Monday, January 5, 2026

யாதவ மக்கள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


மத்திய அரசை காரணம் காட்டி தங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காமல் பொம்மை முதலமைச்சர் தங்களை வஞ்சிப்பதாக யாதவ மக்கள் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கோகுலம் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு யாதவ சங்கங்கள் இணைந்து தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கக் கேட்டு மத்திய மாநில அரசுகளின் கவனம் ஈர்க்கும் வகையில் யாதவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சேகர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள யாதவ மக்களை மிகவும் பிற்படுத்துவோர் பட்டியலில் சேர்க்காததால் 1989 இல் இருந்து இன்று வரை இரண்டு தலைமுறைகள் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் வளர்ச்சி இல்லாமல் மிகப் பெரிய ஏமாற்றுத்துடன் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

  அதனை சரி செய்ய தமிழக யாதவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தமிழக அரசு வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

1.5 கோடி மக்கள் தொகை உள்ள யாதவ மக்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழக அரசு வழங்காமல் மத்திய அரசை காரணம் காட்டி பல ஆண்டுகளாக எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. 

 உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் 200க்கும் மேற்பட்டோர் நடந்து சென்று தங்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் சார்பில் சேலத்தில் கொண்டாட்டம்



தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி புதிய ஓய்வூதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை (TAPS) அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் சார்பில் சேலத்தில் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி என்ற வரிகளுக்கு ஏற்ப பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்னும் இருளை நீக்கி எங்கள் வாழ்வில் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை வழங்கி வாழ்வில் ஒளி ஏற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து 
வீரபாண்டி வேல்முருகன் தலைமையில் நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் 500க்கும் மேற்பட்டோருக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி இணை பேராசிரியர் முனைவர் முருகன், முதுநிலை பேராசிரியர் முனைவர் சீனிவாசன் அரசு கலைக்கல்லூரி மேட்டூர், முதுநிலை பேராசிரியர் திருநெல்வேலி நீல கிருஷ்ணபாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் சங்கத்தினுடைய மாநில ஒருங்கிணைப்பாளர் நெல்லை பாபு தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை கேட்க இருக்கிறோம் என்று சேலம் வீரபாண்டி வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மலர் அங்காடியில் முதல் விற்பனையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார்


திருவண்ணாமலை மாவட்டம் காந்தி நகரில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய காய்கறி மற்றும் மலர் அங்காடியில் முதல் விற்பனையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார் 
உடன் சட்டசபை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எ.வ.வே.கம்பன் சி.என் .அண்ணாதுரை மு.பெ. கிரி, பெ.சு.தி சரவணன், ஸ்ரீதரன் கார்த்திக் வேல் மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக வேண்டி ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் ராஜகோபுரம் வளாகத்தின் முன்பு உலக மக்கள் நன்மைக்காக வேண்டி திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ குல நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் ஸ்ரீ சரஸ்வதிக்கு 22 ஆம் ஆண்டு இசை விழா மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த இசை விழாவில் சரஸ்வதி உற்சவம் பாடவிதி விழா நடைபெற்றது உற்சவர்கள் முன்பு 108 நாதஸ்வரங்கள் இசைகளுடன் மாதவி உலா வந்து ராஜா கோபுரம் முன்பு நிறைவடைந்தன இந்த விழாவில் தவில் நாதஸ்வரம் என தங்களுடைய திறமைகளை இசைக் கலைஞர்கள் வெளிப்படுத்தினர் மற்றும் 108 நாதஸ்வரம் இசை விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டச் செயலாளர் குமார். மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம் ‌. துணைத் தலைவர்கள். பாண்டியன். ஐயப்பன். துணைச் செயலாளர்கள். மணிகண்டன் பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும். சங்க ஆலோசகர் சரவணன் நன்றி உரை கூறினார்..

Saturday, January 3, 2026

கோவை சுகுணா பொறியியல் கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி



பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து நினைவுகளை பகிர்ந்து மாணவர்கள் நெகிழ்ச்சி*
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது…
இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள்,மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதே போல கல்லூரியில் பல்வேறு துறை பேராசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள்,ஊழியர்கள், மேனேஜ்மெண்ட் நிர்வாகத்தினர் என நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்..
நீண்ட வருடங்களுக்கு பின்பு தங்களது ஆசிரியர்களை சந்தித்த மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்த கொண்டதோடு,தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தின் தாளாளர்கள் சுகுணா மற்றும் லட்சுமி நாராயணசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று நினைவு பரிசை வழங்கி மகிழ்ந்தனர்..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி குழுவாக இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்..

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படித்த பழைய வகுப்பறைகளை பார்வையிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்தனர்..

நிகழ்ச்சியில் சுகுணா பொறியியல் கல்லூரி செயலாளர் ஸ்ரீகாந்த் கண்ணன், முதல்வர் மகுடீஸ்வரன்,
இயக்குனர் சேகர், சுகுணா பாலிடெக்னிக் டீன் ரம்யா, உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

ரூ.149.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையம்


மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் 70- வது வார்டு க்குட்பட்ட புரூக்ஃபீல்ஸ் சாலையில் அமைந்துள்ள சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலைய வளாகத்தில், 

மாநகராட்சி பொதுநிதியின் கீழ், ரூ.149.50 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகள் மற்றும் டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதை,

 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் துவக்கி வைத்தார்கள். 

உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், நகர் நல அலுவலர் மரு.மோகன், உதவி நகர் நல அலுவலர் மரு.பூபதி, பொது சுகாதாரக்குழு தலைவர் திரு .பெ.மாரிசெல்வன், உதவி ஆணையர் செல்வி.நித்யா, உதவி செயற்பொறியாளர் திரு.குமரேசன், மாமன்ற உறுப்பினர் திருமதி.சர்மிளா சுரேஷ்நாராயணன், மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திரு.சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் திரு.தனபாலன், ரோட்டரி கோயம்புத்தூர் IKON TRUST, TANKER பவுண்டேஷன் அமைப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர். அமைக்கப்பட்டுள்ளதை,

 மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பவன்குமார் க.கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் அவர்கள், ஆகியோர் துவக்கி வைத்தார்கள். 

உடன் மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுருபிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டனர். 

தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி



சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற 
தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் 112 பதக்கங்களை வென்ற தமிழ்நாடு அணி  ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தல்

கோவை வந்த வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 வது ஃபெடரேஷன் கோப்பை தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 24 ந்தேதி துவங்கி  ஐந்து நாட்கள்   நடைபெற்றது..


சப் ஜூனியர்,ஜூனியர்,சீனியர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இதில்,பஞ்சாப்,ஹரியானா,உத்தரபிரதேசம்,மணிப்பூர் ,மகாராஷ்டிரா,கேரளா,தமிழ் நாடு என நாடு  முழுவதும் இருந்து சுமார் 1800 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.. 

சான்சூ மற்றும் டவ்லு ஆகிய இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு அணி 44 தங்கம்,30 வெள்ளி,38 வெண்கலம் என 112 பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது..

தமிழ்நாடு அணி சார்பாக கோவையில் இருந்து பங்கு பெற்ற 33 பேர் 16 தங்கம்,4 வெள்ளி,15 வெண்கலம் என 35 பதக்கங்கள் குவித்துள்ளனர்..

இந்நிலையில் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..

இதில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்..

இது குறித்து ஜான்சன் மாஸ்டர் கூறுகையில்,தேசிய,சர்வதேச போட்டிகளில் தமிழக அணி வீரர்,வீராங்கனைகள் தொடர்ந்து வெற்றி பெற்று கவனம் ஈர்த்து வருவதாகவும்,இதற்கு காரணமான தமிழ்நாடு வூசு சங்கத்தின் தலைவர் அலெக்ஸ் அப்பாவு மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..

கோவையில் வூசு விளையாட்டு  பயிற்சிக்கென தனியாக இடம் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் பரிசீலித்து வருவதற்கு வூசு சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..

இந்நிகழ்ச்சியில், தொழில் நுட்ப இயக்குனர் ரவி,பொருளாளர் கோபி,மற்றும் பயிற்சியாளர்கள் ஜாக்கி சங்கர்,பெரியசாமி,சரவணன் உடனிருந்தனர்..