Saturday, January 27, 2024

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார்

சென்னை ஜன 27-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2024) சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

அனைவரின் ஆதரவோடு. நமது திராவிட மாடல் அரசின் 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று பயண நாட்கள் தவிர்த்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்.

என்னுடைய கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல, 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த இரண்டு பயணங்கள் மூலமாக. 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 7 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள். தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்கா-வை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். ஐக்கிய அரபு நாடுகளில் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், லூலூ பன்னாட்டுக் குழுமம், கோயம்புத்தூரில் தன்னுடைய திட்டத்தை துவங்கியிருக்கிறது.

ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப் போன்றே, ஸ்பெயின் நாட்டிலும், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன்.

இந்த பயணத்தின்போது, ரோகா (ROCA) மற்றும் கெஸ்டாம்ப், உட்பட சில பெரும் தொழில் நிறுவனங்களுடனும், Invest Spain எனும் முதலீட்டு அமைப்புடனும் நேரடி பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பயணத்தின் மூலமாக, ஐரோப்பிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து. அந்த நாடுகளில் இருந்தும் முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

எனவே, உங்க அனைவரின் வாழ்த்துக்களோடு இந்த பயணம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

உங்கள் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்துகள். பெரிய நிறுவனம் ஏதாவது வர வாய்ப்பு இருக்கிறதா. எவ்வளவு முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பயணம் முடித்துவிட்டு வந்த பிறகு விளக்கமாக சொல்கிறேன் என்று பதிலளித்தார்.

Labels:

மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி ஜன27-

மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் கம்பைநல்லூர் பேரூந்து நிலையத்தில் மொழி போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரூர் கழக செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் அனைவரையும் வரவேற்றார்.

திமுக தலைமை கழக பேச்சாளார்
கவிஞர் வீரமுரசு, ஆரணி மாலா ஆகியேர் சிறப்புரை ஆற்றினார்கள்
கூட்டத்தில் இடிடி.செங்கண்ணன், ரத்தினவேல், வேடம்மாள், மாசிலாமணி, சந்திரமோகன், செளந்தரராசு,
ராஜேந்திரன், கிருஷ்ணகுமார், சென்னகிருஷ்ணன், கலைவாணி,
முல்லைரவி, தேசிங்குராஜன், தமிழழகன், சண்முகந்தி, திருமால், வெங்கடேசன், முகமதுஅலி, கவிதா, சரவணன், தென்னரசு, சென்னகிருஷ்ணன், சண்முகம், கிருஷ்ணன், கோடிஸ்வரன், செந்தமிழ், சசிக்குமார், அருண் உதயசூரியன், ராசிதமிழ், தேவராஜ், சிவாஜி, சுப்புராஜ், செல்வம், பேரூராட்சி உறுப்பினர்கள் சங்கீதா, நந்தினி, ஜீவா, குமார், விஜயலட்சுமி, சேகர், நிர்வாகிகள்
ஜெயக்குமார், திருமால், குப்புசாமி, சந்திரன் ஆறுமுகம், மணிகண்டன், சேகர், மதி, மணி, ஆதிமூலம், மாரியப்பன், சீனிவாசன், பிரதாப், சிவசக்தி, பேசும்தெய்வம், மற்றும் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்தக் கொண்டனர்

Labels:

Thursday, January 18, 2024

டேலண்ட் ஸ்பிரிண்ட், கூகுள் ஆதரவுடன் பெண் பொறியாளர்கள் (WE) திட்டத்தின் ஆறாவது பதிப்பை அறிவித்துள்ளது

கோயம்புத்தூர் ஜன1க்ஷ17-

உலகளாவிய எட்டெக் நிறுவனமும், மாற்றுத்திறனாளி டீப்டெக் திட்டங்களை வழங்குவதில் முன்னணி நிறுவனமான டேலண்ட் ஸ்பிரிண்ட், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தரமான கல்வி மற்றும் பிரீமியம் தொழில் வாய்ப்புகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதில்குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. தொழில்நுட்ப நிலப்பரப்பில் ஒரு சமமான விளையாட்டுக் களத்தை உருவாக்குவதற்கும், உலகளாவிய நிறுவனங்களின் DEI பணிகளுக்கு ஊக்கமளிக்கும் அவர்களின் அடிப்படைத் தத்துவத்துடன் இணைவதற்கும், TalentSprint ஆனது, கூகுள் ஆதரவுடன் அதன் பெண்கள் பொறியாளர்கள் (WE) திட்டத்தின் ஆறாவது பதிப்பை  அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.  

இந்த ஆண்டு திட்டம், நாடு முழுவதும் உள்ள 200 முதல் ஆண்டு பெண் பொறியியல் மாணவர்களை அடையாளம்  கண்டு, தேர்வு செய்து, பயிற்சி அளித்து, உலகளவில் போட்டியிடும் மென்பொருள் பொறியாளர்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் 100% கட்டண உதவித்தொகை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.100,000  உதவித்தொகை வழங்கப்படும். 

பெண் பொறியாளர்கள் திட்டம், பாலினப் பன்முகத்தன்மை பாரம்பரியமாக குறைவாகக் குறிப்பிடப்படும் ஒரு துறையான பொறியியலில் பணிபுரியும் பெண்களை ஊக்குவித்து ஆதரவளித்து வருகிறது. நிதி உதவி மற்றும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், இந்த திட்டம் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான பெண் பொறியியலாளர்களை அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை இலக்குகளை அடைய அதிகாரம் அளிக்கிறது. நிதி உதவிக்கு அப்பால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், கூகுள் இன்ஜினியர்களுடனான வழிகாட்டல் திட்டங்கள், பூட்கேம்ப்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகளுக்கான அணுகல் மற்றும் இளம் பெண் பொறியாளர்கள் தங்கள் எதிர்கால தொழில்நுட்ப வாழ்க்கைக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் சாத்தியமான தொழில் வாய்ப்புகள் உட்பட பல நன்மைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

கூகுள் ஆரம்பத்திலிருந்தே WE திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இலக்கு முன்முயற்சிகள் மூலம் தொழில்நுட்பத்தின் அனைத்து அம்சங்களிலும் பெண்களை மேம்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் இது தடையின்றி இணைக்கப்பட்டுள்ளது. WE திட்டமானது, மிகவும் தாக்கம் மற்றும் பலனளிக்கும் தொழில்நுட்ப வாழ்க்கையை விரும்பும் இளம் பெண் மாணவர்களுக்கு மாற்று வாய்ப்பை வழங்கும் ஒரு முன் முயற்சியாகும். 

கூகுள் துணை தலைவர் மற்றும் பொது மேலாளர், ஷிவ் வெங்கடராமன் இந்த அறிவிப்பு பற்றி கூறுகையில் , “உலகெங்கிலும் உள்ள மக்களின் அனுபவங்கள் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்களால் பெருகிய முறையில் செல்வாக்கு செலுத்துவதால், உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு முன்பை விட இப்போது மிகவும் முக்கியமானது. பெண் பொறியாளர்களுக்கான TalentSprint திட்டத்தைஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது தொழில்துறை அளவிலான இந்த கட்டாயத்தை நிவர்த்தி செய்கிறது, இந்த செயல்பாட்டில் பாலின இடைவெளியைக் குறைக்கிறது, அதே நேரத்தில் பல்வேறு அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன என்பதை உறுதி செய்கிறது. இந்த அடுத்த தலைமுறை பொறியாளர்கள் மற்றும் தலைவர்கள் கொண்டு வரும் மாற்றத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம், அனைவருக்கும் பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்தை தீர்க்கும் திறனை வெளிப்படுத்துகிறோம்,என்றார். 

டேலண்ட் ஸ்பிரிண்ட்  நிறுவனர்,தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். சாந்தனு பால் கூறுகையில், “டேலண்ட் ஸ்பிரிண்ட்  கல்வியின்மாற்றும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மேலும் தடைகளை தகர்த்தெறிவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மகளிர் பொறியாளர்கள் திட்டம் உறுதிப்படுத்துகிறது. ஆர்வமுள்ள பெண் பொறியியலாளர்களுக்கு தேவையான வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வெற்றி பெற உதவுவதே எங்கள் குறிக்கோள். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வேகமான உலகில், பாலின நடுநிலையான எதிர்காலத்தை நாங்கள் வடிவமைத்து வருகிறோம், அது ஒரு தடையாக இல்லாமல் வலிமையின் மூலமாகும்.  கூகுள்  உடனான எங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும், தொழில்நுட்பத் துறையில் பாலின இடைவெளியை குறைப்பதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.WE திட்டம் கல்வியின் உண்மையான ஜனநாயகமயமாக்கலுக்கு ஒரு சான்றாகும், மேலும் பரம்பரைக் கல்லூரிக் கல்வி மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சலுகைகளை வழங்கும் ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. முந்தைய ஐந்து பதிப்புகளில் , 100,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 950 க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்த திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டம் இன்று உலகெங்கிலும் உள்ள சிறந்த உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களுடன் தங்கள் நல்ல பணியின் மூலம் வாழ்க்கையைத் தொடங்கிய பெண் பொறியாளர்களின் சுய-நிலையான சமூகத்தைக் கொண்டுள்ளது.  டேலண்ட் ஸ்பிரிண்ட் மற்றும்  கூகுள் வழிகாட்டப்பட்ட இந்த மாணவர்கள் உலகளாவிய ஹேக்கத்தான்களிலும் பங்கேற்றுள்ளனர், சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பயிற்சி பெற்றனர் மற்றும் சிறந்த பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகளை மேற்கொண்டுள்ளனர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 18, 2024 ஆகும். 

திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, we.talentsprint.com

Labels:

Saturday, January 13, 2024

கோயம்புத்தூர் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா


கோயம்புத்தூர் ஜன13-

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கிராமத்தை நினைவுகூரும் வகையில், மாட்டு வண்டி,உரல்,அம்மி, என மாதிரி கிராமத்தை பள்ளி மாணவ, மாணவிகள் வடிவமைத்து அசத்தியுள்ளனர்..

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் கிராமிய பொங்கல் விழா நடைபெற்றது.. பாரம்பரிய திருவிழாவாக நடைபெற்ற இதில்,கிராமங்களில் கொண்டாடப்படும் விழாக்களை போல மாட்டு வண்டிகள்,கரும்பு தோரணம் கட்டி,வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்தனர்.தொடர்ந்து மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் முழங்க மாணவ,மாணவிகள் கரகாட்டம், பரதநாட்டியம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் கலந்த நடன நிகழ்ச்சிகளை நடத்தினர்..தமிழர் பாரம்பரிய வீரத்தை போற்றும் வகையில் சிலம்பாட்டம்,மான் கொம்பு,வாள் வீச்சு போன்ற சாகசங்களை மாணவ,மாணவிகள் செய்து காண்பித்தனர்..
குறிப்பாக பழங்காலத்தை நினைவு படுத்தும் விதமாக, பாக்குவெட்டி, குத்துகால், அஞ்சறைப்பெட்டி,உரல், செப்பு பாத்திரங்கள், படி உழக்குகள், மரக்கால், பழங்கால கேமராக்கள், கிராமபோன், பழங்கால வால்வு ரேடியோக்கள் போன்றவை காட்சிப்படுத்தி இருந்தனர்.. இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன், நிர்வாகி கவுரி,நிர்வாக இயக்குனர் உதயேந்திரன், செயலாளர் ரவிக்குமார், வித்யாஸ்ரமம் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா,ஆஸ்ரம் பள்ளியின் முதல்வர் சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்..
கிராமத்தில் நடக்கும் திருவிழாவை கண்முன் நிறுத்திய இந்த பொங்கல் விழாவில், பெற்றோர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டு நடனமாடியது குறிப்பிடதக்கது..‌

Monday, January 8, 2024

நார்த்தம்பட்டி ஊராட்சியில் ரூ 13 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

நல்லம்பள்ளி ஜன 8-

நல்லம்பள்ளி வட்டம்  நார்த்தம்பட்டி ஊராட்சி கண்ணானுர் பகுதியில்  கழிவு நீர் கால்வாய்  பணி சுமார் 13 இலட்சம் மதிப்பீட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

இந்த நிகழ்வில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு .ஏ எஸ் சண்முகம் ,நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு .என் எஸ் கலைச்செல்வன், LM.பொன்னுசாமி, லாளிகம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் குமார், ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி,நார்த்தம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுடர்வாணன், வார்டு உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள் என பல கலந்து கொண்டனர்.

Labels:

தமிழகத்தில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களிள் ரூ 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்ப்பு பாஜக தலைவர் அண்ணாமலை


பாப்பாரப்பட்டி ஜன 8- 

தர்மபுரி மாவட்டத்திற்கு எனது மண் எனது மக்கள் பாதயாத்திரை வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதியம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் யாத்திரியை தொடங்கினார் பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு வந்த அண்ணாமலை அங்குள்ள பாரதமாதா ஆலயத்திற்கு சென்று பாரத மாதாவிற்கு மாலை அணிவித்த பின்னர் சுப்பிரமணிய சிவா மணி மண்டபத்தில் உள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை அடுத்து மணிமண்டபத்தில் ஐந்து நிமிடம் தியானத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர்

தியாகி சுப்பிரமணிய சிவா பாரத மாதா கோயில் கட்டுவதற்கு 6 ஏக்கர் நிலத்தினை ரூ.500 க்கு வாங்கியுள்ளனர். பாரதமாதா என்றால், திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு கெட்ட வார்த்தையாக தெரிகிறது. காவி உடையில் இருக்கும் தாய் தான் பாரதமாதா. இதை கவிஞர் ரவிந்திராநாத் தாகூர், தான் இந்தியா முழுவதும் பாரதமாதா புகைப்படத்தை வெளியிட்டார். இதனை தான் சுப்பிரமணி சிவா இங்கு ஆலயத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கனவு கண்டார். 


தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி சிவா பொடிநடையாக நடந்து வந்துள்ளார். இந்த ஆலயத்திற்கு நினைவாலயம் என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. அதை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தியாகி சுப்பிரமணி சிவா கனவு நினைவாகவில்லை.  இதனால் சுப்பிரமணி சிவா இன்னும் மோட்சம் அடையாமல் இருக்கிறார். பாரதமாதா சிலைக்கு  மாலை அணிவிக்க பூட்டை உடைத்தால், கைது செய்யப்பட்டனர் அதை நாங்கள்  பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். மகாத்மா காந்தி செய்தது, குற்றம் என்றால், நாங்கள் செய்ததும் குற்றம் தான். இந்த இடத்தில் மத்திய அரசு சார்பில் நாங்கள் கோவில் கட்டி கொடுக்கிறோம். இதை தமிழக அரசே, அரசு சொத்தாக பராமரிக்கட்டும். இதில் பாஜகவிற்கு எந்த பெயரும் வேண்டாம்.


இந்த ஆட்சியை பொறுத்த வரையில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி நிராகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொருத்துவரை பொங்கல் தொகுப்பை வருமாண வரி கட்டுபவர்கள் என்று கட்டுப்பாடுகள் விதித்தால், இன்னும் 10 ஆண்டுகளில் எல்லா குடும்ப அட்டை தாரார்களும், வந்துவிடுவார்கள். மாநில அரசு இந்த போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். அறிவிப்பு செய்ததை, கட்டுப்பாடுகள் விதித்து நிராகரிப்பது, எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. கரும்பு வழங்க கூட கணக்கு பார்க்கிற ஆட்சி இது. 


தமிழகத்தில் தற்போது நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு நிச்சியமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த இரண்டு நாட்களிள் 10 இலட்சம் கோடி முதலீடு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவ்வாறு வரவில்லை என்றால், நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன்.


1996-ம் ஆண்டுலிருந்து, தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய வரிப்பணம் பாக்கி இருந்தது. ஆனால் மோடி பிரதமரான பிறகு எல்லா வரி பணம் பாக்கியையும் கொடுக்க வேண்டும் என சொல்லி, காங்கிரஸ் ஆட்சி கால பாக்கியை கூட கொடுக்க சொன்னார். அதையும் கொடுத்தாகி விட்டது. இதை தமிழக நிதி அமைச்சர் பேசமாட்டீங்கிறாரு.  இதுவரை 10, 76,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி யாரும் பேச கூடாது. யாரும், யாரையும் வஞ்சிக்கவில்லை. மோடி போன்று மாநில உரிமை பேசும் தலைவர்கள் இந்தியாவில் யாருமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

செல்போன் விளக்கை ஓளிர விட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்திய பார்வையாளர்கள்


கோயம்புத்தூர் ஜன 8-

கோவை பேஷன் ஷோவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம். கட்சி பாகுபாடின்றி திரையுலகம் மட்டுமின்றி அனைவராலும் விரும்பபட்டவர் விஜயகாந்த். 

இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 28ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியில் மறைந்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது..மேடையில் அவரது படத்திற்கு மாடல்கள் மட்டுமின்றி குழந்தைகளும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்..இந்நிலையில் பேஷன் ஷோவை காண வந்த பார்வையாளர்கள் தங்களது செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..இது குறித்து நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் ராஜா கூறுகையில்,நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அஞ்சலி கூட்டத்தை நடத்தியதாகவும்,ஆனால் இது நெகிழ்ச்சியான தருணமாக மாறியது விஜயகாந்தின் மீது மக்கள் வைத்துள்ள அன்பையே காட்டுவதாக அவர் நெகிழ்வுடன் கூறினார்.

Labels:

கோவை இராமநாதபுரம் மண்டல் 66 வது வார்டு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


கோயம்புத்தூர் ஜன 8-

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவராக அண்மையில் ரமேஷ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற அவர், நம்மை காண நம்ம தலைவர் என்ற நிகழ்ச்சியின் மூலம், ஒவ்வொரு வார்டுகளுக்கும் நேரடியாக சென்று, கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்.இந்நிலையில்,கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க.தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராமநாதபுரம் மண்டல் 66 வது வார்டு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் அம்மன்குளம் பகுதியில் நடைபெற்றது..

கூட்டத்திற்கு இராமநாதபுரம் மண்டல் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில்,பா.ஜ.க.கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு வார்டு மற்றும் பகுதி நிர்வாகிகளிடையே பேசினார்.அப்போது பேசிய அவர்,வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறை பாரத பிரதமராக நரேந்திர மோடி ஜி தொடர்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.அதே நேரத்தில் நமது பணியாக நமது பகுதிகளில் அதிக உறுப்பினர்களை சேர்க்கவும்,தேர்தல் நேரத்தில் அதிக வாக்குகளை சேகரிக்க மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு செயலாளர் தம்பி என்கிற மருதாசலமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதாகர், விஜயாரவி, தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் முரளி, ஏ.டி.ராஜன், மண்டல் செயலாளர் ஜெகதீஸ், மாவட்ட சிந்தனையாளர்கள் பிரிவு பாஸ்கரன், சக்திவேல் அண்ணாச்சி, ராம்போ சுப்பிரமணி, கங்காதரன் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டுனர்.

Labels:

கோவையில் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நம்ம ஊரு தாறுமாறு எனும் ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது


கோயம்புத்தூர் ஜன 8-


கோவையில் உள்ள என்.ஐ.ஈவெண்ட்ஸ் சார்பாக நம்ம ஊரு தாறுமாறு எனும் தலைப்பில் ஓவியம் மற்றும் ஆடை அலங கார அணிவகுப்பு கண்காட்சி கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள டயமண்ட் ஓட்டல் வளாகத்தில் நடைபெற்றது. என்.ஐ.ஈவெண்ட்ஸ் நிறுவனர் ராஜா தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக பிரபல தொகுப்பாளர் முத்துக்குமரன் மற்றும் பேஷன் ஆர்ட் நிறுவனத்தின் நிறுவனர் 
சுகுணா சண்முகம், பிரபல ஆடை வடிவமைப்பாலர் அபு , ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய மற்றும் தமிழ் கலாச்சார முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில், வில்லேஜ் எனும் தலைப்பில் கிராமங்களின் முக்கியத்துவம் குறித்த ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு கிராமங்களின் அவசியம் குறித்து ஓவியம் வரைந்து அசத்தினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. இதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை  கூறும் விதமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சார ஆடை அணிந்த மாடல்கள் மேடையில் அணி வகுப்பு நடத்தினர்.ஒரே மேடையில் இந்திய நாட்டின் பல்வேறு மாநில கலாச்சார உடை அணிந்து நடைபெற்ற இந்த அணி வகுப்பு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..

Labels:

Saturday, January 6, 2024

கோவை மாபெரும் உணவுத் திருவிழா - துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர்..


கோயம்புத்தூர் ஜன 6-

கோவையின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் மாநகரத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா மைதானத்தில் மாபெரும் உணவு திருவிழா துவங்கியது.ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் என்கிற உணவு திருவிழாவை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழாவில் சைவம், அசைவம் என கோவையை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட உணவககங்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக பாரம்பரிய தமிழ் கலைகளான ஒயிலாட்டம், பறையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. முன்னதாக உணவுத் திருவிழா துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டது.

Labels:

கோவை புரோஜோன் மாலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் சர்வதேச கிளவுன் கலை விழா நிகழ்ச்சி


கோயம்புத்தூர் டிச 6-

கோயம்புத்தூர் புரோஜோன் மாலில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் கலை விழா கோவையில் முதன்முறையாக ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுகின்றது.

இதுகுறித்து புரோஜோன் மாலின் இயக்குனர், திரு. விஜய் பாடியா, திரு. நிதி மற்றும் நிர்வாக தலைவர் திரு. பாபு, மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலாக்கத் தலைவர் திரு. முசாமில் ஆகியோர் கூறியதாவது :- கோயம்புத்தூர் சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது புரோஜோன் வணிக வளாகம். இன்று ஆண்டுதோறும் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கு வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க எண்ணற்ற சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. ரெட் நோஸ்ஸ் மற்றும் பிக் டீயர்ஸ் குழுவினர் கோவைக்கு வருகை தர உள்ளார்கள். ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ, பெரு, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கும் சர்வதேச கிளவுன் என்ற பெயரில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை 100 நிமிடங்களுக்கு நடத்த உள்ளார்கள். 

இதில் மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட் மற்றும் யூனி சைக்கிளிங் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் பொதுமக்களை சிரித்து மகிழ்விக்க மகிழ்விக்க உள்ளனர். இந்த நிகழ்வானது ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் மதியம் 3.00 மணி மாலை 5.00 மணி மற்றும் 7.00 மணி என மூன்று நிகழ்வுகளாக நடைபெற உள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 199/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவியர்கள் குழுவாக வரும்போது அவர்களுக்கு ரூபாய் 99/- மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்குண்டான டிக்கெட்கள் புரோஜோன் மால் வணிக வளாகத்திலும், ஸ்போர்பி இணையதளத்திலும் கிடைக்கும்.

இந்த நிகழ்விற்கு மீடியா பார்ட்னராக தினமலர் நாளிதழும், அசோசியேட் பார்ட்னராக சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியும் இணைந்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Labels:

தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ 15 கோடி நிதி ஒதுக்கீடு


தருமபுரி டிச 6-

தருமபுரி ரயில் நிலையத்தை மேம்படுத்த ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

 (05.01.24) அன்று தருமபுரி ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர் "தருமபுரி ரயில் நிலையத்தில் 2004 ஆம் ஆண்டு நடைமேடை அமைக்கப்பட்டது. அதற்குப் பின்பு பெரிய அளவில் நடைமேடை மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 கோடி தருமபுரி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மக்களவை உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் சார்ந்து  நாம் முன்வைத்த அத்தனை கோரிக்கைகளையும்  ஒன்றிய அரசு ஏற்று  கொண்டுள்ளது. இந்த நிலையில் தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் நலன் கருதி பல்வேறு மேம்பாட்டு பணிகள் ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இத்திட்டத்தில் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அருகில் 400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 50 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கான்கிரீட் தளத்துடன் கூடிய வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட உள்ளது. உயர் வகுப்பு பயணிகள் காத்திருப்புக் கூடம், மகளிர் மற்றும் பொதுப்பயணிகள் காத்திருப்புக் கூடம் என மூன்று காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நடைமேடையிலும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் இயந்திரம், நவீன கழிப்பிட வசதிகள், தானியங்கி நகரும் படிக்கட்டுகள்,‌ டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள்  உள்ளிட்ட வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் தருமபுரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.  இப்பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் காரணமாக தருமபுரி ரயில் நிலையம் புதுப் பொலிவு பெற்று பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.

Labels:

Tuesday, January 2, 2024

தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பில் மிளிரும் விளக்குகள் விபத்துகளை தடுக்க துரித நடவடிக்கை


தருமபுரி, ஜன 3- 

தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகனைத் தடுக்கும்வகையில் 35 இடங்களில் மிளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்- 44 தொப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள கணவாய் சாலை யைக் கடந்து செல்கிறது. இந்த கணவாய், சாலைப் பாளையம் சுங்கச்சாவடியைக் கடந்து, சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தை அடுத்து தொடங்கி, கட்டமேடு, இரட்டைப்பாலம் வழியாக காவ வர் குடியிருப்பு வரை சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு வளைவுகளு டன் தாழ்வாகக் கடந்துச் செல்கிறது. 

இந்தியாவின் மிகநீண்ட தேசிய நெடுஞ்சாலையான இச்சாலையில், தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் சாலை வளைவுகளுடன் தாழ்வாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை அமைப்பிலேயே கோளாறு 
உள்ளதாகவும் இச்சாலையைக் கடந்துச் செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். 

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகன ஓட்டுநர்கள், தொப்பூர் கணவாய் சாலையைக் கடக்கும் போது சாலையின் அமைப்பு தெரியாமல், சில நேரங்களில் அவர்களின் கட்டுப் பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
தொப்பூர் கணவாய் சாலையில் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் ஒலிபெருக்கி மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மெதுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்துவது.

போதிய வெளிச்சம் பாய்ச்சும் வகையில் சாலையின் நடுவே விளக்குகள் பொருத்துவது. சாலையை அகலப்படுத்துவது, வாகனங்கள் கணவாய் சாலையில் நுழையும் இடத் தில் கனரக வாகனங்கள் இலகு ரக வாகனங்களை எனப் பிரித்து அனுப்புவது, சாலையின் நடுவே விழிப்புணர்வு பலகைகளை வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இத்தகைய நடவ டிக்கைகளால் விபத்துகள் குறைந் துள்ளன. 

தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் நிதி நிறுவனம், பாளையம் கங்கச்சாவடி சார்பில், கடந்த இரண்டு நாள்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளைக் குறைக்க ஒரு பகுதியாக இந்த விளக்குகள் தற்போது பொருத்தப் பட்டுள்ளன. இவை இரவு முழுவதும் ஒளிர்ந்துக் கொண்டே இருப்பதால் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தி விபத்துகளைத் தடுக்க உதவியாக அமையும் என தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தெரிவித்தார்.

மிளிரும்  விளக்குகள்: 

தொப்பூர் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் தற்போது ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தனி யார் நிதி நிறுவனத்தில் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.2 லட் சம் மதிப்பில், கணவாய் சாலையில் கட்டமேடு முதல் இரட்டைப் பாலம் வரையிலான சுமார் 3 கி.மீ.தொலைவுக்கு 35 இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த விளக்குகள் தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு 
எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் பொருத்தப் பட்டுள்ளன.

Labels: