Friday, February 27, 2026

மூத்த தம்பதியினர்களுக்கு சிறப்புசெய்து அழகு பார்த்த மணிதாபிமாணம் கொண்ட மணிதர்கள் நெகிழ்ச்சியடைந்த மூத்த தம்பதியினர்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பொயணப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டவர் செல்லியம்மன் திருக்கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மூத்த தம்பதியினர்களுக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு செய்தல் நிகழ்ச்சி அறநிலையத்துறை செயல் அலுவவலர் ஜெயஸ்ரீ தலைமையில், பொயணப்படி முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர்,கவுண்சிலர்,மதிமுக கட்சியின் மங்களூர் மேற்கு ஒன்றிய செயலாளருமான இரா.சம்பத்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் மூத்ததம்பதியினர்களுக்கு சிறப்பு செய்வதை கண்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிறிப்பலைகளோடு மாகிழ்ச்சியைடைந்து வாழ்த்தினார்கள்.

உபயதாரர் பழக்கடை பொயணப்பாடி செந்தாமரை முத்துராமன் ஏற்ப்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக கிளைச்செயலாளர் பாலகிருஷ்ணன்,பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதைக்கண்டு ஆழ்ந்த கண்ணீர் விட்ட மூத்ததம்பதியினர்கள் நெகிழ்ச்சியைடந்தனர் மேலும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Labels:

தொழுதூரில் புதிய நியாயவிலைக்கடை அமைச்சர் கணேசன் திறந்துவைத்தார் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடலூர் 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் ஊராட்சியில் ஆதி திராவிட பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் பகுதிநேர நியாயவிலைக்கடை தனது சொந்தமுயற்சியால் அமைத்துக்கொடுத்துள்ள விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட துணை செயலாளர் தொழுதூர் இரா.ரமேஷ் ஏற்ப்பாடு செய்துகொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடைத்திறப்பு விழா இரா.ரமேஷ் தலைமையில்,வட்டாட்சியர் உதயக்குமார்,டிஎஸ்ஓ புஷ்பராஜ் முன்னிலையில்,நடைப்பெற்றது.

விசிக ம.ஒ.துணைச்செயலாறர் பிரகாஷ் வரவேற்புறையாற்றினார்.

 சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றிவைத்து நியாயவிலைக்கடையை திறந்துவைத்தார்.

இதில் பீடிஓ சண்முகசிகாமணி,இன்ஜினியர் சண்முகம்,விசிகவினர் முகாம் பொருளாலர் தொழுதூர் பாண்டியன்,திருமா காசி,ராசா,சத்தியராஜ்,தினேஷ்,ராஜகுரு,ராமதாஸ்,கார்த்திக்,மகேந்திரன்,மற்றும்அதிகாரிகள்,கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நியாயவிலைக்கடை அமைத்துக்கொடுத்த அமைச்சர் கணேசன், இரா.ரமேஷ்,மற்றும் அனைவருக்கும் நன்றித்தெரிவித்தனர் அப்பகுதி பொதுமக்கள்.

Labels:

செய்யாறில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


செய்யாறு, பிப் 27: 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் செய்யாறு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், செஞ்சி ராமச்சந்திரன், கொள்கை பரப்பு துணை செயலாளர் திரைப்பட இயக்குனர் நடிகர் ரவிமரியா, தலைமை கழக பேச்சாளர்கள் ஜாகிர் உசேன், சிட்கோ சீனு, என்.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதா ஆற்றிய மக்கள் தொண்டு மற்றும் அதிமுக அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினர்கள். கூட்டத்தில் அவைத்தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், திருமூலன், ராமநாதன், மாவட்ட நிர்வாகிகள் விமலா மகேந்திரன், மெய்யப்பன், அருணகிரி, ரவிச்சந்திரன், முனுசாமி, கோபால், கோவிந்தராஜ் அருண், இளையராஜா, தணிகாசலம், சுதாகர், மகாதேவன் , மனோகர், அபிராமி சுரேஷ், திருச்சிற்றம்பலம், எழில், ரமண முருகன்,பாலாஜி, வெங்கடேஷ், ராஜி, சரவணன், வெற்றிச்செல்வன், மேகநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Labels:

Thursday, February 26, 2026

திட்டக்குடியில் கால்நடை தீவன தொழிற்சாலை


திட்டக்குடி அருகே 33 கோடி மதிப்பீட்டில் கால்நடை தீவன தொழிற்சாலை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை ம.பொடையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் 33 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக்கன் தயாரிக்கும் திறன்கொண்ட ஆவின் கால்நடை தீவனத் தொழிற்சாலையை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து.பால்வளம்துணைப்பதிவாளர் எம். பார்த்திபன் குத்துவிளக்கேற்றிவைத்து ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதில் ஆவின் பொது மேலாளர் டாக்டர்.வி.அருணகிரிநாதன், உதவிப் பொது மேலாளர் கால்நடை டாக்டர்.எம்.சுப்ரமணி, சி.எஸ்.ஆர்., கார்த்திக், மேலாளர் பொறியியல் நேசகுமார், மேலாளர் பொறியியல் பத்மநாபன், மேலாளர் நிதி ஆனந்த் அண்ணாமலை, துணைப் மேலாளர் சிவில்எஸ்.ஸ்ரீதரன்,பொடையூர் இளங்கோவன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Labels:

Tuesday, February 24, 2026

பஞ்சப்பள்ளியில் புரட்சித் தலைவி அம்மாவின் 78-வது பிறந்தநாள் விழா: வேட்டி, சேலை வழங்கி அன்னதானத்துடன் சிறப்பான கொண்டாட்டம்!


தருமபுரி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வடக்கு ஒன்றியம், பஞ்சப்பள்ளி கிராமத்தில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழா முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.என்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அஇஅதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரும், தருமபுரி மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டார்.

விழாவின் சிறப்பம்சமாக கலைக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற ஏராளமான ஆண், பெண்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்குச் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் சேர்மன் கோபால், ஒன்றிய செயலாளர் செந்தில், இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் K.P.A. டாக்டர் சந்திரமோகன், மாவட்டத் தலைவர் குபேந்திரன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர்கள் ஜெய் சிம்மன், பாலு, ஒன்றிய அவைத் தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் குண்டன், நஞ்சுண்டன், சேகர், முனிராஜி, சண்முகம், ரகு, சுந்தரேசன், குண்டுமணி, முனிராஜி, முத்துராஜ், ஜெகதா, பெருமாள், பாபு, ஐடியா மணி, தமிழரசன், முகுந்தன் மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், கழக முன்னோடிகள், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Labels:

Monday, February 23, 2026

வேப்பூர் ரோட்டரிசங்கம் சார்பில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.


கடலூர் 

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் ரோட்டரி சங்கம் 121 ம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு வேப்பூர் ரோட்டரி சங்கம் மற்றும் வேப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு குறித்து பேரணி நடத்தினார்கள்.

பேரணிக்கு முன்னால் உதவி ஆளுநர் G.M தாசன் தலைமை தாங்கினார்.

ராமகிருஷ்னா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாலர் கதிரவன்,அவரது மகன் அவினாஷ் முன்னிலை வகித்தனர்.

வேப்பூர் ரோட்டரி சங்கத்தலைவர் ஆனந்தன் வரவேற்றார்.

சிறப்புஅழைப்பாளராக காவல் உதவி ஆய்வாளர் பிரகஸ்பதி கலந்து கொண்டு சாலைபாதுகாப்பு குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினார்.

பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் வேப்பூர் காவலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு குறித்த விளம்பரப்பதாகைகள் கையில் ஏந்திக்கொண்டு கூட்டுச்சாலையிலிருந்து பேருந்துநிலையம்,காவல்நிலையம்,அரசுப்பள்ளி வழியாக ஊர்வலமாக கோசங்கள் எழுப்பி சென்று வட்டாட்சியர் அலுவலகம் வழியாக கூட்டுச்சாலை வந்தடைந்தனர்.

இதில் துணைத்தலைவர் EV சிங்கத்துரை,வேல்முருகன்,அமானுல்லாகான்,செல்வராஜ்,ராமலிங்கம்,சுடர்ஒளி,வரதராஜன்,கனகசபை, மற்றும் வேப்பூர் ரோட்டரி சங்க குடும்ப உறுப்பினர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

புவனாசில்க்ஸ் உரிமையாளர் சரவணன்,குபேரன் எஜென்ஸி குபேரன் ஆகியோர் மாணவர்களுக்கு பிஸ்கட்,கூல்ட்ரிங்ஸ்,தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்கள்.

முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் அன்பரசன் நன்றிக்கூறினார்.

Labels:

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் காணிக்கையாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் செலுத்திய 10 டன் பூக்களை பிரிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அருணா கருவறையின் கதவை திறந்து வைத்து பூ பிரிக்கும் பணியை துவக்கி வைத்தார்


புதுக்கோட்டை  பிப்-24


புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் காணிக்கையாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் செலுத்திய 10 டன் பூக்களை பிரிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அருணா கருவறையின் கதவை திறந்து வைத்து பூ பிரிக்கும் பணியை துவக்கி வைத்தார் தற்பொழுது கோயில் முன்பு கொட்டப்பட்டுள்ள 10 டன் பல்வேறு வகையான பூக்களை கோவில் ஊழியர்கள் பூக்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு பூச்செறிதல் விழாவை முன்னிட்டு நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பல்வேறு வகையான பூக்களை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் காணிக்கையாக செலுத்தினர் இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டு வந்து கொட்டப்பட்ட 10 டன் பூக்களை இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் கருவறை கதவை திறந்து வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், நகரசயலாளர் ராஜேஷ் மாமன்ற உறுப்பினர் கனகம் ராஜேஷ் உள்ளிட்டவருக்கு மரியாதைகள் செய்யப்பட்டு பூ பிரிக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது பக்தர்களால் கொண்டு வந்து கொட்டப்பட்ட 10 டன் பல்வேறு வகையான பூக்களை கோயில் ஊழியர்கள் தற்பொழுது பிரித்து அள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மாநகரப் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்பொழுது கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Labels:

குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட அய்யனார் திருக்கோவில் மாசி மகத் திருவிழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் கூடுவதால் உள்ளூர் விடுமுறை வேண்டி பக்தர்கள் கோரிக்கை




 புதுக்கோட்டை பிப் 24


புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலத்தில் வில்லுணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலைக்கு (33 அடி உயரம்) புகழ்பெற்றது. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இக்கோவிலில் மாசிமகத் திருவிழா வருகின்ற 02,03, 2026 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை
 ஆகிய இரண்டு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது திருவிழா 15 நாள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். 14,15ஆம் நாள் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆசியா கண்டத்திலேயே மிக உயரமான குதிரை சிலைக்கு கடந்த காலங்களில் சிகினா பேப்பரில் மாலையாக கட்டி வாகனங்களில் கொண்டு வந்து குதிரை க்கு மாலை செலுத்துவார்கள். சிகினா பேப்பர் மக்கவதில்லை அதனால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளாக சாகிதபூமாலை அல்லது மலர்களான பூக்களில் மாலையாக குதிரை சிலைக்கு மாலை அணிவிக்க நீண்ட தூரம் வரிசையில் நின்று பக்தர்கள் நேத்திக் கடனை செலுத்துவார்கள். அன்றையதினமும், தெப்பதிருநாள் அன்றும் இரண்டுநாட்கள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். பந்தக் கால் முகூர்த்தம் வெகு சிறப்பாக நடைபெற்றன.
 இக்கோவிலின் சிறப்பு திங்கள், வெள்ளிக்கிழமை வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை. 
சிறப்பம்சங்கள்
பெரிய குதிரை சிலை கோவிலின் நுழைவாயிலில் 33-35 அடி உயரமுள்ள பிரம்மாண்ட குதிரை சிலை உள்ளது, இது ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலையாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு வில்லுண்ணி ஆற்றங்கரையில் கிடைத்த அய்யனார் சிலை, மீண்டும் அதே ஆற்றங்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பெருங்காரையடி மிண்ட அய்யனார் என அழைக்கப்படுகிறார்.
திருவிழா மாசி மாதத்தில் நடைபெறும் மாசி மகத் திருவிழாவில் குதிரை சிலைக்கு ராட்சத மாலை அணிவித்து வழிபாடு செய்யப்படுகிறது.
 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், குளமங்கலம் கிராமத்தில் வில்லுணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும், கலைநயமிக்க சிற்பங்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகிறது. அதனால் மார்ச் 02, 03 ஆகிய இரண்டு தினங்களில் 02ஆம் ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என விழா கமிட்டியார்கள், தெற்கு குளமங்களம், வடக்கு குளமங்களம், மற்றும் பல ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Labels:

திருமண வரவேற்பு விழாவில் மறைந்த தந்தையின் உருவப்படத்தை பார்த்து நெகிழ்ந்த மகள்


 தர்மபுரி பிப்ரவரி :24

தெய்வத் திரு.டாக்டர் செந்தில்குமார் ஸ்ரீமதி இல்லத் திருமண விழா வரவேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்கள் ஜீவபாரதி சத்தியமூர்த்தி அவர்களின் திருமண விழாவில் வான வேடிக்கை , மேள சத்தத்துடன் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின் மூலமாக வரவேற்பு விழா நடைபெற்றது . இதில் வரவேற்பு விழாவின் போது மறைந்த தந்தையின் உருவப்படம் தருமபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது பரிசு பொருட்கள் சீர் வரிசைகள் மற்றும் தந்தையினுடைய உருவ படமும் வழங்கப்பட்டது தந்தையின் உருவப்படம் திறக்கும் பொழுது அப்பாவின் நினைவை கூர்ந்து மணமகள் ஆழ்ந்த கண்ணீருடன் குடும்பத்துடன் கண்ணீர் மல்க தந்தையின் உருவப்பட முன்பு நின்று மணமகள் ஆசி பெற்றனர் இந்த தருணம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆற்றியது பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மாவட்ட செவிலியர் தலைவி மதிப்பிற்குரிய ராஜேஸ்வரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அழகு மேற்பார்வை உலகநாதன் தர்மபுரி தேமுதிக திரு . இளங்கோவன் அதிமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் மருத்துவர் அசோக் சமூக ஆர்வலர் திரு. ஹரிபிரசாத் மருத்துவர்கள் கலைச்செல்வன் கல்பனா மற்றும் பல்வேறு துறையில் இருந்து வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவர் அசோக் குமார் வரவேற்றனர்..

Labels:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டைமாட்டு வண்டி பந்தயம்


தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் மார்ச் 1ல் பிறந்த நாள் காணும் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்கைப் பந்தயம் சிறப்பாக நடைபெற்றன இவ்விழாவை திமுக மாநில கழக நிர்வாக குழு இணைச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் மாவட்ட பொறுப்பாளரும் மான எம் ஜெயக்குமார் அவர்களின் முழு ஏற்பாட்டில் நடைபெற்றன.இந்த மாட்டு வண்டி பத்தயத்தை மாநில கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து பெரிய மாடு' 07, பூஞ்சிட்டு 12, தட்டான் சிட்டு 32, கரிச்சான் 06,தேன்சிட்டு 15, புள்ளி மான் 10 ஆகிய பிரிவுகளில் இருந்து 82 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு 1 முதல் நான்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கம்பம் வடக்கு நகர் கழக செயலாளர் எம் சி வீரபாண்டியன், தெற்கு நகர் கழக செயலாளர் சி .பால் பாண்டிராஜா, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இந்த மாட்டு வண்டி போட்டிய கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்த்து கண்டு கழித்தனர்.

Labels:

Saturday, February 21, 2026

பழைய புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் பேருந்து இயக்க வேண்டுமென தலைமை செயலாளர் நா.முருகானந்தம் அவர்களிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கடிதம் அளித்து வலியுறுத்தினார்.


தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளும், அருகிலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் முன்பு போலவே பழைய புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இயக்க வேண்டுமென தலைமை செயலாளர் நா.முருகானந்தம் அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கடிதம் அளித்து வலியுறுத்தினார். 

அக்கடிதத்தில், தருமபுரி புதிய புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பார்த்தால், மாறாக குழப்பம்; மக்களுக்கு பெரும் சிரமம். தருமபுரி இதுவரை காணாத போக்குவரத்து நெரிசல். 

மாவட்டத்தின் தலைநகரம் என்ற வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, நலவாழ்வுத் துறையின் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் போன்ற மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் அலுவலகங்கள், பழைய தருமபுரி - சேலம் சாலையில் தான் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட, பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இச்சாலையில் தான் இருக்கின்றது.

புதிய ஏற்பாட்டின்படி, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் வரும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ் பிடித்து நான்கு சாலை சந்திப்புக்கு வந்து மீண்டும் ஷேர் ஆட்டோ அல்லது டவுன் பஸ் பிடித்து செல்ல வேண்டும். தலையை அறுத்து விட்ட வாத்து போல மக்கள் குழம்பித் தவிக்கிறார்கள். கடுமையான பாதிப்பு.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த மாற்றத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன? பேருந்து மாற்றத்துக்கு முன்பு செய்ய வேண்டியது என்ன? என்ற ஆய்வு செய்திருக்க வேண்டும்.

தருமபுரி நகரம் தருமபுரி மாவட்டத்தின் தலைநகரம். பல்வேறு துறைகளின் மாவட்டத் தலைமை அலுவலகங்களும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் அமைந்துள்ள பழைய தருமபுரி - சேலம் சாலை என்றைக்குமே நகரத்தின் முதன்மைச் சாலையாகத் தான் இருக்கப் போகின்றது. இந்த சாலை தருமபுரி மாவட்ட மக்கள் அனைவரும் எளிதில் வந்து செல்லும் வகையில் மாவட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். 

இப்போதைக்கு உடனடியாகச் செய்ய வேண்டியது தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளும், அருகிலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம் திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் முன்பு போலவே பழைய புறநகர் பேருந்து நிலையத்துக்குத்தான் வரவேண்டும். 

புதிய பேருந்து நிலையம் வெளிமாவட்டங்களுக்கு, வெளிமாநிலங்களுக்குச் செல்லும் விரைவுப் பேருந்து நிலையமாக பயன்படுத்தப்பட வேண்டும். இன்னும் பத்தாண்டுகளில் நகரத்தின் வளர்ச்சியை ஒட்டி மாற்றங்கள் நிகழலாம். ஆனால் மாற்றங்கள் திணிக்கப்படக் கூடாது.

பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை ஏலம் எடுத்து வாடகை செலுத்தி வரும் வணிகர்கள், சிறு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு வணிக நிறுவனங்கள் கடந்த 15 நாட்களாக வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் மிகுந்த மன உளைச்சலில் நேற்று முதல் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்துவதற்கு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்ற நிலையில் உள்ளனர்.

தற்பொழுது அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மட்டும் தற்காலிகமாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்கின்றன. இது ஒரு பகுதியில் இருந்து வரும் பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாலும், தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் பேருந்துகளும், சேலம், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளும் மீண்டும் நிரந்தரமாக பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துச்செல்லும் வகையில் இயக்கினால் மட்டுமே தருமபுரி ஒட்டுமொத்த மாவட்ட மக்களுக்கும் தீர்வு ஏற்படும்.  

பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கும், வணிகப் பெருமக்களின் வாழ்வாதாரத்திற்கும், உதவும் வகையில் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு நிரந்தரமாக மீண்டும் இயக்கவும், பழைய பேருந்து நிலையத்தை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.

Labels:

ரூ 57 கோடி மதிப்பில் 9- கிமீ நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார்


திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து ஆற்காடு திண்டிவனம் சாலை இருவழி பாதையாக இருந்தது அதனை நான்கு வழி பாதையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பாலங்கள் தடுப்பு சுவர் உள்ளிட்டவை கட்ட ரூபாய் 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டது அதேபோல் காஞ்சிபுரம் வந்தவாசி திண்டிவனம் சாலை இரு வழிப்பாதையாக இருந்தது அதனை நான்கு வழி பாதையாக அகலப்படுத்த ரூபாய் 48 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலங்கள் தடுப்புச் சுவர் பேருந்து நிறுத்த மிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது ஆக மொத்தம் 57 கோடி மதிப்பில் மொத்தம் 9- கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியினை நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் சந்திரன் உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் உதவி பொறியாளர்கள் கருணாகரன் லோகராஜா திமுக நகர செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் ஆரியத்தூர் பெருமாள் கே. ஆர்.பி.பழனி உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Labels:

Thursday, February 19, 2026

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா


கடத்தூர் 

ஏழை பெண்களுக்கு அண்ணனாக மாறி திமுக சார்பில் வளைகாப்பு விழா 
நடத்தி வைத்த மாவட்ட செயலாளர் பழனியப்பன்...!

 இதன் தொடர்ச்சியாக வளைகாப்பு விழா கடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்தி வைக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் கலந்துகொண்டு ஏழை குடும்பம் மட்டுமல்லாமல் அண்ணன் உறவு இல்லாமல் இருக்கு. கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நடத்தி வாழ்த்தினார்

 இந்த நிகழ்ச்சியில் கடத்தூர் பேரூராட்சி திமுக செயலாளர் மோகன், ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம், பேரூராட்சி தலைவர் மணி, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, சந்தோஷ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக கிளை கழக செயலாளர்,கட்சித் தொண்டர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் கணவர் பெற்றோர் உறவினர்கள் என ஏராளமானோர் 
இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர்

Labels:

Tuesday, February 17, 2026

பள்ளிப்பட்டியில் காளியம்மள் 4-ம் ஆண்டு மயானத்தில் அசுரன் சூறையாடும் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பள்ளிப்பட்டி கிராமத்தில் காளியம்மன் மற்றும் சுடலை மணி கருப்பசாமி மாசி அம்மாவாசையில் மயானத்தில் அசுரனை சூறையாடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக  நடைபெறுவது வழக்கம்.

நேற்று அதிகாலை பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மள். சுடலை மணி கருப்பசாமி ஆகிய திருக்கோவிலில் பூஜை செய்து மயானத்தில் உள்ள அசுரன் உருவ  சிலையை குத்தி வதம் செய்யப்பட்டது. பிறகு ஆடு கோழி ஆகியவை பலியிட்டு பக்தர்கள் காளியம்மாள் சாமியே வழிபாடு செய்தனர். மயணத்தில் உள்ள நவதானிய படையல்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


அது தொடர்ந்து காளியம்மாள். சுடலை மணி கருப்பசாமி ஆகிய வேடம் அணிந்து மயணத்தில் இருந்து காளியம்மாள் கருவறை வரைக்கும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லியபடி நடந்தே சென்று காளியம்மாள் கோவில் கருவறையில் கும்ப படையலிட்டு பக்தர்களுக்கு சாமி சிறப்பு அலங்காரத்தில்  காட்சியளித்தார். மாசி மாத அமாவாசை விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.