Friday, March 13, 2026

சிலிண்டர் விலை உயர்வு மற்றும் எரிவாய்வு சிலிண்டர்களின் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு  
மற்றும் எரிவாய்வு சிலிண்டர்களின் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை உடனடியாக மத்திய மாநில அரசுகள் உடனடியாக கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை .
.................................................................
ஈராக் ,அமெரிக்கா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தம் காரணமாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே மத்திய அரசு வணிக சிலிண்டர் மற்றும் வீடுகள் பயன்படுத்தப்படும்
சிலிண்டர்களுக்கான 
விலையையும்
அதிகரித்துள்ளது ,
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை ஓரக்கடைகள் மட்டுமின்றி ஹோட்டல்கள் 
சிலிண்டர்களின் தட்டுப்பாட்டினால்
மூடப்பட்டுவருகிறது,

மேலும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாய்வு சிலிண்டர்களும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர், குறிப்பாக சிலிண்டர்கள் புங்கிங் செய்ய முடியதால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய காலி சிலிண்டர்களுடன் சமையல் எரிவாய்வு அலுவலகங்ளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது குறித்து கூறிய இல்லத்தரசிகள் ஏற்கனவே விலைவாசி உயர்வினால் எழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு வளைக்குடா நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினை காரணம் காட்டி
எரிவாயு மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தக்கூடிய எரிவாய்வு சிலிண்டர்களின் விலையை உயத்தி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்திலும் எரிவாயு நிலையம் கிடைப்பது பெரும் சிறப்பு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக சமையலுக்கு தேவையான சிலிண்டர்களை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

பேட்டி சரண்யா

Labels:

வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வேப்பூர் சாய் அப்போலோ நர்சிங் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது

 விழாவிற்கு ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையயின் மூத்த செவிலியர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

 விழாவிற்கு சாய் அப்போலோ நர்சிங் கல்லூரி முதல்வர் அன்பரசி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சாய் அப்போலோ உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி,தொழுதூர் முதல்வர்கள் பிரியதர்ஷினி, சுஷ்மிதா,கனிமொழி கலந்து கொண்டனர்.

 விழாவில் குத்துவிளக்கேற்றி விழாவை சாய் அப்போலோ கல்வி நிறுவனங்களில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்த ஜோதி தொடங்கி வைத்தார் மேலும் மகளிர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டி,கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறந்த பெண்மணிகளுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர்.அம்பிகா தங்கதுரை வெள்ளி காயன், பரிசுகள் பொன்னாடை வழங்கி கெளரவித்தார்.

 மகளிர் தின சிறப்புகளை பற்றி கல்லூரியின் விரிவுரையாளர்கள் சிவரஞ்சனி,தீபா, நளினி சண்முகப்பிரியா, ராதா ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர்கள் இறுதியில் இரண்டாமாண்டு மாணவி விஜயலட்சுமி நன்றி கூறினார்.

Labels:

அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துனை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் நிலையில் தேர்தல் பணிக்காக துனை ராணுவ படையினர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். 
வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜசுந்தர் தலைமையில் கொடி அணிவகுப்பு மரியாதை நடந்தது.
 பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜசுந்தர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இந்தப் பேரணியானது பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் துவங்கி, வட்டாட்சியர் அலுவலகம், கடைவீதி, பேருந்து நிலையம் , ஸ்தூபி மைதானம் வழியாக காவல் நிலையத்தை சென்றடைந்தது.இப்பேரணியில் கமாண்டோ தலைமையிலான துனை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.

Labels:

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் புதுக்கோட்டை மார்ச் 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளது. தற்பொழுது ஈரான், இஸ்ரேல், ஈராக், பகுதியில் போர் நடந்துவருவதால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் மும்மரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நாளை பெட்ரோல் விலை அதிகரிக்கும் என பொய் பிரச்சாரம் பரவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருந்தும் அதிக விலைக்கு விற்பதாக நினைத்து பெட்ரோல் இல்லை என அறிவிப்பு பலகை போட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது

புதுக்கோட்டையில் பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பிடிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் 

புதுக்கோட்டை மார்ச் 13 புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக உள்ளது. தற்பொழுது ஈரான், இஸ்ரேல், ஈராக், பகுதியில் போர் நடந்துவருவதால் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதில் மும்மரம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி வருகின்றனர். நாளை பெட்ரோல் விலை அதிகரிக்கும் என பொய் பிரச்சாரம் பரவியதால் வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். ஒரு சில பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இருந்தும் அதிக விலைக்கு விற்பதாக நினைத்து பெட்ரோல் இல்லை என அறிவிப்பு பலகை போட்டுள்ளனர். இதனால் பெட்ரோல் இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது

Labels:

Monday, March 2, 2026

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் திமுக - அதிமுக கருத்து மோதல்



தருமபுரி, மார்ச் 2 :

தருமபுரியில் இன்று நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்வின்போது, அதிமுகவினர் திமுவினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில், தேர்தல் சிறப்பு நேர்க்காணல் (டிபேட்) நிகழ்ச்சி வள்ளலார் திடலில் அமைக்கப்பட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி. அன்பழகன், திமுக சார்பில் தருமபுரி மக்களவை உறுப்பினரும் திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஆ. மணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் மூவரும் பங்கேற்றனர்.

நெறியாளரின் கேள்விகளுக்கு பதில் அளித்து மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக சார்பில் அன்பழகன் பேசும்போது, திமுக சார்பில் ஆ. மணி இடையிடையே பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அதிமுக தொண்டர்கள் நாற்காலிகளை தூக்கி எறிந்தனர். இதில் திமுக நிர்வாகியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் கண்காணிக்காப்பாளர் எஸ். எஸ் மகேஸ்வரன் மற்றும் தருமபுரி நகர காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இரண்டு கட்சியினரும் வெளியே சென்றனர் இதனையடுத்து நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.

Labels: