Saturday, May 25, 2024

தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

தருமபுரி திமுக செயற்குழு கூட்டம் மே-25 ல் நடைபெறும். மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA அறிவிப்பு !

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் ஆலோசனைப்படி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் வருகின்ற 25.05.2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், தருமபுரியில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் சிறப்புறையாற்ற உள்ளார்.அது சமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என தனது அறிக்கையில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

Labels:

Monday, May 13, 2024

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தர்மபுரி மே 13-

தர்மபுரி இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 2002 2004 ஆம் கல்வி ஆண்டில் படித்த வணிகவியல் வகுப்பு மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வகுப்பாசிரியர் லதா தலைமை தாங்கினார் ஆசிரியர்கள் ரத்தினசேகர், உமாதேவி உள்ளிட்டால் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர் முன்னதாக மாணவர் முரளி, நதியா, மணிகண்டன், வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் அன்றைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் பெற்றோரை பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் மாணவர்கள் தங்களது குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை ஆசிரியர்கள் மாணவர்களுடன் கூறினர் இதேபோல் மாணவர்கள் தங்களின் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்தனர் இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இறுதியாக நேதாஜி ரமேஷ் ஆகியோர் நன்றி உரை தெரிவித்தனர்.

Labels:

Monday, May 6, 2024

இளைஞர் அணி சார்பில் கோடைகாலத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தருமபுரி மே 5- 

தருமபுரி உழவர் சந்தை அருகில் இளைஞர் அணி சார்பில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார் கோவிந்தன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.சுப்ரமணி Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழரசங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்த தண்ணீர் பந்தலில் முக்கனிகள், வெள்ளரி, இளநீர் மற்றும் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர நகர நிர்வாகிகள் அழகுவேல், முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி ரவி, சம்பந்தம், கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர் மாதேஸ்வரன், சார்பு அமைப்பு மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், குமார், ரவி, ரஹீம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Labels:

பாப்பாரப்பட்டி காரிமங்கலம் உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை


தருமபுரி மே 6-

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி, காரிமங்கலத்தில் இயங்கிவரும் உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


பாப்பாரப்பட்டி, காரிமங்கலத்தில் கஸ்தூர்பா காந்தி பாலியா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி, தமிழ்நாடு அரசு - சமக்ர சிக்சா ஒருங்கிணைப்பில் சீட்ஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2013-2024 ஆம் கல்வி ஆண்டில் 19 மாணவிகள் தங்கி படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாளது.இப்பள்ளிபடித்த 19 மாணவிகளும் நூறு சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்தப் பள்ளியில் பயின்ற 19 மாணவிகளும் பள்ளிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவிகள் என்பது குறிப்பிடதக்கது. 

இப்பள்ளியில் படித்த தீபிகா 497,யுவத்ரா 494,நர்த்திகா 490, காவிய ஸ்ரீ 481, அனிதா 476, ஷாலினி 471, பூஜா 456 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித்தாளாளர் சரவணன், மேற்பார்வையாளர்கள் எல்ஜி சரவணன்,முல்லைவேந்தன் தலைமையாசிரியை சாந்தி மற்றும் மஞ்சுளா தேவி ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

Labels:

Saturday, May 4, 2024

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா


தர்மபுரி மே 4-

நீர் மோர் பந்தல் திறப்பு விழா

தர்மபுரி மேற்கு மாவட்டம் தருமபுரி கிழக்கு ஒன்றியம்  செட்டிக்கரையில்
கோடை வெயில் தாகத்தை தீர்க்க பொது மக்களுக்கு நீர்மோர் பந்தலை 
தருமபுரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.சிவகுரு அவர்கள் ஏற்பாட்டில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள் திறந்து வைத்து பொது மக்களுக்கு பழரசம், இளநீர், நீர்மோர் வழங்கினார்.
நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள்
K.P.சக்திவேல், NA.மாது, மாநில நிர்வாகிகள் அ.சத்தியமூர்த்தி, R.P.செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் K.சென்னகிருஷ்ணன், தலைமை கழக பேச்சாளர் இராசு.தமிழ்செல்வன், P.லட்சுமணன், மாவட்ட அமைப்பாளர்கள்
வெற்றிவேல், கு.தமிழழகன்,
சி.தென்னரசு, வெங்கடேசன்,
மாவட்ட துணை அமைப்பாளர்கள்
தீ.கோடிஸ்வரன், புளியம்பட்டி.ராஜா, சரவணன், சோலைமுனியப்பன், K.காளி, Dx.ஆதம், அரவிந்தன், முருகன், முனுசாமி, கனேஷ், சிங்காரவேல், JCP.மோகன், குமரவேல், கோபால்சாமி, சந்திரன், ஸ்ரீராம்,ஐடிவிங் மேகராஜ், செட்டிக்கரை கிளைகழக நிர்வாகிகள் தமிழரசன் செல்வம் சின்னசாமி மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Labels: