Thursday, July 31, 2025

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் M.L.A., நிருபர்களுக்கு பேட்டி


அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி

தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகைதந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்  ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தி யாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதா வது. மற்ற மாநிலங்களை  ஒப்பிடுகையில் தமிழக காவல்துறை மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் காவல் நிலைய மரணங்கள் வருத்தம் அளிக்கிறது இருந்தாலும் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத்தருவதில் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது.

அரூரில் வேளாண் கல்லூரி அமைப்பது குறி த்து மாவட்ட பொறுப்பு அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக் கல் உபரி நீர் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தாமல் உள்ளது.

ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் அனைத்து நீர்ப்பா சன திட்டங்கள் மற்றும் குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற கோரி சில மாதங்களுக்கு முன் சட்ட சபையில் பேசினேன் முதல்வரிடம் எடுத்து 
கூறினேன் விரைவில் 
திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வோம்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தலுக் காக தேர்தல் பணி செய்வதில்லை எப்பொழுதுமே நாங்கள் தேர்தல் பணி செய்து கொண்டுதான் இருக்கிறோம் என கூறினார்

அரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜி.பி.வெங்கடேசன், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், அரூர் தெற்கு ஒன்றிய தலைவர் ரவி, அரூர் நகர தலைவர் அசோகன், அரூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் சிவலிங்கம், அரூர் மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், அரூர் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கலையரசன், அரூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜியக்குமார் அவர்கள், மத்திய மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ், பொருளாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் விமலன்,சக்தி, தவமணி, மணி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தருமபுரி கிழக்கு மாவட்ட செய்தி(ம) விளம்பர செயலாளர் தருமபுரி(ம) கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் (உள்ளாட்சி ரவுன்ஸ்) ஜி.கே (எ) பி.ஆர்.கோகுல கிருஷ்ணன்,  அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பஞ்சாயத்து, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, July 29, 2025

தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான இலவச கண்பரிசோதனை


தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாமினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.07.2025) துவக்கி வைத்தார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:

 தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 6 வயது வரையிலான குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான பல்வேறு அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது. மேலும், "ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு" என்ற இலக்கை எட்டுவதே இதன் நோக்கமாகும்.

இன்றைய தினம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான இலவச கண்பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். 
மேலும், இளம்வயது கர்ப்பம், இளம்வயது திருமணம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், களப்பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.பவித்ரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.


Saturday, July 26, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரிச்சைப்பழம் விளைச்சல் அமோகம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி, லாபகரமான சாகுபடிக்கு விவசாயிகள்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுவை மிகுத்த பேரிச்சைப்பழம் விளைச்சல் அமோகம் குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயி மகிழ்ச்சி, லாபகரமான சாகுபடிக்கு விவசாயிகள் மாற வேண்டும் மென வேண்டுகோள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடிக்கு பேருப்போன
 இம்மாவட்டத்தில் தற்போது அரபு நாடுகளில் விளைவிக்கப்படும் 
பேரிச்சை சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தவளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன் இவர் தக்காளி, நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார்.
எதிர்பார்த்தப்படி லாபம் கிடைக்காததால் மாற்று பயிர் ஏதாவது சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் தான் அரபு நாட்டில் இருந்து பேரிச்சை செடிகளை வாங்கி வந்து இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்துள்ளார்.
எதிர்பார்த்தப்படி நன்கு வளர்ந்து பேரிச்சை மரத்தில் கொத்து கொத்தாக பேரிச்சை விளைச்சலை கண்டு விவசாயி ஈஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார்,
ஒரு கிலோ பேரிச்சம்பழம் ரூ.150 க்கு வியபாரிகள் கொள்முதல் செய்ய முன்வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.
மேலும் விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காததால் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி அரபு நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு ஒருஏக்கர் நிலத்தில் நடவு செய்து மூன்றாவது ஆண்டில் இருந்து பேரிச்சம்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பேரிச்சை கொத்து,கொத்தாக அதிக விளைச்சல் கண்டு உள்ளது, ஒவ்வொரு குலைகளிலும் 10 கிலோ முதல் 20 கிலோவரை உள்ளது இன்னும் ஒரு சிலத் தினங்களில் அறுவடைக்கு தயராகி விடும் நிலையில் பல்வேறு இடங்ககளில் இருந்து வியாபாரிகள் ரூ.150 க்கு கொள்முதல் செய்ய தயராக இருப்பதாகவும், இதனை
வியபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயி ஈஸ்வரன் மகிழச்சியுடன் குறிப்பிட்டார். மேலும் விவசாயிகள் லாபம் தரக்கூடிய சாகுபடிக்கு மாறினால் விவசாயத்தில் அதிக லாபம் பெறலாம் என்று குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்


கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் ஆலப்பட்டி வி.பி.ஆர்.சி கட்டிடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Wednesday, July 23, 2025

திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் எ.வ.வே. கம்பன் பேச்சு


ஆரணி ஜூலை 24

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை டெல்லியில் மோடிக்கு பணிவிடை செய்து வருகிறார்கள் என சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றிய திமுகஇளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் அரசின் நான்காண்டுசாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் டாக்டர் எ வ . வே கம்பன் பேசினார்.
சேத்துப்பட்டுகிழக்கு ஒன்றிய திமுகஇளைஞர் அணி சார்பில்தும்பூர் கிராமத்தில் கலைஞர் திடலில்முத்தமிழ் அறிஞர்டாக்டர் கலைஞர் 102 வது பிறந்தநாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி. மனோகரன் தலைமை தாங்கினார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி. ராம் மோகன் ,கலாம் பாஷா, ரஞ்சித், வெங்கடேசன், குமரவேல், புருஷோத்தமன், ஒன்றிய துணை அமைப்பாளர்கள் கோதண்டராமன், சிவகுமார், முருகன், குமார், சீனிவாசன், ஹரிராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் அனைவரையும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில்தலைமை கழக பேச்சாளர்கள் கௌசல்யா ,போடி காமராஜ் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி கழக பொறுப்பாளர் டாக்டர் எ.வ .வே கம்பன் கலந்து கொண்டு பேசுகையில்இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
 நீங்கள் தான் ஆதாரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தது தான் சாட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போளூர் தொகுதி அதிக வாக்குகள் அளித்த அன்பு சகோதரிகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது மக்களை சந்திக்கின்றது ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரை பாரத பிரதமராக இருக்கும் மோடிக்கு டெல்லி சென்று பணிவிடை செய்து வருகிறார்கள் கடந்த திமுக ஆட்சியில் 7000 கோடி விவசாய கடனை முன்னாள் முதல்வர் கலைஞர் தள்ளுபடி செய்தார் அவர் கட்சி பார்த்துஓட்டு போட்டவர்களுக்குனு செய்யவில்லை ஓட்டு போடாதவர்களுக்கும் தள்ளுபடி செய்தார்.அவர் வழியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்கட்சி ஆளுங்கட்சி என்று பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை,கல்லூரி மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் தவப்புதல்வன்திட்டமன ரூ. ஆயிரம்வழங்குகிறார்நினைவேதான் மக்கள் இந்த ஆட்சியை ஆயிரம் ஆட்சி என பேசுகின்றனர் என பெருமிதமாக பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் கே. வி. சேகரன், பாண்டுரங்கன், எதிரொலி மணியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் ,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.கே.பாபு, சேத்துப்பட்டு நகர செயலாளர் இரா முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செல்வராஜன்ஒன்றிய அவைத்தலைவர் தர்மபாலன் துணைச் செயலாளர்கள் மகாதேவன் ,தேவகி பெருமாள் மாவட்ட பிரதிநிதி வேதாந்தம் மகேஷ் விவசாய அணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் கிளை செயலாளர் கோதண்டம் நன்றி கூறினார்

செய்யாறு அருகே வெம்பாக்கத்தில் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

செய்யாறு அருகே அரியூர் ,வெம்பாக்கத்தில் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்:

எம் எல் ஏ ஒ. ஜோதி பங்கேற்பு.

செய்யாறு ஜூலை. 24,

வெம்பாக்கம் ஒன்றியம் அரியூர், வெம்பாக்கம் ஆகிய இடங்களில் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம் அரியூர், வெம்பாக்கம் ஆகிய இடங்களில் திராவிட மாடல் திமுகவின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஓ .ஜோதி தலைமை தாங்கி ,சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சீ. பார்வதி சீனிவாசன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஜே சி கே. சீனிவாசன் வரவேற்றார். திமுக பேச்சாளர்கள் இளைய கோபால் ,ஜெயபாரதி ஆகியோர் திராவிட மாடல் அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கிப் பேசினர்.

தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன், பகுத்தறிவு இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட ஆதி திராவிட நல குழு தலைவர் கருணாகரன், வழக்கறிஞர் அணி சிட்டிபாபு ,சீதாராமன், விளையாட்டு அணி கபடி ஞானமுருகன் மாவட்ட பிரதிநிதிகள் அய்யனார் ,பெருமாள், சங்கர், பெருமாள் ,தயாளன் ,ஒன்றிய துணை செயலாளர் குணாநிதி,

இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், குமார், துணை அமைப்பாளர்கள் ராமசாமி, சோமசுந்தரம், அரவிந்தன், ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜ், ராஜேஷ், வெங்கடேஷ், பாலாஜி, செந்தில் குமார், அன்பழகன், ஐயப்பன் மற்றும் சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன் ,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்யாறு அருகே மாங்காலில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்

செய்யாறு அருகே மாங்காலில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்:

எம் எல் ஏ ஒ. ஜோதி பங்கேற்பு.

செய்யாறு ஜூலை. 24,

செய்யாறு அடுத்த மாங்கால் கிராமத்தில் திராவிட மாடல் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த மாங்கால் கிராமத்தில் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திமுகவின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஓ. ஜோதி தலைமை தாங்கி, நான்காண்டு சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் .சங்கர் வரவேற்றார் .மாவட்ட அயலக அணி துணைத்தலைவர் எம். கே. கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே சி கே .சீனிவாசன் ,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மதியழகன் ,விவசாய அணி துணை அமைப்பாளர் லோகநாதன், தொழிலாளர் அணி கருணாநிதி, விளையாட்டு அணி ஞானமுருகன் ,மாவட்ட பிரதிநிதிகள் தெய்வமணி, ராமலிங்கம் ,ஒன்றிய துணை செயலர்கள் ஏகாம்பரம் ,லோகநாதன், சத்யா பெருமாள், பொருளாளர் ரவி, வெண்பாக்கம் கார்த்திகேயன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் விஜயகுமார், சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் முருகானந்தம் ,ரத்தீஷ் ,மணிகண்டன், ஹரிகுமார் கோகுல், ஷர்மா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.கே ஸ்ரீராம், ஜெயபாரதி ஆகியோர் திமுகவின் நான்காண்டு சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேசினர்.


Tuesday, July 22, 2025

கிருஷ்ணகிரி கலைஞர் திடலில் நடைபெற்ற 31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் கலைஞர் திடலில் நடைபெற்ற 31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் அப்போது அவருடன் துணை ஆட்சியர் பயிற்சி க்ரிதிகாம்னா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தனஞ்செயன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Labels:

கீழே இருந்த தங்க நகையை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு


குமரி மாவட்டம் - தக்கலை : 
பத்மநாபபுரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர் ரமேஸ்வரி என்பவர் 

மேட்டுக்கடை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த மூன்றரை பவுன் தங்க நகையினை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

அந்த நகை உரியவரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தினை பத்மநாபபுரம் நகர் மன்ற தலைவர் அருள் சோபன் பாராட்டி தூய்மை பணியாளருக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.

Labels:

வந்தவாசி அருகே புதியதாக அமைய உள்ள அரசு மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ளது கீழ்ப்பாக்கம் . இந்த கிராமம் கீழ்க்கொடுங்காலூரில் இருந்து கீழ்நர்மா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.இந்த பகுதியில் ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான புதிய தனித்த கட்டிடத்தில் புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட உள்ளது.
     
இந்த கடை திறக்கப்பட்டால் ,கடை அருகிலே உள்ள தொடக்கப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறும் பொதுமக்கள், மது பிரியர்கள் வீசிச் செல்லும் கண்ணாடி போத்தல்களால் கால்நடைகளும்,விளைநிலங்களும் பாதிப்பு அடையும் சூழ்நிலை உருவாகும் என அச்சம் தெரிவித்த விவசாயிகள் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்ட விவசாயிகள் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில செய்தி தொடர்பாளர் வாழ்குடை புருஷோத்தமன்,கொவளை டாஸ்மாக்கடை- கீழ்ப்பாக்கம் இடையே 500 மீட்டர் துாரம் உள்ளது. கீழ்நர்மா டாஸ்மாக்கடை- கீழ்ப்பாக்கம் இடையே 1000மீட்டர் தூரம் உள்ளது.

கீழ்ப்பாக்கம் எல்லையில் புதியதாக அமைய உள்ள அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளோம் 20 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் கீழ்ப்பாக்கத்தை சுற்றியுள்ள விவசாயிகள் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். 

அப்போது, தமிழ்நாடு அரசியல் சார்பற்ற விவசாய சங்கம்வாழ்குடை புருசோத்தமன்.தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மாவட்ட செயலாளர் ரமேஷ்,ஒன்றிய பாமக செயலாளர் சிங்கப்பள்ளி முருகன், மருதாடு வீரராகவன் தெய்யார் செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்

Labels:

8 வயது சிறுமியை ஆட்சியர் காரில் பயணம் செய்ய வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுகோட்டை ஊராட்சி மணியம்பாடி ஊராட்சியை சேர்ந்த சிறுமி திஷியா வயது 8 தான் பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டியுடன் வசித்து வருவதாகவும் தான் படித்து கலெக்டர் ஆகுவதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள் தனது அலுவலக அறையை பார்வையிட வைத்து அவருடைய அலுவலக வாகனத்தில் பயணம் செய்ய வைத்து மனம் நெகிழ வைத்தார்.

Labels:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

 
கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


 தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மயிலாடுதுறை மாவட்டம், பட்டமங்கல ஆராயத் தெருவைச் சேர்ந்த அருண்சங்கர் (22) மற்றும் சீர்காழி வட்டம், கொண்டல் கிராமத்தைச் சேர்ந்த சிபிராஜ் (21) ஆகிய இருவரும் நேற்று (திங்கட்கிழமை) மாலை சீர்காழி, பனங்காட்டங்குடி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரமான சம்பவத்தில், உயிரிழந்த அருண்சங்கர் மற்றும் சிபிராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் இந்தத் துயரமான நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Labels:

Monday, July 21, 2025

தர்மபுரியில் யுனிக்யூ கான்செப்ட் மேக்ஸ் நிறுவனம் சார்பில் அபாகஸ் உலக சாதனை படைத்துள்ளனர்

தர்மபுரியில் யுனிக்யூ கான்செப்ட் மேக்ஸ் நிறுவனம் சார்பில் அபாகஸ் உலக சாதனை படைத்துள்ளனர் 

111 மாணவர்கள் 111000 கணக்குகளை இடது கையில் தண்ணீர் டம்ளர் வைத்து கொண்டு 1 மணி நேரத்திற்குள் அபாகஸ் மணக்கணக்கு சமன் செய்து நோபல் உலக சாதனை படைத்துள்ளனர் இதில் அரசு பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டு உலக சாதனை படைத்துள்ளனர் இதை Unique Concept Max Managing Director திருமதி. நந்தினி அழகர் தலைமையில் நடைபெற்றது இதில் நோபல் Chief Operating Officer Mr. Vinoth அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

Labels:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை


ரூ 1 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி


தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பன்னைப்புரம் பேரூராட்சிக்கு  உட்பட்ட காந்திநகர் முதல் மல்லிங்கேஸ்வரர் திருக்கோவில் வரை ரூ 1 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக் கான பூமி பூஜையை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என் ராமகிருஷ்ணன் உடன் பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Labels:

எறும்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா:


செய்யாறு ஜூலை. 21,

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் ,எறும்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா முன்னிட்டு அம்பாளுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.

பின்னர் கூழ் வார்க்கும் வைபவம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து பம்பை, உடுக்கையுடன் பூங்கரகம் ஊர்வலம் நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் உற்சவராக சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. வான வேடிக்கை நடந்த பின், இரவு நாடகம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் .விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Labels: