Saturday, June 29, 2024

அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து விசிக உறுப்பினர் தர்ணா

 பென்னாகரம், ஜூன்.29-

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்தாவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளனர். இதில் திமுக கூட்டணி - 11 அதிமுக - 2, பாமக - 2, தேமுதிக - 2, சுயேட்சை - 1 என வெற்றி பெற்றன. பென்னாகரம் பேரூராட்சி தலைவராக திமுகவை சார்ந்த வீரமணி உள்ளார். மாதாந்திர பேரூராட்சி மன்ற கூட்டமானது அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பத்தாவது வார்டு உறுப்பினரான விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரேவதி, கூட்டத்தில் தனது வார்டில் உள்ள ஆதி திராவிடர் காலனி சுடுகாட்டிற்கு சுற்றுச்சூழல் அமைத்து தர வேண்டும்,ஆதிதிராவிடர் காலனி சுடுகாடு புது காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும், மின் கம்பங்கள் வசதி,இருளர் காலனி பகுதியில் சாக்கடை கால்வாய், புது காலனி பகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய பலமுறை மனு அளித்திருப்பதாகவும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினரிடம், பேரூராட்சித் தலைவர் வீரமணி, தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு அளிக்கும் பட்சத்தில், பேரூராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிப்பதாகவும், இதர பணிகளை 15 வது நிதி குழுவின் மூலம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு தர்ணாவில் ஈடுபட்ட விசிக வார்டு உறுப்பினர் கலைந்து சென்றார்.

Labels:

பாலின விகிதம் குறித்து சட்ட விரோதமாக பரிசோதனை செய்த நான்கு பேர் கைது


பென்னாகரம், ஜூன்.29-

பென்னாகரம் அருகே ஏர்ரபையன அள்ளியில் சட்டவிரோதமாக குழந்தைகளின் பாலின குறித்து பரிசோதனை மேற்கொண்டதாக பெண் உள்ளிட்ட நான்கு பேரை மாவட்ட சுகாதார துறையினர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளின் பாலினம் குறித்து ரகசியமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எரப்பையன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தப்பா நகர் பகுதியில் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது தனியாக உள்ள ஒரு வீட்டில் குழந்தையின் பாலினம் குறித்துசட்டவிரோதமாக பரிசோதனை மேற்கொண்டதாக நான்கு பேரை போலீசாரின் உதவியுடன் பிடித்தனர்.பின்னர் நடத்திய விசாரணையில் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (48), நடராஜன் (40), சின்னராஜ் (28), இண்டூர் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் லலிதா (42) என்பது தெரிய வந்தது.மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வந்தது தெரிய வந்தது. பின்னர் இடைத்தரகர் உள்ளிட்ட நான்கு பேரை பென்னாகரம் போலீஸார் கைது செய்தனர்.பின்னர் செய்தியாளர்கள் இடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி கூறியதாவது: எரப்பையன அள்ளி பகுதியில் கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து பாலின விகிதம் குறித்து சட்டவிரோதமாக பரிசோதனை மேற்கொள்வதாக மாவட்ட மருத்துவ நலப் பணிகள் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சிறப்பு குழுவினர்,கடந்த சில நாட்களாக இந்த நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் இன்னொரு பகுதியில் இருந்து புரோக்கர் லலிதா என்பவரின் மூலம் ஐந்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண் அழைத்து வரப்பட்டு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவருடன் நான்கு பேர் கொண்ட குழுவினர் சட்ட விரோதமாக கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதற்காக இயந்திரத்தின் உதவியிடம் பரிசோதனை மேற்கொள்ளும் போது சிறப்பு குழுவினரால் பிடிக்கப்பட்டனர்.இது போன்ற செயலுக்கு கணவரும் உறுதுணையாக உள்ளதால்,தர்மபுரி மாவட்டத்தில் குறிப்பாக நல்லம்பள்ளி வட்டத்தில் பெண் குழந்தைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கலைப்பு கும்பல் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

Labels:

Friday, June 21, 2024

சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சந்திர நமஸ்காரம் என்ற தலைப்பில் சர்வதேச யோகா தின விழா உலக சாதனைக்காக 2500 மாணவர்கள் பங்கேற்று கொண்டாடப்பட்டது


சேலம் ஜீன் 21-

சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சந்திர நமஸ்காரம் என்ற தலைப்பில் சர்வதேச யோகா தின விழா உலக சாதனைக்காக 2500 மாணவர்கள் பங்கேற்று கொண்டாடப்பட்டது 

சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா கல்லூயின் விளையாட்டு மைதானத்தில் உலக சாதனைக்காக 2500 மாணவர்கள் பங்கேற்று கொண்டாடப்பட்டது.

சோனா கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் தலைமை விருந்தினராக சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் டாக்டர்.கே.நாராயணசாமி மற்றும் உலகளவில் வென்ற ஹாட் மாண்டே மிஸஸ் இந்தியா 2021 திருமதி அமிஷா சேதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி உலகமே ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு யோகாவின் பண்டைய இந்திய பயிற்சி மற்றும் உடல், மன மற்றும் ஆன்மீக நல்வாழ்வில் அதன் ஆழமான தாக்கத்தை அங்கீகரிக்கிறது என்று சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் டாக்டர்.கே.நாராயணசாமி கூறினார்.

இதனை தொடர்ந்து சர்வதேச யோகா தினத்தின் 10வது பதிப்பைக் கடைப்பிடிக்க உலகம் தயாராகி வரும் நிலையில், நமது மதிப்பிற்குரிய சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவின் மருத்துவக் கல்லூரி, சந்திரயானை சந்திர நமஸ்காரத்துடன் இணைப்பதன் மூலம் முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா'. இந்த ஆண்டு ஒரு சிறப்பு மைல்கல்லைக் குறிக்கிறது யோகா என்பது தனிமனித நல்வாழ்வைப் பற்றியது மட்டுமல்ல; இது உள் சுயத்திற்கும் வெளி உலகத்திற்கும் இடையே ஒரு தொடர்பை வளர்க்கிறது என்றும் சோனாவில் சந்திராயன் டூ சந்திரநமஸ்காரம் என்று துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், ஜி.எம்.காதர்நவாஷ், இ.ஜெ.கவிதா, நரேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Labels:

பல்லடம் அருகே புதிய 2 குடிநீர் மேல்நிலை நீர் தேக்கதொட்டிகள் திறப்பு விழா.


பல்லடம், ஜூன் 21-

பல்லடம் அருகே கிடாத்துறை, 
பல்லவராயன்பாளையத்தில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது. பல்லடம் ஒன்றியம், பூமலூர் ஊராட்சி கிடாத்துறை, பல்லவராயன்பாளையத் தில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் ரூ.18 லட்சம் மதிப்பில், தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளாளவு கொண்ட இரண்டு புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்ப ணிப்பு செய்யும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
இதில், பூமலூர் ஊராட்சி தலைவர் பிரியங்கா, துணைத்தலைவர் நடராஜ், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் பரமசிவம், 
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் பூபதி, பாலசுப்பிரமணியம், சிவசாமி, வேல்முருகசாமி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Labels:

திருப்பூரில் 156 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்.


திருப்பூர், ஜுன்.21-

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்.ரவி மற்றும் பாலமுருகன் அடங்கிய குழுவினர் நேற்று 20.06.2024 காலை திருப்பூர் நகரம், தாராபுரம் ரோட்டிலுள்ள பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் வணிகம் செய்த பேக்கரிக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை, பிளாஸ்டிக் ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தியதை கண்டறியப்பட்ட பேக்கரிக்கு இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது. 
மேலும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத, லேபிள் விதிகள் கடைபிடிக்காமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2கிலோ பிரட், 10லிட்டர் குளிர்பானங்கள், 3 கிலோ அளவிலான திண்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 
மேலும் ஆய்வின் போது ஒரு மளிகை கடையில் நிறமிகள் கலந்த கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் மேற்படி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 156 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்து. மேற்படி கலப்பட டீத்தூளானது உணவு மாதிரியாக எடுக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்திற்க்கு பகுப்பாய்விற்க்காக அனுப்பப்பட்டது. மேலும் மேற்படி கடையில் சுமார் 18 கிலோ அளவிலான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்டதோடு நோட்டீஸும் வழங்கப்பட்டது. இன்றைய ஆய்வின் போது மொத்தம் ரூ.8,000/- அபராதம் விதிக்கப்பட்டு, 3 நோட்டீஸ் வழங்ப்பட்டது.

மேலும் உணவின் தரம் சார்ந்த ஜட்ஜ் ஜ் 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது tn food safety consumer complaint app - ல் பதிவேற்றம் செய்ய பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Labels: