத புள்ளி கோரியுள்ளது இதை அடுத்து இப்பகுதியில் உயர்மட்ட சாலை அமைக்க பட உள்ளத்தால் தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Labels:

நார்த்தம்பட்டி ஊராட்சியில் ரூ14 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தொடங்கி வைத்தார்.

நல்லம்பள்ளி டிசம்பர் 16-

நார்த்தம்பட்டி ஊராட்சியில்
14 இலட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நார்த்தம்பட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நேற்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  தடங்கம் சுப்ரமணி அவர்கள் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் 7 இலட்சம் மதிப்பிலான தனி நபர் குடிநீர் இணைப்பு பணி மற்றும் அருந்ததியர் காலனி பகுதியில் 7 இலட்சம் மதிப்பிலான கழிவறை கட்டும்  பணியை தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம்,  மாவட்ட கழக பொருளாளர் தங்கமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சி.துரைசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, ராஜாராம், மாது, சன்முகம் , சரவணன், கலையரசன், இரவி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Labels:

தருமபுரி முண்டாசுப்புறவடைப் பள்ளி ஆசிரியர் ‘கனவு ஆசிரியர்’ விருதுக்குத் தேர்வு

தருமபுரி டிசம்பர் 16-

மாநிலம் முழுவதும் 8,096 பேர் பங்கேற்ற 'கனவு ஆசிரியர்' தேர்வில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முண்டாசு புறவடை ஆசிரியர் திருமதி. அ.வெ.மனோ கனவு ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆண்டு தோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதேபோல், மீத்திறன் படைத்தத் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்க கனவு ஆசிரியர் செயல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 நடப்பாண்டிற்கான முதல் நிலை தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது.
இதில், மாநிலம் முழுவதிலுமிருந்து 8,096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்ட 1,536 ஆசிரியர்களுக்கு மண்டல அளவில் இரண்டாம் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வான 964 ஆசிரியர்களுக்கு நேரடி செயல்விளக்க வகுப்பறைச் செயல்பாடுகளை மதிப்பிடுதலின் அடிப்படையில்  மூன்றாம் நிலைத்தேர்வு நடைபெற்றது. இதில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.  இவற்றில் 75சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்  பெற்ற 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41  முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 380 ஆசிரியர்கள்  
 நடப்பாண்டிற்கான கனவு ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  வரும் 19 ஆம் தேதி நாமக்கல் தனியார் கல்லூரியில்  நடைபெற உள்ள அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் 380 ஆசிரியர்களுக்கும் கனவு ஆசிரியர் விருது வழங்கிப் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர். 

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், முண்டாசுப்புறவடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் திருமதி அ.வெ.மனோ கனவு ஆசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை ஊர்ப் பொது மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். மேலும் இவர் பள்ளிக்கல்வித் துறையின் சிறார் இதழ்கள் மற்றும் கனவு ஆசிரியர் இதழுக்கான தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Labels:

Friday, December 15, 2023

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வருகின்ற செவ்வாய்க்கிழமை தருமபுரி மாவட்டத்தில் சிறு/குறு விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதலினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

தருமபுரி டிசம்பர் 15-

 தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது.

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வருகின்ற 19.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று தருமபுரி மாவட்டத்தில் சிறு/குறு விவசாயிகளிடமிருந்து ராகி கொள்முதலினை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ  ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு  ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வரப்பெற்றுள்ளது.

தருமபுரி வட்டம், தருமபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அதனை தொடர்ந்து பென்னாகரம் வட்டத்தில், வண்ணாத்திப்பட்டி கிராமம், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அரூர் வட்டத்தில், அரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும் வருகின்ற 19.12.2023 அன்று சிறு/குறு  விவசாயிகளிடம் இருந்து ராகி கொள்முதல் செய்யப்பட உள்ளது. 

எனவே தருமபுரி மாவட்டத்தில் ராகி பயிர் செய்து, அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகளும், ராகி இருப்பு வைத்துள்ள சிறு/குறு விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 



சிறு/குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த  ராகியை  சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி  கணக்கு  மற்றும் ஆதார்  எண் ஒளி நகல்கள் (Xerox copies) உள்ளிட்ட  ஆவணங்களை கொண்டு  ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.  விற்பனைக்கு கொண்டு வரும் ராகி சிறுதானியத்தை  கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வரவேண்டும்.  மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3846/- (கிலோ ஒன்றுக்கு ரூ.38.46) என்ற அடிப்படையில்  தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக  விவசாயிகளுக்கு செலுத்தப்படும். நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மாலை   2.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும்.

தமிழ்நாடு  அரசின் இந்த வாய்ப்பினை  ராகி சாகுபடி செய்த சிறு /குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் குறித்து தகவல் அறிய விரும்பினால் மண்டல மேலாளர்  அலைபேசி எண்: 9443938003, மண்டலஅலுவலக   தொலைபேசி எண் 04342-231345 உள்ளிட்ட தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Labels:

Wednesday, December 13, 2023

ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக சுற்றுலா துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா ஆணையர் நேரில் ஆய்வு.

தருமபுரி டிசம்பர் 13-

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக சுற்றுலா துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா ஆணையர் காக்கார்லா உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு.

தமிழக அரசு சுற்றுலா தலங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலம் மிகவும் பிரபலமானது. இந்த சுற்றுலா தலத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தை சர்வதேச அளவில் மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் சுமார் ரூபாய் 17 கோடியே 57 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 3.10 ஏக்கர் நிலம் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நுழைவாயில், பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்துமிடம், எண்ணெய் குளியலுக்கான இடங்கள், உடைமாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல், டிக்கெட் கவுண்டர், , பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, ஆழ்துளை கிணறு, உணவகம், சொகுசு நடைபாதை, எண்ணெய் கழிவு சுத்திகரிப்பு நிலையம், காட்சி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முதல் கட்டமாக நடைபெற்று வரும் பணிகளை இன்று தமிழக சுற்றுலா துறை முதன்மை செயலாளர் மற்றும் சுற்றுலா ஆணையர் காக்கார்ல உஷா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பென்னாகர சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி ஒகேனக்கல் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இப்பணிகளை விரைவாக முடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இரண்டாம் கட்டமாக தொடங்க உள்ள சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன், ஒகேனக்கல் தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் உதயசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Labels: