Saturday, September 30, 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

 கன்னியாகுமரி  செப் 30-

முன்னாள் முதலமைச்சர்  டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஸ்ரீதர் தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர்  ரெ.மகேஷ் அவர்கள் முன்னிலையில்
மாண்புமிகு சிறுபான்மை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் அவர்களும் மாண்புமிகு அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் அவர்களும் வழங்கினர்.  மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் திரு ஆனந்த்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு அகஸ்தீசன், துணை அமைப்பாளர் திரு சரவணன், துணை மேயர்  திருமதி மேரி, பிரின்சிலதா உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

தருமபுரியில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்

தர்மபுரி செப் 30-

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி,  விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை  கலைநிகழ்ச்சி  பிரச்சாரம் உள்ளிட்டவற்றை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று கொடியசைத்து  துவக்கி வைத்தார்கள்

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி,  விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை  கலைநிகழ்ச்சி  பிரச்சாரம் உள்ளிட்டவற்றை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் நேற்று (29.09.2023) கொடியசைத்து  துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால்  தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக  பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு  கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள்  கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில்  29.09.2023 முதல் 12.10.2023 வரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. 

தருமபுரி மாவட்டத்தில் இன்று (29.09.2023) முதல் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் இக்கணக்கெடுப்பு பணியினை பொதுமக்கள் அறியும் வகையில்  விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மூன்று சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம்  மற்றும் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம்  உள்ளிட்டவற்றையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் திரு.பிலிப்ஸ், திட்ட அலுவலர் செல்வி. அனிதா மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Labels:

Friday, September 29, 2023

90 வயதான திமுக மூத்த முன்னோடிக்கு பாத பூஜை செய்து பொற்கிழி வழங்கி கவுரவித்த நெகிழ்ச்சி சம்பவம்

தருமபுரி செப் 29- 

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேவுள்ள சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த திமுகவின் மூத்த முன்னோடியான மாரியப்பன் (90) அவர்களுக்கு பாத பூஜை செய்து, சால்வை அணிவித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் திருவுருவ படம் வழங்கியும், திமுக சார்பி்ல் வழங்கப்பட்ட பொற்கிழியும் வழங்கி கவுரபடுத்தப்பட்டது..
இது குறித்து, திமுக தருமபுரி மேற்கு மாவட்ட சுற்று சூழல் அணியி்ன் அமைப்பாளரும், முக்குளம் ஊராட்சி மன்ற தலைவருமான கண்ண பெருமாள் அவர்கள் கூறும்போது, திமுகவின் மூத்த முன்னோடியான மாரியப்பன் அவர்களுக்கு 90 வயதாகிறது, சற்று உடல் நலன் பாதிக்கப்பட்டிருக்கிறார், கடந்த இரு தினங்களுக்கு முன்னர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார், அதில் திமுக முன்னோடிகளை கவுரபடுத்தி கட்சி சார்பில் பொற்கிழி வழங்கினார், உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததால், மாரியப்பன் அவர்களால் அந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலை இருந்ததால், திமுக மூத்த முன்னோடியான மாரியப்பன் அவர்களை அவரது வீடு தேடி சென்று அவருக்கு பாதபூஜை செய்து, கட்சி சார்பில் வழங்ப்பட்ட பொற்கிழி அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மாரியப்பன அவர்கள் பேரரறிஞர் அண்ணா அவர்களின் நன் மதிப்பை பெற்றவர்களுள் ஒருவராக இருந்துள்ளார், ஒரு சமயம் அண்ணா அவர்களுக்கு சந்தையில் ஆடு ஒன்றினை வாங்கி கொடுத்த பழய நினைவுகளோடு மாரியப்பன் அவர்கள் இருந்து வருவதாகவும், முக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திமுக வளர பாடுபட்டவர் மாரியப்பன் அவர்கள், அவரை கவுரபடுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சயடைவதாகவும், நெகிழ்ச்சியான இந்த தருணத்தில், திமுக தமிழக முதல்வருக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயதி ஸ்டாலின் அவர்களுக்கும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவி்த்த கண்ணபெருமாள்
திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களின் ஆலோசனைப்படி நடந்த இந்த நிகழ்ச்சியில், மாணவரணி துணை அமைப்பாளர், ஆர்.சி.பிரபு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதி ஓபிலி குமார், மற்றும் கிளை கழக செயலாளர்கள் துரோபதி,திருப்பதி, அண்ணாமலை, பழனி, பிரகாஷ், மாதேஷ், பரசுராமன், ரங்கசாமி உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Labels:

தஞ்சாவூரில் மாநகராட்சி ஆணையராக திருமதி மகேஸ்வரி இன்று பதவி ஏற்பு

தஞ்சாவூர் செப் 29-

தஞ்சைக்கு சிறப்பு மேல் சிறப்பு திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சாவூர் ஆணையராக நியமனம்செய்யப்பட்டிருக்கிறார்.

தர்மபுரி, கடலூர், திண்டுக்கல், சிறப்பான மாநகராட்சியை மாற்றியமைத்து தஞ்சையில் தற்பொழுது சோழ தேசத்தை சொர்க்கபூமியாக மாற்ற ஒரு துணிச்சலான ஆணையர் மகேஸ்வரியை தற்பொழுது அரசு நியமித்துள்ளது பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில். 

அரசு கொண்டுவரும் திட்டங்களையும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாநகராட்சிநிர்வாகம் தொடர்ந்து மக்களுக்கான பணிகளை மேற்கொள்ளும் அதற்காக என்னை பணி மேற்கொள்ள ஆணை வழங்கியுள்ளனர் தமிழக அரசுக்கும் தஞ்சாவூர் பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் எனது பங்கு 100% அயராத இருக்கும் இவ்வாறு ஆணையர் மகேஸ்வரி தெரிவித்தார். 

 தஞ்சாவூர் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க நகராகும். தஞ்சாவூர்  காவேரி டெல்டா பகுதியில் தஞ்சாவூர் முக்கிய விவசாய பகுதியாகவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும் 100 47 அச்ச ரேகையிலும், 790 08 பூமத்திய ரேகையிலும் உள்ளது. தஞ்சையில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் மிகப்பெரிய கோயில். மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. தஞ்சை மாநகராட்சியின் அடுத்த முகவரியாக தற்பொழுது மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவியேற்று உள்ளது கூடுதல் ஒரு சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Labels:

Thursday, September 28, 2023

இளைஞர் அணி மாநாட்டிற்கு தர்மபுரி மேற்கு, கிழக்கு சார்பில் ரூ.1.21 கோடி நிதி

இளைஞரணி சார்பில் ரூ. 21 லட்சம் வழங்கப்பட்டது

தர்மபுரி, செப்.28-

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ம் தேதி நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் வழங்கினர். இதேபோன்று தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ரூ.21 லட்சம் நிதியை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஆர். சிவகுரு மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் வழங்கினர். இதன் மூலம் தர்மபுரி மாவட்ட தி.மு.க. மற்றும் இளைஞர் அணி சார்பில் சேலம் இளைஞரணி மாநில மாநாட்டிற்கு மொத்தம் ரூ.1.21 கோடி நிதி வழங்கப்பட்டது.

Labels:

Monday, September 25, 2023

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு தனி பிரிவு


தர்மபுரி செப் 25- 

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி தகவல்                    

மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது இதில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செய்தியாளர் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி 
 தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 டெங்குவிற்கு உடனடி சிகிச்சை மேற்கொள்வதற்கு அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் நிலையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் குறைந்த அளவிலான டெங்கு பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்பினை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
 மேலும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு களப்பணியாளர்கள், மூலம் மருந்து தெளித்தல், கொசுப் புகை மருந்து அடிக்கும் பணிகள் செயல்படுத்தவும், காய்ச்சல் கண்ட பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தபடுகிறார்கள்.
 மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும் எனவும், பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும் எனவும், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும் எனவும், சுகாதாரபணியாளர்கள் வரும்பொழுது வீட்டின் உட்புறம் புகை மருந்து அடிக்க அனுமதி அளித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உள்ளாட்சித்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

டெங்கு அறிகுறிகள் தென்படுபவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். இதைத் தவிர்த்து எக்காரணம் கொண்டும் அருகில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனை இன்றி தாமாக எந்த மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் உடல் நலம் பாதிக்கப்படும் என ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ம.சாந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரமேஷ் பாபு, உள்ளிருப்பு மருத்து அலுவலர் நாகேந்திரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தர்மபுரி மூடப்பட்ட கடையில் திடீர் தீ விபத்து

தர்மபுரி செப் 25-

தருமபுரி கடை வீதியில் பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் திடிரென தீ விபத்து..

எப்பொழுதும் பரபரப்பாக இருந்து வரும் தருமபுரி கடை வீதியில் இரவு நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்து முடித்தனர்

கடையில், எண்ணை, தேன், திரி, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, துணி வகைகள்,பாக்கு மட்டை, உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இருந்ததால் தீ பற்றி எரிந்தே கொண்டே இருந்தது, தீ அருகேவுள்ள மற்ற கடைகள்,குடியிருப்புகளுக்கு பரவிவிடாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சியடைத்து தீயை அணைத்தனர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து நடந்த பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயை அணைத்த பிறகு மின்சாரம் வழங்கப்பட்டது..

மூடப்பட்டிருந்த கடையில் தீ விபத்து நடந்திருக்கிறது, திடீர் தீ விபத்திற்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை..ஒரு லேளை மின்சார இணைப்பில் எதாவது உரசல் ஏற்பட்டு அதனால் தீ பற்றியிருக்குமோ என சந்தேககிக்கபடுகிறது, நடந்து முடிந்த தீ விபத்தில் சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பூஜை பொருட்கள் தீயில் கருகி வீணாகி இருக்கலாம் என கூறப்படுகிறது..

நல் வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதமோ, காயமோ எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Labels:

Sunday, September 24, 2023

தருமபுரி மேற்கு மாவட்டம் செட்டிக்கரையில் புதியதாக திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகத்தினை மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் பார்வையிட்டார்.

தருமபுரி,செப்.23

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 
வரும் 26.09.2023 அன்று தருமபுரி மேற்கு மாவட்டம் செட்டிக்கரையில் கலைஞர் நூலகம் திறந்து வைக்க உள்ளார்கள் அதற்காக நடைபெறும் பணிகளை

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள்
பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.

நிகழ்வில் தருமபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் K.P.சக்திவேல் தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் NA.மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் K.சென்னகிருஷ்ணன்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்
ஆர்.சிவகுரு அவர்கள் மற்றும்
மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்/துணை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Labels:

ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த மாநகராட்சி பணியாளரை பாராட்டிய மாநகராட்சி ஆணையாளர்

ஈரோடு செப் 24-

ஈரோடு மாநகராட்சி பணியாளர் வி.எம்.வெங்கிடுசாமி 10.9.2023 அன்று நடைபெற்ற உலகின் மிக உயரமான 11.155 FIT இடத்தில் லடாக் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு 21 கி.மீ ஆப் மாரத்தான் 3 மணிநேரம் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்து சாதனை படைத்திருந்தார்.

 இந்நிகழ்வினை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் அவர்களிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். உடன் மாநகர பொறியாளர் விஜயகுமார்,
மாநகர நல அலுவலர் பிரகாஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.

Labels:

ஈரோட்டில் அக்டோபர் 15 மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.

ஈரோடு செப் 24-

ஈரோடு ரன்னர்ஸ் கிளப் சார்பில்
மாரத்தான் போட்டி வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான டி-ஷர்ட் மற்றும் பதக்கங்கள் அறிமுக விழா ஈரோட்டில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு ரன்னர் கிளிப்பின் செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார் தலைவர் அருந்ததி செல்வன் முன்னிலை வகித்தார். ஒளிரும் ஈரோடு தலைவர் சின்னசாமி மற்றும் தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு டி -சர்ட் மற்றும் பதக்கங்களை அறிமுகம் செய்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரன்னர் க்ளப் நிர்வாகிகள் கூறும்போது :-

ஈரோட்டில் இரண்டாவது முறையாக போதைப்பொருள் ஒழிப்பு தூய்மையை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. ரங்கம்பாளையம் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கும் இந்த போட்டி எட்டு வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு 5 கிலோ மீட்டரும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 10 கிலோமீட்டரும், அதற்கு மேல் உள்ள வயதினருக்கு 21 கிலோமீட்டர் தூரத்திற்கும் மாரத்தான் நடத்தப்படுகிறது. ஆண்களும் பெண்களும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 3 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகிறது. இப் போட்டியில் பங்கேற்க 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என கூறினார்கள். மேலும் இவ்விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Labels:

பொள்ளாச்சி கோட்டத்தில், விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி, கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு சென்ற, 10 டிப்பர் லாரிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி செப் 24-

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டத்தில், கிணத்துக்கடவு, வடக்கிப்பாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில், 63 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

அதிக பாரம் ஏற்றி, கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய, 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில், ''கனிமவள லாரிகளில், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதில், 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு செய்யப் படுகிறது.

இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், வாகனங்களின் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்,'' என்றார்.

அதிக பாரம் ஏற்றி, கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோகுலகிருஷ்ணன், செல்வி ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர்.அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிய, 10 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறுகையில், ''கனிமவள லாரிகளில், அதிகளவு பாரம் ஏற்றிச் செல்வது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. அதில், 10 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறை மீறல் குறித்து கண்காணிப்பு செய்யப் படுகிறது.

இதுபோன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், வாகனங்களின் அனுமதி ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்,'' என்றார்.

Labels:

திருப்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.



திருப்பூர், செப்.24-

திருப்பூரில் நடைபெறும் மேற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட படியூர் அருகே வருகின்ற 24ம் தேதி தி மு க மேற்கு மண்டல பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் திமு க தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பிமாண்டமான பந்தல், மேடை அமைக்கும் பணி, உணவு கூடங்கள் அமைக்கும் பணி, என பல்வேறு பணிகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவைகள் படியூர் அருகே நடைபெற்று வரும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சாமினாதன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில்  தி.மு.க பூத் முகவர்கள், பாசறை கூட்டம் முடிவடைந்த நிலையில்,மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி, பாசறை கூட்டம் திருப்பூர் மாவட்டம் படியூர் அருகில் வருகின்ற 24 ந் தேதி காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது,  இதில் தி முக வின் 15 மாவட்டங்களுக்கு உட்பட்ட 50 சட்டமன்ற தொகுதியில் இருந்து 14,411 பூத் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. 
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பூத் முகவர்களின் முக்கியத்துவம், 
கடந்த இரண்டரை ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியதன் பொறுப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி, தேர்தல் நேரங்களில் வாக்குகளை திமுகவிற்கு சாதகமாக பெற்று தெருவது, எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் பொய்
குற்றச்சாட்டுகளுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக பதில் அளிப்பது, சமூக வலைதள பயன்பாடு உள்ளிட்டவை குறித்து மாலை 4.00 மணியளவில் தமிழக முதல்வரும், தி மு க தலைவருமான மு. க.ஸ்டாலின் இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார். மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Labels:

Saturday, September 23, 2023

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி அதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரம்

காரிமங்கலம் செப் 23- 

மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அவர்கள் வரும் 26.09.2023 அன்று
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கின்றார்கள் 

அதற்கான கூட்ட ஏற்பாடுகள், பணிகள் தொடர்பாக மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் நேற்று 22.09.2023
காரிமங்கலம் மாவட்ட கழக அலுவலகத்தில்

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்/துணை அமைப்பாளர்கள் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Labels:

Tuesday, September 19, 2023

தர்மபுரி மாவட்ட அறங்காவல் குழு கூட்டம்

தருமபுரி இந்துசமய அறநிலையத் துறை அலுவலகத்தில் இன்று 19.09.2023 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உதயக்குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் P.S.கெளதமன் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள்
ஓவியர் குப்பன், MK.துரை, திருமதி.மாலா, மற்றும் ஆய்வாளர்கள் மணிகண்டன், துரை, இன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Labels:

தருமபுரியில் சவர்மா .. க்ரில் சிக்கன் விற்பனை செய்யும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

தருமபுரி செப் 19-

நாமக்கல் மாவட்டத்தில், சவர்மா சாப்பிட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்ததும், உடல் நலன் பாதிக்கப்பட்டு நாற்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்கை்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவத்தை தொடர்ந்து தருமபுரியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படும் உணவகங்ளில் திடிர் ஆய்வு மேற்கொண்டனர்..

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா தலமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், குமணன்,நந்தகோபால்,  கந்தசாமி, உள்ளிட்ட அலுவலர்கள், தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள, உணவகங்கள், துரித உணகங்களி்ல் திடிரென உள்ளே நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறைச்சிகள் தயார் செய்யப்படுகிறதா, சமையலுக்கு பயன்படுத்தப்படு்ம் இறைச்சி தரமானதாக உள்ளதா, கெட்டுப்போன இறைச்சி எதாவது பயன்படுத்தப்படுகிறதா, இதே போல சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணை மற்றும் செயற்கை நிறமிகள் உள்ளிட்டவைகளயும் அதிகாரிகள் பரிசோதித்து ஆய்வினை மேற்கொண்டனர்..

உணவு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவகங்களில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படு்ம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..

தருமபுரி நகரில் மாலை நேர உணவகங்கள், மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Labels:

Monday, September 18, 2023

நல்லம்பள்ளி தின்னஅள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை


நல்லம்பள்ளி செப்டம்பர் 18

தர்மபுரி கிழக்கு மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் மிட்டா தின்னஅள்ளி ஆதிதிராவிடர் காலணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ10 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை 

தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்  ஏ.எஸ்.சண்முகம், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்  துரைசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி  அமைப்பாளர் தடங்கம் எஸ்.இளையசங்கர்

ஒன்றிய கவுன்சிலர் திரு சசிகுமார் ,திருமதி புனிதம் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி திரு மகேஷ் ,கஜேந்திரன், நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன், கிளைச் செயலாளர் ராமு ,ஊர் கவுண்டர் சின்னத்தம்பி, செல்வம், கோவிந்தசாமி, சங்கர் , மாது, மாரி, செல்வம், ஜோதிமணி, வேடியப்பன், டைலர் சின்னசாமி ,ராமு டைலர், சங்கர், மாதுலிங்கம்  ,சீனிவாசன் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Labels:

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாளாக கடைபிடித்த அரூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர்


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 145 - வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் கிழக்கு ஒன்றியம் கட்டரசம்பட்டியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு ஒன்றிய செயலாளர் கோ.சந்திரமோகன் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சமூக நீதி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணியின் அமைப்பாளர் தேசிங்குராஜன்,  துணை அமைப்பாளர் ரஜினிமாறன், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் சண்முகம்,  முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகநதி,  பெருமாள்,  உமாபதி,   பழனி,  இளங்கோ,  தனபால், ராஜசேகர், தமிழ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Labels:

அரூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாள் விழா



அரூரில் திமுக சார்பில் தந்தை பெரியாரின் 145- வது பிறந்தநாள் விழா நகர செயலாளர் முல்லைரவி தலைமையில்  கொண்டாடப்பட்டது.

முன்னாள் ஒன்றிய செயலாளரும்  அரூர் பேரூராட்சி துணைத்தலைவருமான சூர்யாதனபால் கலந்து கொண்டு பெரியாரின்  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி  சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர் பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள  பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,  நகர துணை செயலாளர்கள் விண்ணரசன், செல்வதயாளன்,  கணேசன்,  அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் கு.தமிழழகன் தீ.கோட்டிஸ்வரன்,   எம்.என்.எஸ். முருகேசன், குமரன்,  அறங்காவலர் குழு உறுப்பினர் ஓவியர்குப்பன், ரவி,  ஐடி விங் சுரேஷ்குமார்,   ஒன்றிய பிரதிநிதி கணேசன்,   சூர்யாவெங்கடேசன்,  ரமேஷ் மாது, சத்யானந்த், விமல், முனுசாமி மாதேஸ்வரன், செல்வம், கணபதி, இருதயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Labels:

Saturday, September 16, 2023

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி.



ஆரணி செப் 16

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.

ஆரணியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. இதில் பலவிதமான வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

கண்காட்சியை மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வமாக கண்டுகளித்தனர். சோழர் காலத்து வாள், முகலாயர் காலத்து குத்து வாட்கள், பழங்காலத்து அம்பு, எலும்பில் செய்யப்பட்ட மணிமாலை, நீர்வாழ் உயிரினங்களின் எலும்பு படிமங்கள். ஓலைச்சுவடிகள், நவாபுகள் காலத்து கூஜா, ஆங்கிலேயர் காலத்து சாட்டை, சமஸ்கிருத செப்பேடு என பலவிதமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சந்திரயான் -3 சோதனையின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளை மணல், திருச்செங்கோடு அருகில் இருந்து கொண்டுவரப்பட்டு, அதன் மீது சந்திரயான் -3 ன் மாதிரி வடிவம் வைக்கப்பட்டிருந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
கண்காட்சியை, பள்ளியின் தலைமை ஆசிரியை, பா.தாமரைச்செல்வி தலைமையேற்று நடத்தினார். கண்காட்சிக்கான பொருட்களை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆர்.விஜயன் ஏற்பாடு செய்திருந்தார் மேலும் கண்காட்சி குறித்து விளக்க உரையாற்றினார்.
பள்ளி ஆசிரியைகளான ஜி.வித்யா, எம்.பூங்கோதை ஆகியோர் மாணவிகளுக்கு கண்காட்சிப் பொருட்களை விவரித்துக் கூறினர். நிகழ்ச்சியின் முடிவில் உதவித் தலைமை ஆசிரியர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.

Labels:

தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 3,92,385 குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று (15.9.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதனை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று (15.09.2023) குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள்.

 இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று (15.9.2023) தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.

 அதனை தொடர்ந்து தற்போது தருமபுரி மாவட்டத்தில் இவ்விழாவின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தை சார்ந்த 2000 மகளிருக்கு இன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,92,385 விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெற்று பரிசீலிக்கப்பட்டு, தற்போது குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

 முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% தனி இடஒதுக்கீட்டினை உருவாக்கி தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் நலன் காக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் விடியல் பயணம் திட்டத்தையும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து, செயல்வடிவம் கொடுத்துள்ளார்கள். இத்திட்டங்களுக்கு மணிமகுடமாக விளங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று செயல்படுத்தியுள்ளார்கள். 

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்கள்.

 இதே தருமபுரி மாவட்டத்தில் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது. தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் 14,105 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,69,254 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடந்த ஆண்டு 21,048 மகளிர் பயனடையும் வகையில் ரூபாய் 116.96 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

 தருமபுரி மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், மொத்தம் 7.50 கோடி பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற மகளிருக்கென பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.

 இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.ஆர்.பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.டி.ஆர்.கீதாராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்), மாநில கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி. அ.ச. மாது சண்முகம், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கவிதா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.

Labels:

தர்மபுரியில் ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்



இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு தர்மபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் 


தருமபுரி கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் C.செல்வராஜ் மற்றும் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர்  K.மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது


வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

இந்த நிகழ்ச்சியில்  தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி EX.MLA, தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர்  டி.என்.வி செந்தில்குமார் MP அவர்கள் கலந்து கொண்டார்

செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1000 தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
2. வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு கழக உறுப்பினர்கள் திரளாக பங்கேற்பதன தீர்மானிக்கப்பட்டது
3. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் அவர்கள் வருவதைஒட்டி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பெருந்திரளாக இளைஞர்களை செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கு பெற வைப்பது என தீர்மானிக்கப்பட்டது

இந்த நிகழ்வில்
மாநில ,மாவட்ட ,ஒன்றிய ,நகர ,பேரூர் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் , அணிகளின் தலைவர்கள் துணைத் தலைவர்கள் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,வார்டு கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் , மற்றும் திமுக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Labels:

Friday, September 15, 2023

வாசலில் வண்ணக்கோலமிட்டு முதலமைச்சருக்கு நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது பிரச்சாரத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்படும் என தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
இதை நிறைவேற்றும் வகையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்.15-ஆம் தேதி உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த தொகையை பெற்ற பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வரவேற்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் பல்வேறு வகைகளில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதனை வரவேற்று தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே தடங்கம் கிராமத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி அவர்களின் துணைவியார் லட்சுமி சுப்ரமணி தங்களது வீட்டின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவித்து நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என வண்ண கோலமிட்டு வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Labels:

Thursday, September 14, 2023

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அரூர் தீர்த்தகிரீஸ்வரன் கோவில் ஆய்வு

அரூர் செப்.14-

தருமபுரி மேற்கு மாவட்டத்தில்
இன்று அரூர் வட்டம் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரன் திருகோவிலுக்கு மாண்புமிகு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தீர்தமலை மலைமீது நடந்து சென்று கோயில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்தார்கள்.

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன் அவர்கள்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA, அவர்கள் மற்றும் மாவட்ட அறங்காவல் குழு தலைவர்
PG கெளதமன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர ஓவியர் குப்பன்,
மாநில தீர்மான குழு செயலாளர்
கீரை.விசுவநாதன், மாவட்ட அவைத் தலைவர் கே.மனோகரன்,
ஒன்றிய கழக செயலாளர்கள்
கோ.சந்திரமோகன், வே.சௌந்தரராசு,
ஆர்.வேடம்மாள், Ex.MLA, அரூர் பேரூர் கழக செயலாளர் முல்லைரவி,
மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ணகுமார், அரூர் பேரூராட்சி துணை தலைவர் சூர்யா தனபால்,
மாவட்ட அமைப்பாளர்கள்
எ.சன்முகநதி, சி.தேசிங்குராஜன்,
கு.தமிழழகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Labels:

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜிசரவணன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.


தூத்துக்குடி செப் 14-

வரும் 18.09.2023 அன்று நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா மற்றம் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலைகள் வைக்கும் பொறுப்பாளர்களுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் ஏற்கனவே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது, சிலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த ஒவ்வொரு சிலைகளுக்கும் 2 தன்னார்வலர்கள் நியமனம் செய்து, சுழற்சி முறையில் அந்தந்த சிலைகளுடன் 24 மணி நேரமும் இருக்குமாறு செய்ய வேண்டும், நிறுவப்படும் சிலையின் உயரமானது அடித்தளத்திலிருந்து மேடை வரை மொத்தம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, சிலை இருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட வேண்டும், விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது விநாயகர் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், மைக் செட் வைத்த வாகனம், இதர வாகனம் என எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதி கிடையாது. விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும் எனவும், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தகரத்திலான ஷெட் அமைத்திருக்க வேண்டும் எனவும், விநாயகர் சிலை ஊர்வலம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சிலையை எடுத்துச் செல்ல வேண்டும், ஊர்வலத்தின் போது பொது அமைதி காத்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும்,

விநாயகர் சிலைகள் நிறுவும் இடத்தின் நில உரிமையாளர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் (RDO) அல்லது சார் ஆட்சியரிடம் (Sub Collector) அனுமதி பெற்றிருக்க வேண்டும். தீயணைப்புத்துறை, மின்வாரியம், ஆகியவற்றிடமிருந்து தடையில்லா சான்றுகள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியிடம் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கான படிவங்களை பூர்த்தி செய்து, அதில் குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை கடைபிடிக்க உறுதியளித்து, அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பிற வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகில் சிலைகள் நிறுவப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடுவதற்கும், கோஷமிடுவதற்கும் எவ்விதத்திலும் இடம் தரக்கூடாது. நிகழ்ச்சி நடக்கும் வளாகத்தில் எவ்வித அரசியல் கட்சிகள் அல்லது மத ரீதியான தலைவர்கள் ஆகியோருக்கு ஆதரவான பலகைகள்/ விளம்பரத்தட்டிகள் வைக்கக்கூடாது.

தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளும், விதிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும், மின்சார சாதனங்கள், பந்தல்கள் அவ்வப்போது கண்காணித்து, விபத்துக்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடங்கள், ஊர்வல பாதைகள் மற்றும் கரைப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை எனவும், மேலும் விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


Labels:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோபாலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலில், திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணியினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், கோபாலம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலில், திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணியினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் இன்று (14.09.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்து, திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகளும், திருக்கோயில் நிலங்களை பாதுகாக்கும் வகையிலும், நவீன தொழில்நுட்பக் கருவிகளின் உதவியோடு அளவீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் ஆக்கிரமிப்புகளை அகற்றியது செய்யப்பட்டது தொடர்பான மற்றும் நிலங்கள் அளவீடு முதல் புத்தகம் கடந்த 18.05.2022 அன்று வெளியிடப்பட்டது. மேலும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் இரண்டாம் பகுதி புத்தகம் கடந்த 08.09.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 28 மாதங்களில் 653 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான 5722 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு. ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 999 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அருள்மிகு பேட்ராய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் 93 சென்ட் நிலத்தை அளவீடு செய்ததன் மூலம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை நிறைவு செய்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 1,50,001 (ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரத்து ஒன்றாவது) ஏக்கர் அளவிடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன. 

இதனை தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அருள்மிகு காலபைரவர் சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு மேற்கோண்டார்கள். பின்னர், தருமபுரி கோட்டக்கோயில்- அருள்மிகு மல்லிகார்ஜூனேஸ்வர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயிலில் திருத்தேர் திருப்பணியினை தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 
திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு  சொந்தமான நிலங்களை DGPS (Differential Global Positioning System) கருவி மூலம் நில அளவையாளர்களை கொண்டு அளவிடும் பணியானது கடந்த 2021 ஆம் ஆண்டு மயிலாப்பூர் திருக்கோயிலில் ஆரம்பிக்கப்பட்டு,  50,000-வது ஏக்கர் நிலங்களை அளவிடும் பணியானது காஞ்சிபுரத்தில் முடிவுற்று, 50,001-வது ஏக்கர் நிலம் அளவிடும் பணியை தொடங்கி வைத்தோம். அதனைத் தொடர்ந்து, நில அளவையாளர்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் நிலம் அளவிடும் பணி திருவள்ளூர் மாவட்ட பவானி திருக்கோயிலில் முடிவுற்று, 1,00,001-வது ஏக்கர் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

தற்போது, தருமபுரி மாவட்டத்தில்  1,50,000 ஏக்கர் நிலம் அளவிடும் பணி  DGPS கருவியின் வாயிலாக நிறைவு செய்யப்பட்டு, திருக்கோயிலுக்குச் சொந்தமான 1,50,001- வது ஏக்கர் நிலம் அளவீடு செய்யும் பணி இன்றைய தினம் பேட்ராய சுவாமி திருக்கோயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலபைரவர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, பக்தர்களின் கோரிக்கைகளான திருமண மண்டபம், குடிநீர் வசதி, கழிவறை வசதி மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறுகின்ற காலபைரவர் வழிபாட்டின் போது விளக்கு ஏற்றுகின்ற வகையில் விளக்கேற்றும் இடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் தருமபுரி கோட்டக்கோயில்- அருள்மிகு மல்லிகார்ஜூனேஸ்வர் மற்றும் பரவாசுதேவர் திருக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, தற்போது மண்டல மற்றும் மாநில குழுக்களின் ஒப்புதல் பெறப்பட்டு, ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் இ-டென்டர் கோரப்பட்டுள்ளது. டென்டர் உறுதி செய்யப்பட்ட பிறகு விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் மகிழ்ச்சியுறும் வண்ணம் மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

மேலும், இன்றைய தினம் இத்திருக்கோயிலில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் திருப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தேர் பணிகள் நிறைவுபெற்று, வருகின்ற தை மாதத்தில் பக்தர்கள் வணங்குவதற்கு ஏதுவாகவும், இத்திருத்தேர் திருஉலா வருவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர் பாபு  அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

 
இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட வருவாய் அலுவலர் (இந்துசமய அறநிலையத்துறை) திருமதி ஜி.விஜயா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி வே.சபர்மதி, தருமபுரி உதவி ஆணையர் திரு.  மா. உதயகுமார், தருமபுரி மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் திரு.பெ.கௌதமன்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் 
திருமதி அ.ச.மாது சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி மகேஸ்வரி பெரியசாமி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர்கள் திரு.ஜீவானநந்தம், திரு.ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


Labels:

Wednesday, September 13, 2023

விரைந்து நடவடிக்கை தர்மபுரி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து வரும் கிராம மக்கள்..


தருமபுரி செப் 13-

தருமபுரியிலிருந்து திகிலோடு வழியாக மருக்காரன்பட்டி கிராமத்திற்கு போதுமான அரசு பேருந்து வசதியி்ல்லாததால், பொதுமக்கள், மாணாக்கர்கள் அவதிபட்டு வருவது குறித்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது, இதனை தொடர்ந்து இரண்டே நாட்களில் கூடுதல் அரசு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்துள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்திக்கு கிராம மக்கள நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்..

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதி என்பது அதிக அளவு மலை கிராமங்களை கொண்டதாக உள்ளது, பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் நகர்ப்புற பகுதிக்கு வந்து செல்ல பெரும்பாலும் அரசு பேருந்தை நம்பியிருக்கும் நிலை உள்ளது..

போதிய பேருந்து வசதி இல்லாததால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு மூட்டை முடிச்சுகளுடன் நடந்து செல்லும் அவல நிலை தொடர்ந்தது,இது தவிர அரசு பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் மாணாக்கர்கள், ஆபத்தான நிலையில் படிகட்டுகளில் தொங்கி செல்லும் நிலை நீண்ட காலமாகவே நீடித்தது, தங்கள் கிராமங்களுக்கு கூடுதல் அரசுப்பேருந்தை இயக்க வேண்டுமென தொடர்ந்து பொதுமக்களும் கோரிக்கை முன் வைத்து வந்தனர், எந்த ஒரு அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவே இல்லை, பேருந்துக்காக பொதுமக்கள் சந்தித்து வரும் சிரமம் குறித்து புகைப்படத்துடன் பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது, இந்த செய்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்களின் கவனத்திற்கு செல்லவே, பொதுமக்கள், மாணாக்கர்களின் நலன் கருதி செய்தி வெளியான இரண்டே நாட்களில் இப்பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்தார் மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி..

தங்களின சிரமங்களை அறிந்து உடனடியாக தங்களது கிராமங்களுக்கு கூடுதல் அரசுப்பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் பாரட்டுக்கயைும் தெரிவித்து வருகின்றனர் கிராம மக்கள்..

கிராம பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க உடனடி நடவடிக்கை எடுத்துள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், கிராம மக்கள், மாணாக்கர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது

Labels:

Tuesday, September 12, 2023

சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


தர்மபுரி செப் 12-

தருமபுரி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் திரு தங்கமணி, நகரக் கழக துணை செயலாளர் முல்லைவேந்தன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ஹரி விக்னேஷ், வர்த்தக அணி துணை அமைப்பாளர்  வெல்டிங் ராஜா,அயலக அணி துணை அமைப்பாளர்  முருகேசன் , கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Labels:

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம்


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் சப் கலெக்டர் தனலட்சுமி தலைமையில் மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Labels:

சேலம் கிழக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம்


சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் வாழப்பாடியில் அமைந்துள்ள தளபதி மு க ஸ்டாலின் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார், சின்னதுரை, கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டாக்டர். வீரபாண்டி பிரபு, அயோத்தியபட்டணம் தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர். மலர்விழி ராஜா, வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர், அயோத்தியபட்டணம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், வாழப்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றிய பொருளாளர் வேல்முருகன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவர் மாணிக்கம். மாவட்ட கவுன்சிலர் கீதா குணசேகரன், திருமலைகிரி ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் என்கிற சாமிநாதன், சந்திரமோகன், குள்ளம்பட்டி ராஜா, தம்மம்பட்டி ராஜா, அயோத்தியபட்டணம் விவசாய அணி அகரம் ராஜேந்திரன். ஏற்காடு முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன் ஏற்காடு ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற ராஜேந்திரன்,, மற்றும் கிழக்கு மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டனர்.

Labels:

ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் 1000க்கும் மேற்பட்டோர் கைது



தருமபுரி செப் 12-

விலைவாசி உயர்வு,வேலையின்மை, இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமை வகித்தார்.

மறியல் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்வு, பொதுதுறை நிறுவனங்களில் காலிப் பணி இடம் நிரப்பபடாமல் இருப்பது,மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது, மணிப்பூர் மற்றும் அரியானாவில் மதக்கலவரத்தை தூண்டி பொது மக்களை படுகொலை செய்வது உள்ளிட்ட மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன்,மாவட்ட துணை செயலாளர்கள் கா.சி. தமிழ்க்குமரன் எம்.மாதேஸ்வரன்,மாவட்ட பொருளாளர் சி.மாதையன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னசாமி, கமலாமூர்த்தி,விதொச மாநில செயலாளர் ஜெ.பிரதாபன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபால்,காதர் உள்ளிட்ட பலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட
1000-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Labels:

Monday, September 11, 2023

வெள்ளகோவில் வார சந்தையில் ஒரே நேரத்தில் 30 டன் முருங்கைக்காயை கொண்டு வந்த 100 விவசாயிகள்


திருப்பூர் செப் 11-

வெள்ளகோவில் பகுதியில் ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 4 முதல் 5 வரைக்கும், மரம் முருங்கை ரூ.4 முதல் 5 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து தெரிவித்தார்.

Labels:

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் திருவிழா


 ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் திருவிழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் திருவிழா  நடைபெற்றது.

இந்த தேர் திருவிழாவில் திமுக சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் க.சுரேஷ்குமார் சேலம் கிழக்கு மாவட்ட அவை தலைவர் மு.ரா.கருணாநிதி மற்றும் நரசிங்கபுரம் திமுக நகரச் செயலாளர் எம்.பி. வேல்முருகன் ஆத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் டாக்டர்.செழியன், மகளிர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஜோதி, நரசிங்கபுரம் திமுக நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் ஆதிதிராவிடர் நலத்துறையின் மாவட்ட துணைத் தலைவர் மணிபாரதி அழகிரி ஆகியோர் அம்மனின் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

Labels:

தர்மபுரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளிக்க முயற்சி..


தருமபுரி:

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு..

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே தாளநத்தம் கிராமத்திற்குட்பட்ட டி. அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனு (48 ) என்பவர் தனது தாய், மனைவி, மகள், என நான்கு பேருடன் திடிரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தலையில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது..

தங்களுக்கு பூர்விகமாக சொந்தமான 1.40 ஏக்கர் விளை நிலத்தை தங்களது உறவினர்களான 1.லோகநாதன் 2.இவரது மனைவி சவுதாமணி 3. மகன் புவியரசு 4.ப்ரேம்குமார், பக்கத்து வீட்டிலிருக்கும் மற்றொரு உறவிறரான 5. குமரேசன், உள்ளிட்டோர், போலி ஆவணங்கள் மூலம் தங்களது நிலத்தை அபரிக்க முயன்று வருவதாகவும், இது தொடர்பாக கடத்தூர் காவல்துறையில் புகராளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது புகாராகும்..

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் தீ்க்குளி்க்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர், இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்..

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Labels:

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விலையில்லா தையல் இயந்திரம்


ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப.,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.

Labels:

திருப்பூரில் தேமுதிக கொடி கம்பம் கல்வெட்டு உடைப்பு: போலீசில் புகார்

திருப்பூர், செப்.12-

திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேல், மாநகர காவல் உதவி ஆணையாளரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகர் மாவட்டம், கொங்கு தகர் பகுதி சார்பில் தே.மு.தி.மு., நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,
கட்சியின்19ம் ஆண்டு துவக்க நாள் விழா 
நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கொங்கு மெயின்ரோடு, கொடிக்கம்பம் ரவுண்டானா பகுதியில் கட்சி கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் தே.மு.தி.க.,கட்சிக்கும், தலைவர் விஜயகாந்த் க்கும் களங்கம் விளையிக்கும் விதமாக நேற்று நள்ளிரவு சில சமூக விரோதிகள் கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தியும், பிளக்ஸ் பேனர்களை கிழித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேற்படி கழக கல்வெட்டை உடைத்தும், பிளக்ஸ் போர்களை கிழித்தும் சேதப்படுத்திய நபர்களை காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Labels:

தர்மபுரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்


பாப்பிரெட்டிப்பட்டி. செப்.11

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணியில் புதியதாக நியமிக்கப்பட்ட தொகுதி, ஒன்றிய, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் இன்று பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட கழக அலுவலகத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பி.பழனியப்பன் அவர்கள் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அணி  நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப  அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், அவர்கள் முன்னிலை வகித்தார்.

மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள்
சி.சண்முகம், ராஜ்கமல், ஆனந்த், ஆதம், பரணி, மற்றும் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்
கண்ணப்பன், சுலைமான், சுரேஷ், பிரபாகரன், பிரியங்கா, தமிழ்வாணன்,
மற்றும் புதியதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்களை சந்தித்து    வாழ்த்துப் பெற்றனர்.

Labels:

Sunday, September 10, 2023

திமுக புதிய நிர்வாகிகள் ஒன்றிய செயலாளரை நேரில் சந்தித்து சந்தித்து வாழ்த்து

தர்மபுரி செப் 10-

தர்மபுரி திமுக ஒன்றிய அலுவலகத்தில்
புதியதாக நியமனம் செய்த தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மேகராஜ், சௌந்தர்யா, ஆகியோர் தருமபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு N.A. மாது அவர்களை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப்பெற்றனர்.

இந்நிகழ்வில் கிளை செயலாளர்கள் சேகரன், முருகன், மாதேஷ், மாது, சிலம்பரசன், ஆகியோர் உடன் இருந்தனர்.

Labels:

செய்யாறில் உலக இயன்முறை தினத்தையொட்டி இயன்முறை ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது


செய்யாறு, செப். 11: 

செய்யாறில் உலக இயன்முறை தினத்தையொட்டி இயன்முறை ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கத்தின் சார்பில் உலக இயன்முறை தினத்தையொட்டி செய்யாறு டவுன் பங்களா தெருவில் உள்ள ருகி சாய் கிளினிக்கில் இயன்முறை ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று நடந்தது நிகழ்ச்சிக்கு மூத்த மருத்துவர்கள் ஜானகிராமன் நிர்மலா தேவி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ருகி சாய் கிளினிக்கின் நிறுவனர் மருத்துவர் கண்மணி வரவேற்றார். ரிவர் சிட்டி லயன் சங்க தலைவர் கி.கோபிராஜ், பொருளாளர் ச.துரைசாமி, மாவட்டத் தலைவர்கள் பி‌.நடராஜன் வி.தெய்வசிகாமணி, பி.எல்.ரவி, ந.கேசவன், பிரேம்குமார், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயன்முறை மூத்த மருத்துவர் மதன் இயன்முறை மருத்துவத் தினத்தை பற்றியும் இயன்முறை மருத்துவத்தின் செயல்பாடுகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முகாமில் 53 பேருக்கு இலவச இயன்முறை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற இயன்முறை மருத்துவர்களுக்கு நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

Labels:

தர்மபுரி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடத்த இடம் ஆய்வு

காரிமங்கலம் செப் 10:-

தருமபுரி கிழக்கு , மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் விரைவில் கூட்டம் நடைபெற உள்ளது.
இளைஞர் அணி கூட்டத்தில் சிறப்புரை ஆற்ற மாண்புமிகு
இளைஞர் நலம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
உதயநிதிஸ்டாலின்  அவர்கள் தருமபுரி 
மாவட்டம் வருகை தருகிறார்கள். அதற்கான  கூட்டம் நடத்த 
இடத் தேர்வினை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்
முனைவர் பி.பழனியப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
தடங்கம் பெ.சுப்பிரமணி Ex.MLA, அவர்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள்,
அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தார்கள்.

Labels:

திருப்புவனம் வைகை ஆற்றில் தூய்மை பணி திட்டத்தை துவக்கி வைத்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் வைகை ஆறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் வண்ணம் குப்பைகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்புவனம் நீர்நிலை பாதுகாப்பு குழு சார்பாக 'தூய்மை பணி திட்டத்தை' சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களின் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

இதில் திட்டத்தை துவக்கி வைத்த கையோடு விறுவிறுவென நேரடியாக களத்தில் குதித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை தாமாக முன்வந்து அப்புறப்படுத்தி அதிரடியாக செயல்பட்டார். மேலும் இத்திட்டத்தின் கீழ் கானல் நீர், ஆடை துணிகள் மற்றும் நெகிழிகள் போன்ற குப்பைகளை இயந்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தன்னார்வலர்களைக் கொண்டும் குப்பைகளை அகற்றும் தூய்மை திட்டப் பணியானது மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் நீர்நிலை பாதுகாப்பு குழுவை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஏனைய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

- செய்தியாளர் லிவிங்ஸ்டன் 

Labels: