Wednesday, November 29, 2023

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் உழைக்கும் மக்களின் கோரிக்கைளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் நவ 29-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கத்தில் உள்ள கட்டிட தொழிலாளர் சங்கம், எலக்ட்ரிசியன் தொழிலாளர் சங்கம், வி.தொ.ச மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜதொழிவாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26000 வழங்க வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ற வேலையை உருவாக்க வேண்டும் கட்டுமான தொழிலாளிக்கு ஓய்வூதியம் மாதம் 6.000 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட உழைக்கும் மக்களின் கோரிக்கைளை நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த தர்ணா போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் எம்.வி.குழந்தைவேல் தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட துணை தலைவர் ஏ.முருகேசன், தமிழ்நாடு ஏஐடியூசி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு ஏஐடியூசி மாநில துணைத்தலைவரும், தர்மபுரி மாவட்ட பொதுச்செயலாளருமான கே.மணி தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் ஏ.சி.மணி,மாவட்ட துணை செயலாளர் ஆர்.சுதர்சனன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் என்.மனோகரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சி.சிவன் ஆகியோர் பேசினார்கள்.

இறுதியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் எம்.மாதேஸ்வரன் சிறப்புரையாற்றி நிறைவு செய்தார்.

இந்த தர்ணா போராட்டத்தில் எம்.ராஜ்,பி.முனியம்மாள், பெருமா, முத்தம்மா, சண்முகம், அர்ச்சுணன், சந்திரன், பாலகிருஷ்ணன், அப்பாதுரை, மகேஸ்வரி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

Saturday, November 25, 2023

தருமபுரி மாவட்டத்தில் புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கவேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்.

தருமபுரி நவ 25-

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி வின்சென்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ஜி.சதீஸ் தலைமை வகித்தார்.மாவட்டதுணைத்தலைவர் ஆர்.ஆனந்தவிஜியரங்கன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலசெயற்குழு உறுப்பினர் ச.இளங்குமரன் வரவேற்றார். மாநிலதுணைத்தலைவர் இரா.ஆறுமுகம் துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் பா.சங்கர் வேலை அறிக்கை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் கு.சரவோத்தமன் வரவு செலவு கண்க்கை சமர்பித்தார்.  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி கு.மரியம்ரெஜினா , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.வட்டாரவளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.விமலன், மாவட்ட துணைத்தலைவர கோபிநாத், மாவட்ட இணைசெயலாளர்கள் வினோத்குமார்,பெ.கிருஷ்ணமூர்த்தி வெ.தர்மன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக மு.முகமது இலியாஸ்,மாவட்ட செயலாளராக வெ.தர்மன்,மாவட்ட பொருளாளராக க.வினோத்குமார்,மாநில செயற்குழு உறுப்பினராக பா.சங்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளராக சா.இளங்குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 தருமபுரி மாவட்ட பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்-2 ஐ விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் தொகை மற்றும் பரப்பளவு அதிகமாகவுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் அடிப்படை வசதிகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திலிருந்து இண்டூர், 
அரூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து தீர்த்தமலை மற்றும் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திலிருந்து மாரண்டஅள்ளி என மூன்று புதிய ஊராட்சி ஒன்றியங்களை தோற்றுவிக்க வேண்டும்.

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தை மலைப்பகுதியென வரையறுத்து அதற்கேற்ற மலைப்பகுதிப் படி வழங்க வேண்டும்.

ஒகேனக்கல், வத்தல்மலை மற்றும் தீர்த்தமலை ஆகிய சுற்றுலா தளப் பகுதிகளுக்கு தினந்தோறும் வெளியூர் மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட இப்பகுதிக்கேற்ற புதிய திட்டங்களை அனுமதிக்கவேண்டும்.
 தருமபுரி மாவட்ட மக்களின் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த சிப்காட் பணியினை விரைவில் செயல்படுத்தவேண்டும்.

மாவட்ட ஊராட்சி, சத்துணவுப் பிரிவு மற்றும் மாவட்ட இயக்கக மேலாண்மை அலகு ஆகிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான பணியிடம் உருவாக்கவேண்டும்.
 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள பதவிகளான இளநிலை உதவியாளர்
மற்றும் உதவியாளர் பதவிகளை இளநிலை ஊரக அலுவலர் மற்றும் முதுநிலை ஊரக அலுவலர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். தொலை தூரம் பயணம் செய்து பணிபுரிந்து வருவதால் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களையும் அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாறுதல் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்கப்படும் நேர்வுகளில் அரசாணை (நிலை) எண்.127-னை பின்பற்ற வேண்டும்.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Labels:

Monday, November 20, 2023

தருமபுரியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

பென்னாகரம் நவ 20-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி மல்லிகை மஹாலில் இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2023, மாவட்ட அளவிலான விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 1915 பயனாளிகளுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:-


கூட்டுறவு வார விழாவானது, அகில இந்திய அளவில் ஆண்டுதோறும் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14-ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 20-ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்பொழுது 70-வது அகில இந்தியக் கூட்டுறவு வாரவிழா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு" எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 498 முழுநேர நியாய விலைக்கடைகளும், 586 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1084 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலைக் கடைகளில் 4,68,364 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம்பருப்பு ஆகியன விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 2022-23-ஆம் நிதியாண்டில் 61,405 விவசாயிகளுக்கு ரூ.499.95 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,89,458 நபர்களுக்கு ரூ.1464.15 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
 2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 28,159 விவசாயிகளுக்கு ரூ.251.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,16,332 நபர்களுக்கு ரூ.936.35 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
 கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகள் மூலம் பயிர்க்கடன் மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கடன்கள் குறைந்த வட்டிவிகித்தில் நகைக் கடன்கள், பண்ணைச்சாராக் கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள், சிறு வணிகக் கடன். மாற்றுத்திறனாளிகள் கடன்கள், டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்துபவருக்கு 7% வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.
 முன்னதாக, 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் கூட்டுறவு வாரவிழா உறுதிமொழியானது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

மேலும், இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 922 நபர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.774.46 இலட்சமும், கால்நடை பராமரிப்பு கடன் 303 நபர்களுக்கு ரூ.131.18 இலட்சமும், 34 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 523 பயனாளிகளுக்கு ரூ.464.11 இலட்சமும், மாற்றுத் திறனாளி கடன்கள் 54 நபர்களுக்கு ரூ.27.71 இலட்சமும், டாம்கோ தனி நபர் கடனாக 34 நபர்களுக்கு ரூ.23.18 இலட்சமும், டாம்கோ குழுக் கடனாக 71 நபர்களுக்கு ரூ.38.66 இலட்சம், வீடு அடமானக் கடன் 8 நபர்களுக்கு ரூ.77.50 இலட்சமும் ஆக மொத்தம் இவ்விழாவில் 1915 உறுப்பினர்களுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் வழங்கினார்கள்.
 
இவ்விழாவில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் பி தர்மசெல்வன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. ஆர்.கவிதா ராமகிருஷ்ணன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் திரு. எம்.வீரமணி, பருவதனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. எம்.ராணி முனிராசு உட்பட கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். 

Labels:

சர்வதேச சிறுதானிய திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்

தருமபுரி நவ 20-

2023-24-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானிய திருவிழா இன்று தருமபுரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.

மேலும், சிறுதானியங்கள் முக்கியதுவம் குறித்து கண்காட்சி அரங்குகள் அமைத்து, அனைத்து வகையான பாராம்பரிய சிறுதானிய சிறப்புகள் தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள் வழங்கி பல்வகை சிறுதானிய உணவுகளை தயார் செய்து அச்சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து குறிப்புகளுடன் நுகர்வோராகிய பொது மக்களின் பார்வைக்கு வைத்து (பள்ளி, கல்லூரி,  மாணவர்கள்) விநியோகம் செய்து நேரடி விளக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நம் முன்னோர்களால் ஆதி காலத்திலிருந்தே உண்ணப்பட்டுவந்த ஆரோக்கியமான உணவில் முதல் இடத்தைப் பிடிப்பவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு. தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவைதான். எனவே, இந்தியாவின் பாரம்பரியமிக்க சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்ததால், 2023-ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.

 உடலுக்கு நல்லது என்று பல உணவு வகைகளைப் பயன்படுத்தும் நாம், சிறுதானிய உணவுகளை உண்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டோம். ஆரோக்கியத்தைப் பேணுவதற்குத் தேவையான அனைத்து சத்துக்களும் சிறுதானியங்களில் உள்ளது. சிறுதானியங்களில் நார்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் நாம் உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.
 சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவக் குணம் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்களும் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருட்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள கிளைசிமிக் இன்டெக்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது.
 இதிலுள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு ஆகும். சிறுதானியங்களில் உள்ள லிக்னின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. இது குடல் சுத்தமாவதற்கு மிகவும் உதவுகிறது. மாதவிடாய் பிரச்சினை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கும் வல்லமை சிறுதானிய உணவுக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்சினைகள் வராமல் சிறுதானியங்கள் தடுக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் உடல் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதி அளிக்கின்றன.
 அதிக சத்துக்களுடன் நிறைந்த மருத்துவ குணங்களையும் உள்ளடக்கிய சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை மாறி, சிறுதானிய உணவுப் பழக்கம் வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி,  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளார் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ராஜகுரு, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்ககல்வி) திருமதி.இ.மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Labels:

தடுப்பணையை தனி நபர் ஆக்கிரமிப்பு ..... விவசாயம் அழிந்து வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்..

பென்னாகரம் நவ 20-

தருமபுரி  மாவட்டம்
பென்னாகரம் அருகேவுள்ள மஞ்சநாய்க்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இருவர் நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த விவசாயிகள்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது தங்களது கிராமமான புதுப்பட்டி வருகூரான் கொட்டாய் கிராமத்தில் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி செல்லும் வழியில் தடுப்பணை ஒன்று இருந்து வந்தாதகவும், மழை காலங்களில் அந்த தடுப்பணை நிரம்பும் போது சுற்றுவட்டார பகுதி விவசாயத்திற்கு பயனுள்ளதாகவும், தவிர சுற்றுப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்வதால்  தங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக தடுப்பணை இருந்து வந்தது, இந்த தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை  அதே ஊரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது மனைவி வெண்ணிலா ஆகியோர் தனிபட்ட  சுய லாபத்திற்காக சமீபத்தில் தடுப்பணையை உடைத்து சேதபடுத்தி ஆக்கரமிப்பு செய்துவிட்டதால், தங்களது விவசாயம் அடியோடு அழிந்து வருவதாகவும், நீர் ஆதாரமும் கேள்வி குறியாகிவிட்டதாக தெரிவிக்கும் விவசாயிகள், தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை  உடைத்து ஆக்கிரத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, விவசாயிகள் பயன் பெறும் வகையில் மீண்டும் தடுப்பணையினை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை, இதற்காகவே தண்ணீரின்றி வாடி வரும் நெற்பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்..

தடுப்பணை ஆக்கிரமிப்பு குறித்து  கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாச்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு முறையாக தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவதால், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப்பதாகவும்,  தங்களது கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஒன்று திரண்டு போரட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என  அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்  

Labels:

Sunday, November 19, 2023

குடியரசு தலைவருக்கு அனுப்பும் வகையில் விவசாய தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்

தருமபுரி நவ 19-

பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வன்கொடுமை தடுப்பு சட்டம் நீர்த்து போகாத வகையில் அமலாக்க வலியுறுத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் அருகே உள்ள தளவாய்அள்ளி, சோளப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் எம்.மாதேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார்.
பட்டியலினம், பழங்குடி மக்களின் வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகாத வகையில் அமுலாக்க வேண்டும். 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிளாளர்களுக்கு 3 மாத கால நிலுவை தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.100நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ600 வழங்வேண்டும். நிலமற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கோரிக்கை சாசனம் கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இண்டூர் வட்டார செயலாளர் பி.மாது,துணை செயலாளர் வி.மணி,விதொச வட்டார தலைவர் எம்.முனுசாமி, வட்டார செயலாளர் எம்.மாதையன், துணை செயலாளர் மாதேசன்,நிர்வாகிகள் சங்கரன், முனுசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Labels:

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு

பென்னாகரம் நவ 19-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறியும் வகையில் ஒளிபுகா அரை மற்றும் நவீன உபகரணங்களும் கூடிய செவித்திறன் பரிசோதனை அறை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் மாவட்டம் மருத்துவ இணை இயக்குனர் நலப் பணிகள் எம். சாந்தி கலந்து கொண்டு ரூ 12 லட்சம் மதிப்பிலான ஒழிப்புகாரை 78 ஆயிரம் மதிப்புள்ள ஆடியோகிராப் கருவி 2.40 லட்சம் மதிப்பிலான நடுசெவி பரிசோதனை கருவி அஞ்சு புள்ளி 54 லட்சம் மதிப்பிலான உள் காது செவித்திறன் பரிசோதனை கருவி ஆகியவற்றுடன் கூடிய அதிநவீன செவித்திறன் பரிசோதனை அறையினை குத்து விளக்கேற்றி திறந்து வைத்து மருத்துவமனையில் பிறந்த நான்கு நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு செவித்திறன் பரிசோதனையை செய்து தொடங்கி வைத்தார். 

மேலும் அதிநவீன செவித்திறன் பரிசோதனையை தனியார் மருத்துவமனையில் செய்ய 4000 ரூபாய் செலவாகும் எனவும் தற்போது அரசு மருத்துவமனையில் அதிநவீன செவித்திறன் அரைக்கப்பட்டுள்ளதால் பெண்ணாகரம் பகுதி மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் கனிமொழி காது,  மூக்கு,  தொண்டை நிபுணர்கள் மருத்துவர்கள் ஜே பாலாஜி நித்யா உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் அருண் பிரசாத் கேட்பியல் துறை நிபுணர்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Labels:

Saturday, November 18, 2023

சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

பாப்பிரெட்டிப்பட்டி நவ 18-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு  அரவைப் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்கள்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அரவைக்கு சுமார் 10,000 ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டு சுமார் 3,25,000 மெ.டன்கள் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 
கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலை அரவைக்கு கரும்பினைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் சுமார் 200 வண்டிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனவே அனைத்து விவசாய பெருமக்களும் ஆலைக்கு சுத்தமான கரும்பை வெட்டி அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது. 
கடந்த அரவைப்பருவத்தில் 10.91 சதம் சர்க்கரை கட்டுமானம் எய்தியதன் அடிப்படையில் நடப்பாண்டில் அரவை செய்யப்படும் கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.3349.55 வீதம் வழங்கப்படும். இது தமிழகத்திலேயே டன் ஒன்றிற்கான கரும்பின் அதிகபட்ச விலை ஆகும்.
தமிழ்நாடு அரசு கடந்த 2022-23 அரவைப் பருவத்தில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு உற்பத்தி ஊக்கத் தொகை அவர்கள் அனுப்பிய கரும்பிற்கு டன் ஒன்றுக்கு ரூ.195.00 வீதம் வழங்க உத்திரவிட்டுள்ளது. அத்தொகையானது 4607 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அதாவது ரூ.712.00 இலட்சம் நேரடியாக அனுப்பப்பட உள்ளது.
மேலும் கரும்பு வெட்டு ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெட்டுக் கூலியை குறைக்கவும் ஆலையில் இரண்டு கரும்பு அறுவடை இயந்திரங்களும், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்த கரும்பை ஆலையில் இறக்க தனியான இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2022-2023-ஆம் அரவைக்கு 11,000 டன்கள் கரும்பு இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து அங்கத்தினர்களை ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு அரவைக்கு சுமார் 30,000 டன்கள் இயந்திர அறுவடை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
கரும்பு சாகுபடி இயந்திரங்கள் மற்றும் கரும்பு வெட்டு இயந்திரங்களை பயன்படுத்த ஏதுவாக விவசாயிகள் தங்களது நிலத்தில் நான்கரை அடி இடைவெளியில் அகலப்பார் முறையில், தமிழ்நாடு அரசின் மானியத்துடன் கூடிய நிலத்தடி சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைத்து கரும்பு சாகுபடி மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடப்பு 2023-24ஆம் நிதி ஆண்டிற்கு (KAVIADP) பருநாற்று நடவு மற்றும் ஒரு பரு கரணை நடவிற்கு 24 பயனாளிகளுக்கு 15.16 ஹெக்டருக்கு ரூ.1,57,475/- மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் (NADP) வல்லுநர் விதை கரும்பு, திசு வளர்ப்பு நாற்று, பருநாற்று நடவு, ஒரு பரு கரணை மற்றும் சோகை தூளாக்குதல் ஆகியவற்றிற்கு நடப்பு 2023-24ஆம் நிதி ஆண்டிற்கு 55 பயனாளிகளுக்கு 43.80 ஹெக்டருக்கு ரூ.5,17,250/- மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பயிர் காப்பீடு ஒரு ஏக்கருக்கு ரூ.2914.60/- காப்பீடு நிறுவனம் IFFCO Tokio மூலம் மார்ச் 30-க்குள் (2024) செலுத்தி பயன்பெற அனைத்து விவசாமிகளையும் கேட்டுக்கொள்ளபடுகின்றது.
சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வேர்புழு தாக்குதலின் தாக்கம் 473.75 ஏக்கரில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதால் தாக்கம் ஏற்பட்டுள்ள வயல்களுக்கு வெட்டு உத்திரவு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் திருமதி.உண்ணாமலை குணசேகரன், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் திரு.தாமோதரன், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.குமார், கோபாலபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் திரு.விஜயகாந்த் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Labels:

Thursday, November 16, 2023

செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரை


சென்னை நவ 15-

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கெனவே அவருக்கு ஆஞ்சியா பிளாஸ்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு இதயம் சார்ந்த பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அவருக்கு கழுத்து வலிப்பதாக கூறியதால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு மேல் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

அவருக்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து மருத்துவ பரிசோதனை முடிவுகளும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சில நேரங்களில் கால் மறுத்துபோவதாகவும், கால் நரம்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதையடுத்து காலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்காக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த பரிசோதனைகளின் முடிவின் அடிப்படையிலும், ஏற்கனவே அவருக்கு ஆஞ்சியா பிளாஸ்ட் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Labels:

Wednesday, November 15, 2023

அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டி கருப்புத் துணியால் பஞ்சாயத்து அலுவலகத்தை மூடும் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம் நவ15-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டி பெரிய கடமடையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை கருப்புத் துணியால் மூடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வழங்கும் நலத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் இதில் வீடு வழங்கும் திட்டம் கழிவறை வழங்கும் திட்டம் ஆடு வழங்கும் திட்டம் மாடு வழங்கும் திட்டம் ஆட்டு கொட்டகை மற்றும் மாட்டு கொட்டகை வழங்கும் திட்டம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மாற்று திறனாளிகளுக்கு தடையில்லா சூழலை ஏற்படுத்த வேண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு மின்சார வசதி தெரு விளக்கு வசதி குடிநீர் வசதி கிராம மகளிர் வருமை ஒழிப்பு மகளிர் மேம்பாட்டு திட்டத்திலும் மஞ்சநாயக்கஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு ஊழலை கண்டித்தும் சின்னகடமடைஏரி ஜீவா நகர் தாலஉப்ப ஏரிகளில் தூர்வாரிய முறைகேடுகளை கண்டித்தும் கிராமசபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வைக்கும் கோரிக்கைகளை ஏற்பதில்லை எனவும் மஞ்சநாயக்கனஹள்ளி பஞ்சாயத்து உட்பட்ட புறம்போக்கு நிலம் நீர் பிடிப்பு நிலம் குட்டைகள் வாய்க்காள்கள் போன்றவைகளை ஆக்கிரமித்தவர்களையும் கண்டு கொள்வதில்லை எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்டத் தலைவர் கரூரான் மாவட்டத் துணைத் தலைவர் சின்ன மாதையன் வட்டத் தலைவர் சக்திவேல் வட்ட துணை தலைவர் மாரியப்பன் வட்ட குழு சாலம்மாள் மகேந்திரன் புவனேஸ்வரி சண்முகம் சக்தி ராஜேஸ்வரி கதிர்வேல் கமலேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார் இதில் பெரும்பாலை காவல் உதவி ஆய்வாளர் மோகன் சின்னமாதன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்

Labels:

வீட்டை சேதப்படுத்திய நபர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு.

தருமபுரி நவ 15-

முன்னறிவிப்பின்றி வீட்டை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் மனு. 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதி காந்தி நகரில் வசித்து வரும் ராணி என்பவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு அரசாங்கம் வழங்கிய யூ டி ஆர் பட்டாவில் வீடு கட்டி குடியிருந்த வருகிறார் இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராமு என்பவர் கடப்பாரையை கொண்டு வீட்டின் மேலே போடப்பட்டுள்ள சிமெண்ட் சீட்டை உடைத்தார் சத்தம் கேட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டோம்.ஏன் இப்படி செய்கிறீர்கள் முன் அறிவிப்பு இன்றி எங்கள் வீட்டை ஏன் உடைக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது இது எங்கள் நிலம் எங்களுக்கு சேர வேண்டியது என்று எங்களை அச்சுறுத்தும் வகையில் ராமு என்பவர் மிரட்டல் விடுத்தார் மேலும் உங்களை குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்று கூறினார் மேலும் நான் வருவாய்த் துறையில் பணிபுரிகிறேன் உங்களால் என்னை என்ன செய்ய முடியும் என்று எங்களை மிரட்டினார் மேலும் அதிகாரிகளிடம் மனு கொடுத்து சர்வேர்கள் அளந்து போதும் அவர் வருவாய்த் துறையில் பணிபுரிகிறார் என்பதால் அவருக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள் எனவே எங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளித்தும் எங்கள் வீட்டை மீட்டுக் கொடுத்து எதிரிகளிடமிருந்து எங்களை காப்பாற்றுமாறு  அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Labels:

Monday, November 13, 2023

மின்சாரத்தை தனியார் மயமாக்கும் நோக்கில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திமின்வாரிய அலுவலகங்களில் மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முடிவு

தருமபுரி நவ 13-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஆர். சின்னசாமி தலைமையில் இன்று (13.11.23) தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் அ.குமார் அறிக்கை சமர்ப்பித்தார். மாநிலக்குழு உறுப்பினர் இரா. சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், ஆர்.மல்லிகா, வி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

2025 டிசம்பர் 31க்குள் இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் ஸ்மார்ட் மீட்டர் எனப்படும் மின் மீட்டர்களை பொருத்த வேண்டுமென ஒன்றிய அரசாங்கம் நிர்பந்தப்படுத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பிரிபெய்ட் மீட்டர்களாகவும் செயல்படும். இந்த மீட்டர்கள் முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும் வரை மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வை கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரமாக கூறி கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதற்கும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சாதாரணக் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் வகையிலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமான சாதாரண கட்டணத்தை வசூலிக்கும் முறையிலும் கணக்கிட்டு மின் கட்டணத்தை பிரிபெய்டு அட்டையிலிருந்து எடுத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் நுகர்வோர், எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறாரரோ, அந்த நிறுவனத்திடம் இருந்து முன்பணம் செலுத்தி பிரிபெய்டு அட்டைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இதை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசின் உட்கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வதற்கு இது வழிவகை செய்யும். 

தனியார் நிறுவனங்களிலும் பிரிபெய்டு அட்டைகள் பெறுவதன் மூலம்  இப்போது பெறுகிற இலவச மின்சாரமோ, மானியங்களோ இல்லாத நிலை உருவாகும். தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள திட்டமே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டமாகும். மேலும், ஆரம்பத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு கட்டணம் ஏதும் வசூலிக்காமல் எல்லோரும் ஏற்றபின்பு ஸ்மார்ட் மீட்டரின் விலையை மின் நுகர்வோரிடம் மாதந்தோறும் வசூலிப்பதற்கான சூழ்ச்சியும் இதற்குள் அடங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தவும், வீடுகளுக்கும், விவசாயத்திற்கும், விசைத்தறிக்கும் உள்ள இலவச மின் சலுகைகளை பறிப்பதற்கும் மொத்த மின்சார வாரியத்தை கலைத்து தனியார் வசம் மின் விநியோகத்தை ஒப்படைக்கும் நோக்கங்களோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மாநிலங்களுக்கு நிதி உதவி செய்வதாகவும் ஒன்றிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதை ஏற்கவில்லை யென்றால் அந்த நிதி உதவி கிடைக்காது என்றும், இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கூடுதல் சுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ஒன்றிய அரசு பயமுறுத்தி வருகிறது.

 மின் நுகர்வோர் மற்றும் மின் ஊழியர்களும் தொழில் அமைப்புகளும் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்த திட்டத்தில்  உள்ள சூழ்ச்சிகளை உணர்ந்து இதை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இதனால், ஏற்படும் ரூ. 9 ஆயிரம் கோடி இழப்பை ஈடுகட்டும் வகையில் பிற வழிகளில் நிதி திரட்டவும் உத்தேசித்துள்ளது.

எனவே, இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி அதே சமயம், தனியார் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரியத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு எந்த காரணம் கொண்டும் அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வீடு வீடாக மக்களைச் சந்தித்து ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் அபாயத்தை எடுத்துரைத்தும், இதனை கைவிட வலியுறுத்தியும் மக்களைத் திரட்டி மாவட்டம் முழுவதும் மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளது. இந்தப் போராட்டத்திற்கு  பொது மக்களும்,  விவசாய பெருங்குடி மக்களும், நெசவாளர்களும், வணிகப் பெருமக்களும், குறு-சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்ளிட்டு அனைத்து ஜனநாயக சக்திகளும் பேராதரவளிக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய பாக்கியை வழங்குக

ஒன்றிய பாஜக அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைத்து சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டுக்கு 40 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை. பல பகுதிகளில் இரண்டு, மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக கிராமப்புற பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி நல்லம்பள்ளியில் நவம்பர் இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
    
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போரைத் தடுத்து நிறுத்திட
 
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களில் மூவாயிரம் குழந்தைகள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இஸ்ரேலின் கொடுங் கோன்மைக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது. இதனைக் கண்டித்து, போரை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 14 ம் தேதி அரூரிலும், நவம்பர் 18 ம் தேதி தருமபுரியிலும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டுகிறோம்.


Labels:

ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி


நல்லம்பள்ளி நவ  13-

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தின்ன அள்ளி ஊராட்சி கொல்ல கொட்டாய் மாரியம்மன் கோயில் அருகில் இருந்து விஜயநகர் வரை ரூ 38 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் இதற்கான பூமி பூஜையில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சசிகுமார், மாவட்ட பிரதிநிதி மோகன்,  மாதேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் துரை மற்றும் கஜேந்திரன், வேடியப்பன்,  ராமு, சின்னசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

Sunday, November 12, 2023

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Labels:

Saturday, November 11, 2023

மொரப்பூர், கடத்தூரில் இனிப்பு, காரம் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு.


தருமபுரி நவ 11-

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் வழிகாட்டல் படி, மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் இனிப்பு காரங்கள் உரிய முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதா மூலப்பொருட்கள், சமையல் எண்ணெய், பயன்படுத்தப்படும் குடிநீர் மற்றும் பணியாளர்கள் தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுருந்தார். அதன் பொருட்டு கடந்த சில தினங்களாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கடத்தூர் , ஒடசல்பட்டி மற்றும் மொரப்பூர் பகுதிகளில் உள்ள இனிப்பு, காரம் தயாரிக்கும் இடங்கள், பேக்கரிகள் மற்றும் விற்பனை நிலையங்களில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் பொறுப்பு நந்தகோபால் ஆய்வு செய்தார். ஆய்வில் ஒரு சில இனிப்பு காரம் தயாரிப்பு இடங்களில் இருந்து செயற்கை நிறமூட்டிகள் ஏற்றப்பட்ட வருத்த பச்சை பட்டாணி, வறுத்த நிலக்கடலை, பிங்கர் சிப்ஸ் மற்றும் அளவுக்கு அதிகமாக நிறம் சேர்க்கப்பட்ட லட்டு, அல்வா உள்ளிட்டவை பறிமுதல் செய்து செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு தயாரிப்பு இடத்தில் உரிய விவரம் இல்லாத மசாலா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது . மூன்று கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் உடனடி அபராதம் மாவட்ட நியமன அலுவலர் பரிந்துரை பேரில் விதிக்கப்பட்டது. கடத்தூரில் ஓர் தயாரிப்பு, விற்பனை நிலையத்திற்கு அருகிலேயே வெளியேறும் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி சாலையில் ஓடி சுகாதாரம் குறைபாடு கண்டு கடை உரிமையாளரை உடன் குறைபாடு களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் கடை செயல்பட தடை விதிக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டது. தயாரிப்பு கூடத்தில் ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறையின் அங்கீகரிக்கப்பட்ட மறு பயன்பாட்டுக்கு சமையல் எண்ணெய் ரூகோ டீலரிடம் அளித்து உரிய  தொகை பெற்றுக் கொள்ள உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. 

இனிப்பு ,காரம் தரமறிய இனிப்பு, கார வகைகள் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார். மேலும் பண்டிகை காலங்களில் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Labels:

பென்னாகரம் - உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி பேக்கரி கடைகளில் ஆய்வு செய்தார்

பென்னாகரம் நவ 11-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைவீதி பகுதிகளில் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் கடைகளில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி  ஆய்வு செய்தார்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்யும் திருமண மண்டபங்கள் வீடுகள் பேக்கரி கடைகளில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தி செய்வதை ஆய்வு செய்தார் இந்த ஆய்வின்போது தற்காலிகமாக தீபாவளி பலகாரங்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் பெற்றிருக்க வேண்டும் சான்றிதழை அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் சமையல் எண்ணெய் மற்றும் மூலப் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் பாதுகாக்கப்பட்ட குடிநீராகவும் உணவுப் பொட்டலம் இடும் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி முடிவு தேதி தயாரிப்பு முகவரி, நுகர்வோர் புகார் தொடர்பு எண் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் நிறமூட்டிகள் அனுமதிக்க கூடாது பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் உபயோகிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

Labels:

Friday, November 10, 2023

சித்ரா கார்மென்ட்ஸ் சார்பில் 1000 நபர்களுக்கு மதிய உணவு

தருமபுரி நவ 10-

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு 1000 க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பார்வையாளர்கள் என்று நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தர்மபுரி ரோட்டரி சங்கம், மை தர்மபுரி அமைப்பு சார்பில் நல்லம்பள்ளி சித்ரா கார்மெண்ட்ஸ் உரிமையாளர்களான கோபி, சித்ரா ஆகியோருக்கு 15 ஆவது திருமண நாளை முன்னிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

தீபாவளி பண்டிகைக்கு 350 சிறப்பு பேருந்துகள்: ஈரோடு மண்டல பொது மேலாளர் அறிவிப்பு

ஈரோடு நவ 10-

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டல பொது மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் வசதிக்காக 12ம் தேதி வரை ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து திருச்சி, சேலம், மதுரை, சென்னை, நாமக்கல், ராசிபுரம், திருப்பூர், சத்தி, பழனி, கரூர் ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 350க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும், ஈரோட்டிலிருந்து கம்பம், குமுளி, சிவகாசி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், வேலூர், புதுச்சேரி, செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை ஆகிய ஊர்களுக்கு சென்றுவர www.tnstc.in என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர கோபி, சத்தி, பவானி, அந்தியூர், பெருந்துறை ஆகிய ஊர்களிலிருந்து கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு 24 மணி நேரம் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு 12ம் தேதி வரை தினந்தோறும் இரவு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

Labels:

Thursday, November 9, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர்மின் கோபுர விளக்கு திறப்பு

தருமபுரி நவ 9-

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி - தருமபுரி ஒன்றியம், அக்கமனஅள்ளி ஊராட்சி - நடுப்பட்டி சமுதாய கூடம் பகுதியில்  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி.செந்தில்குமார் எம்.பி., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 

இதைதொடரந்து கந்தன கொட்டாய், புளியம்பட்டி, கருப்பூர், பெரியகுரும்பட்டி, நல்லாம்பட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி (வ) ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஏ.மாது, மொரப்பூர் (மே) ஒன்றிய கழகச் செயலாளர் கே.எம்.ரத்தினவேல், பொதுக்குழு உறுப்பினர் பி.லட்சுமணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை,  ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம்.மேகராஜ்
கிளை செயலாளர்கள் டி.சேகர்
மாதேஷ், முருகன், பழனிவேல், மாது
உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Labels:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனம்; நவ., 10 முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில்

திருப்பதி நவ 9-

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 23ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும். 

இந்த நாட்களில் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைகுண்ட துவார தரிசனத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

இந்த தரிசனத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், ஸ்ரீவாரி தரிசன டிக்கெட், அறை முன்பதிவு கோட்டா ஆகியவை நவ.,10ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன.

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 2.25 லட்சம் எண்ணிக்கையில் நவ.,10 காலை வெளியாகும்; ஸ்ரீவாரி தரிசன டிக்கெட் 20 ஆயிரம் எண்ணிக்கையில் அன்று மதியம் 3 மணிக்கு வெளியாகும்.

அறை ஒதுக்கீடு கோட்டா மாலை 5 மணிக்கு வெளியாகும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Labels:

Wednesday, November 8, 2023

தருமபுரி எம்.பி. Dr செந்தில்குமார் அவர்கள் உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்தார்

தருமபுரி நவ 8-

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி - ஏரியூர் ஒன்றியம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சி - சிகரலஅள்ளி ஊர்ப் பொதுமக்கள் கிணறு அருகில் தனது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  (MPLADS)  நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் எம்.பி., அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏரியூர் ஒன்றிய கழகச் செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் என்.செல்வராஜ், பென்னாகரம் (தெ) ஒன்றிய கழகச் செயலாளர் மடம் முருகேசன், தருமபுரி கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சென்னயன், தருமபுரி (கி) மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் கோ.அசோக்குமார், தருமபுரி (மே) மாவட்ட கழக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.என்.சி.மகேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Labels:

தருமபுரியில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

தருமபுரி நவ 8- 

தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் துணை அமைப்பாளர் கி.தீர்த்தராமன் ஏற்பாட்டில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மாதேமங்கலம் ஊராட்சி, வெங்கட்டம்பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று 8.11.2023  புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ. சுப்ரமணி Ex.MLA அவர்கள்  தலைமை வகித்து மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் சு.இளையசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் வேம்பு, புங்கன், வாகை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பி.சி.துரைசாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.கௌதம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர்கள் மாரி, சுகுமார் , மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.சரவணக்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, துணைச் செயலாளர்கள் ரங்கநாதன், ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி மோகன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சித்தன், நிர்வாகிகள் பாளை ந.அன்பு, முரளி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

தலைகவசம் அணிந்து வருபவர்களுக்கு பட்டாசு பாக்ஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தருமபுரி போக்குவரத்து காவல் துறையினர்.

தர்மபுரி நவ 7-
  
தமிழக அரசு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

அதனடிப்படையில் இன்று தருமபுரி போக்குவரத்து துறை மற்றும் சமுக ஆர்வலர்கள் இணைந்து 4 ரோடு சந்திப்பு சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிந்து செல்பவர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி போக்குவரத்து துறை துணை ஆய்வாளர் சின்னசாமி தலைமையில் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இலவசமாக பட்டாசு பாக்ஸ்களை வழங்கி அவர்களை ஊக்கபடுத்தினார்.
    
மேலும் தலைகவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டக்கூடாது எனவும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்க  ;கூடாது எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினர். போக்குவரத்து காவல் துறையினரின் இந்த செயல் பொது மக்களிடையே பாராட்டை பெற்றது.

Labels:

Tuesday, November 7, 2023

தர்மபுரி - விடுதி பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் மனு

தருமபுரி நவ 7-

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் மனு அளித்தனர்.


மனுவில் ஆதிதிராவிடர் விடுதிகளில் 10,15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்து,காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.15 ஆண்டுகளாக விடுதியில் சமையலர்,இரவு காவலர்களாக பணிபுரிந்து வரும் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.விடுதியில் சமையலர்களாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.மேலும் தகுதிகாண் பருவம் முடித்ததாக ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிகழ்வின்போது ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர்கள் ஆர்.சுதர்சனன்,ஏ.முருகேசன்,
உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் என்.மனோகரன்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி பணியாளர்கள் சங்க கெளரவ தலைவர் மதுசூதனன்,
மாவட்ட தலைவர் முத்து,மாவட்ட செயலாளர் மாதேஸ்,பொருளாளர் கலைச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Labels:

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

தர்மபுரி நவ 7-

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் "சட்டமன்ற நாயகர் கலைஞர்" கருத்தரங்கம் நடைபெற்றது . 

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணிகள் திட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்றது . 

"சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்திற்கு   கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமை வகித்தார் , நாட்டு நலப்பணி திட்டம் அலுவலர் முனைவர் இரா.சந்திரசேகரன் வரவேற்று பேசினார்.

தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவியர்களிடம் கலைஞர் கருணாநிதியை பற்றியும் அவர் கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகள் பற்றி சிறப்புரையாற்றினார் . 

கல்லூரி மாணவ மாணவியர்கள் கலைஞர் கருணாநிதி பற்றி பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர் இதில் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

இந்த விழாவில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கி.தீர்த்தராமன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

ஒகேனக்கல் - வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் நவ 7-

காவிரி கரையோர பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில் தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதனால் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று வரை வினாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர்வரத்தானது படிப்படியாக தற்போது அதிகரித்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிக அளவில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, பெய்யும் மழையைப் பொறுத்து அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என கருதப்படுகிறது.

Labels:

Monday, November 6, 2023

அரசு விடுமுறை‌ - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை நவ 6-

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று வருவதால், மறுநாளான திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள 

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Labels:

நீதிமன்றத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரான அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்


தர்மபுரி நவ 6-

அதிமுக முன்னாள் அமைச்சர். கே.பி. அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அதற்கான பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர், இதனை தொடர்ந்து நீதி மன்ற நடைமுறைகள் தொடங்கியது, முறையாக சம்மன் அனுப்பபட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட பதினொரு பேரும் இன்று நீதிமன்றத்தில் முதல் விசாரணைக்காக ஆஜராகியிருந்தனர்..

கடந்த 2022 ம் ஆண்டு ஜனவரி 19 ம்தேதி கே பி அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய, 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர், அப்போது பணமாக 2 கோடியே 77 லட்ச ரூபாய் அளவிற்கு பணத்தினை பறிமுதல் செய்திருந்தனர், வருமானத்திற்கு அதிகமாக 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்து அதற்கான ஆவணங்களையும் கைப்பபற்றியிருந்தனர்..

இந்த வருடம் ( 22.5.2023) அன்று தருமபுரி நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிக்கையினை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்திருந்தனர்..

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேவுள்ள மோளையனூர் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், வருமானத்திற்கு அதிகமாக கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றினை கொடுத்திருக்கிறார், புகாரின் மீது லஞ்ச ஒழி்ப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க காலம் கடத்தவே, இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தினை நாடி உத்தரவு பெற்றதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கையில் இறங்கியுது.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனுக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடதக்கது

நீதி மன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகியிருந்தனர் கே பி அன்பழகன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட பதினொறு பேரும்.. 

அடுத்த விசாரணை வருகிற 22.11.23 ம்தேதி நடைபெற இருக்கிறது..

பேட்டி. கிருஷ்ணமூர்த்தி, வழக்கு தொடர்ந்தவர், மோளையனூர் கிராமம் தருமபுரி

விசுவல். எப் டி பியில்

Labels:

Sunday, November 5, 2023

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி நவ 5-

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மதுவிலக்கு, சைபர் கிரைம், குழந்தை திருமணம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலை வரும், முதன்மை நீதிப தியுமான சுமதிசாய் பிரியா தலைமை தாங்கி பேசியபோது ஆன்லைன் கடன், பண இரட்டிப்பு மோசடி, குறித்தும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, மொபைல் ஆப் மூலம் பணத்தாசை காட்டி மோசம் செய்வது, கஞ்சா, போதை பழக்கங்களால் உடல்ந லத்துடன் குடும்பங்களும் சீரழிவது, குழந்தை திருமணத்தை தடுக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது.மாவட்ட குடும்ப நல நீதிபதி நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் நிலைய கண்காணிப்பாளர் சரண்யா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான ஜெனிபர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Labels:

தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி


சூளகிரி நவ 5-

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட துரை ஏரியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை, வருவாய் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை வருகை எதிரொலியாக பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒசூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நாக விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சூளகிரி தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன் மற்றும் பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இதில் தீயணைப்பு மீட்புகுழு வினர் மிக தத்துருபமாக ஏரியில் விழுந்த ஒருவரின் உயிரை காப்பாற்றுவது போல நிகழ்த்தி காட்டினர். கிணறு , ஏரி, குளம் பகுதிகளில் விழுந்த வர்களை பொதுவாக பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபடும் போது பிளாஸ்டிக் கேன்கள் , பிளாஸ்ட்டி பாட்டில்கள், காளி சிலிண்டர்களை இடுப்பில் கட்டி கொண்டு காப்பாற்ற முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.

Labels:

பாப்பிரெட்டிப்பட்டி மாணவியர் விடுதியில் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

 பாப்பிரெட்டிபட்டி  நவ 5-

 மாணவிகளிடம் நேரில் விசாரணை


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச், புதுப்பட்டி மாணவிகள் தங்கும் விடுதியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 56 பேர் தங்கி படித்து வருகின்றனர்

 அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவிகள் நேற்று திடீரென விடுதி முன்புள்ள நுழைவாயில் பகுதியில் சாலையில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மாணவிகளின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மாணவிகள் போராட்டத்தின் போது தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் வயல்வெளி பகுதி முட்புதர் பகுதிக்கும் செல்வதாகவும், குடிநீர் வசதி, தண்ணீர் வசதி இல்லாததால் வயல்வெளிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்பதாகவும் பகிர் குற்றச்சாட்டை நேற்று வைத்தனர்


இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இச்சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்வதற்கு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய எஸ். சி. எஸ். டி. தமிழ்நாடு ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பள்ளி மாணவியரின் தங்கும் விடுதிக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்


 அப்போது அவர் மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் எவ்வாறு ஏற்படுத்தப்பட்டுள்ளது, தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? கழிப்பிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? தரமான உணவுகள் வழங்கப்படுகின்றதா? என்பது குறித்து மாணவிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்


இந்த விசாரணையின் போது அரூர் கோட்டாட்சியர் வில்சன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி,  துணை தாசில்தார் மில்லர் மற்றும் காவல் துறையினர் என பலர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்

Labels:

Saturday, November 4, 2023

இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் இருந்து சைக்கிள் பயணம்


ஒகேனக்கல் நவ 4-

பொதுமக்கள் அதிக அளவில் மரங்களை வளர்க்காமல் வெட்டுவதால் இயற்கை பேரிடர்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆறு, ஏரி, குளம், கண்மாய், கடல் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் பொதுமக்களால் நாளுக்கு நாள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர்கெட்டு மாசடைந்து வருகிறது. பொதுமக்கள் மனது வைத்தால்தான் இயற்கையை காப்பாற்ற முடியும் என்று பொது மக்களுக்கும்  கிராமங்களில் உள்ள மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 
டில்லியை சேர்ந்தவர் ரூபேஷ் குமார் ஹாய் வயது 48. இவர் இந்தியா முழுவதும் இயற்கையை காப்போம் என்ற நோக்கத்துடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரூபேஷ் குமார் ராய் வாரணாசி  காசி  பனாரஸைச் சேர்ந்தவர். இவர் அக்ரோ டூரிசம் மற்றும் இயற்கை எதிர்ப்பு தனியார் மாதிரிகள் என்று பல தேசிய விருதுகளை வென்ற நிறுவனத்தைக் நடத்தி வருகிறார். இவர் இருக்கும் பகுதிகளிலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் இயற்கை பேரிடர்கள் குடிநீர் பிரச்சினை ஆகியவை இயற்கை பேரிடர்கள் அதிக அளவில் ஏற்படுவதாலும் மக்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் மரங்களை வெட்டுவதால் இயற்கை சூழல் பாதிப்பு ஏற்படுவதாலும் மக்களுக்கு இயற்கை சூழ்நிலைகளை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நியூ டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை கடந்த 1வருடம் 7 மாத காலமாக சைக்கிளிலேயே  டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஹைதராபாத், கர்நாடகா, தமிழ்நாடு என அவர் 7 மாநிலங்கள் வழியாக குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் சைக்கிளிலேயே தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். பின்னர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தன் கடந்து வந்த பாதையையும் தனக்கு இயற்கை மீது ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்  .

Labels:

தருமபுரி தனியார் கல்லூரி் மாணவிகள் அசத்தல்|| விதைப்பந்துகளால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிக்பெரிய சந்திராயன் 3 விண்கல ஓவியம்...


தர்மபுரி நவ 4-

விதைப்பந்துகளால்உருவாக்கப்பட்டுள்ளஉலகின் மிக்பெரிய சந்திராயன் 3 விண்கல ஓவியம்...

காடுகள் அழிப்பதை தடுத்து வனங்களை உருவாக்க புதிய முயற்சி.. 

தருமபுரியிலுள்ள தனியார் கல்வி நிறுவனமான பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் சார்பில், அங்கு பயிலும் மாணவிகள் உலக சாதனைக்காக இந்த முயற்சியினை மேற்கொண்டிருப்பது அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறது..

காடுகள் அழிவதை தடுத்து, புதிய காடுகளை உருவாக்கும் முயற்சியாகவும், விண்ணையும் மண்ணையும் ஆளும் இந்தியா, சந்திராயன் 3 விண்ணில் ஏவிய வெற்றியை கொண்டாடவும், விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவி்க்கும் இரண்டே நாட்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளால் மூன்று லட்சத்து என்பத்து நான்காயிரம் விதைப்பந்துகளை உருவாக்கி அசத்தியுள்ளனர், உருவாக்கப்பட்டுள்ள இந்த விதை பந்துக்களை பசுமை இந்தியா திட்டத்திற்கு தமிழக அரசிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்

விதை பந்தில், ஆலமரம், அரச மரம், பூவரசன் மரம், வேம்பு, புங்கன்,அத்தி உள்ளிட்ட பல்வேறு விதைகள் விதபை்பந்துக்களில் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Labels:

தர்மபுரியில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில் 250 நபர்களுக்கு வேட்டி புடவை


தர்மபுரி நவ 4-

தர்மபுரியில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி மற்றும் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் 250 நபர்களுக்கு வேட்டி புடவைகள் வழங்கப்பட்டது.

தர்மபுரி பிடமனேரியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஏஜென்சி சார்பில் 15வது ஆண்டாக அனைவரும் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் 250 பொதுமக்களுக்கு புடவை வேட்டி சட்டைகள் எம்ஜிஆர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் குமரன் அவர்கள் வழங்கினர்.


Labels:

தர்மபுரியில் பஜாஜின் புதிய N 150 பல்சர் மாடல் அறிமுக விழா


தர்மபுரி நவ 4-

தர்மபுரி DNV பஜாஜ் ஷோரூம் -ல் இந்த தீபாவளிக்கு இந்தியாவில் அதிக விற்பனையாகும் No1 ஸ்போர்ட்ஸ் பைக் பஜாஜ் பல்சர் முற்றிலும் புதிய N150 புதிய வாகனம் அறிமுக விழா நடைபெற்றது.

அறிமுக விழா DNV குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அரிமா DNV செல்வராஜ் அவர்கள் தலைமையில் - தர்மபுரி வட்டாட்சியர் ஜெயசீலன் அவர்கள் கலந்து கொண்டு புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தினார் - இந்த வாகனத்தின் சிறப்பம்சங்களாக இந்த வகையில் மிகச் சிறந்த 14.5 PS பவர் அதிக டார்க் 13.5 NM , பின்புற மோனோ சஸ்பென்ஷன் , அதிக வெளிச்சத்திற்காக ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப் , மற்றும் ஸ்போர்ட்டி மாடல்களின் மிக முக்கியமான அண்டர் பெல்லி சைலன்சர் , பின்புற அகலமான டயர் போன்ற அதிக சிறப்பம்சங்களை கொண்ட இந்த வாகனம் தற்பொழுது தர்மபுரியில் DNV பஜாஜ் ஷோரூம் - ல் முன்பதிவு செய்யப்பட்டு தீபாவளி முதல் விற்பனைக்கு வரவுள்ளது ...
இவ்விழாவில் பஜாஜ் வாடிக்கையாளர்கள் , தர்மபுரி நகர அரிமா சங்க பிரமுகர்கள் , தர்மபுரி இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Labels:

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் திமுக பொறுப்பாளர்கள் மாவட்ட கழக செயலாளர் திரு தடங்கம் பெ.சுப்ரமணி - அ.க.தருண் நேரில் ஆய்வு



தர்மபுரி நவ 4-

இன்று  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தல் சிறப்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு தருமபுரி கிழக்கு மாவட்டம் நகராட்சி பகுதியில் மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் தலைமையில். தொகுதி பார்வையாளர் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் திரு.AK.தருண் அவர்கள் முன்னிலயில் அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி , நகர கழக நிர்வாகிகள் முல்லைவேந்தன் , அழகுவேல் , அன்பழகன் , ரஹீம் , காசிநாதன் , ரவி , வெல்டிங் ராஜா , சந்திரமோகன் , M.P.கெளதம் , குமுதா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Labels: