Tuesday, October 31, 2023

கிக்பாக்சிங் போட்டியில் போட்டியிடும் இந்தியா வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிதி


சென்னை அக் 31- 

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், போர்ச்சுகலில் நடைபெறவுள்ள வாகோ உலக கிக்பாக்சிங் (சீனியர் - மாஸ்டர்) போட்டியில், இந்தியா சார்பில் கலந்து கொள்ளவிருக்கிற தமிழ்நாட்டின் 8-வீரர் - வீராங்கனையருக்கு உதவிடும் வகையில், தலா ரூ 1.50 இலட்சம் என ரூ12 இலட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Labels:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

சென்னை அக் 3-

இன்று (அக்.31) மாலை 6.30 மணிக்குத் தொடங்கவுள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள்கள் குறித்த குறிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய தொழில் துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலக முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கவுள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி தரப்படவுள்ளது.

மேலும், மகளிர் உரிமைத்தொகை, ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள்,சட்டம்-ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் தொடா்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Labels:

Sunday, October 29, 2023

ஸ்ரீ முருகப்பெருமான் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் குழுவிற்கு கண்ணீர் மல்க நன்றி

ஈரோடு அக் 28-

ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப்பெருமான் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை வருடா வருடம் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் தலைவர்களின் பிறந்த தினத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து, பொருளாதாரப் பிரச்சினையில் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமமடைந்ததை அறிந்த ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப் பெருமான் சமூக சேவகர்கள் கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மைக்கேலுக்கு பத்தாயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.பாதிக்கப்பட்ட மைக்கேல் தனது பெற்றோர்களுடன் வசித்து வருவதால், நிதி உதவி வழங்கிய நண்பர்களுக்கு மைக்கேலின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Labels:

கனிமொழி எம்பி மக்கள் களம் - மக்களின் குறை கேட்டல்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கேட்டறிந்தார்

 தூத்துக்குடி அக் 29-

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, வெள்ளையம்மாள்புரம் ஊராட்சி, அருங்குளம் ஊராட்சி, நமச்சிவாயபுரம் ஊராட்சி, சக்கம்மாள்புரம் ஊராட்சி, சிவஞானபுரம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ''மக்கள் களம் - மக்களின் குறை கேட்டல்" நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர்  திருமிகு கனிமொழி கருணாநிதி.எம்பி அவர்கள், உடன் மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான திருமிகு கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் திரு.லெட்சுமிபதி, மாநகராட்சி மேயர் திரு.ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் திரு.அன்புராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Labels:

Saturday, October 28, 2023

தர்மபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் அவர்களின் மற்றொரு சாதனை

தர்மபுரி அக் 28-

தருமபுரி மாவட்ட மக்களின் 80 ஆண்டு கால கனவு திட்டம் தருமபுரி மொரப்பூர் இணைப்பு ரயில் திட்டம்.

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நிலம் கையெடுக்கப்படுத்தும் பணிக்கு முதல் கட்டமாக 50 கோடி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு தருமபுரி எம்பி செந்தில்குமார் தகவல். 

இத்திட்டத்திற்காக 2023 மத்திய பட்ஜெட்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது . தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலங்கள் அளவிடப்பட்டு நில உரிமையாளர்களுக்கு நிலத்திற்கான தொகை நிர்ணயம் பணிகள் முடிவடைந்தது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் சதன் ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் அவர்களை சந்தித்து ரயில் திட்டத்திற்கு நில அளவை பணிகள் முடிவடைந்தது நிலத்திற்கான தொகையை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் . இதனை தொடர்ந்து நில அளவைப் பணி மற்றும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 50 கோடி ரூபாயை முதல் கட்டமாக ரயில்வே துறை விடுவித்துள்ளது. மேலும் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கோரிக்கை யான கோவை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். கன்னியாகுமரி பெங்களூர் எக்ஸ்பிரஸ் பொம்மிடி ரயில் நிலையத்திலும் சென்னை திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ். கோயமுத்தூர் திருப்பதி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மொரப்பூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டுமென தெற்கு ரயில்வே மேலாளர் இடம் சந்தித்து நேரடியாக கோரிக்கை வைத்தார். தற்போது கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை சென்று வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தார் முக்கியமான ரயில்களை மொரப்பூர் மற்றும் பொம்மிடி ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டும் என்று பலமுறை மத்திய அமைச்சர் மற்றும் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ஆகிய தொடர்பு கொண்டு கடிதத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்து உள்ளதையும் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

Labels:

Friday, October 27, 2023

பழமைவாய்ந்த கோயில்கள் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு

சென்னை அக் 27-

சென்னையில் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் சென்னை மண்டல இணை ஆணையர்-1 ல் சேதமடைந்து இருக்கும் 25 கோவில்கள் பட்டியலிடப்பட்டு அதில் முதல் கட்டமாக 7 கோவில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். சூளை பகுதியில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களான வெங்கடா ஜலபதி பரிபாலன சபா, லட்சுமி அம்மன் கோவில், தர்மராஜா கோவில், திரவுபதி அம்மன் கோவில், வேம்புலி அம்மன் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் குட முழுக்கு நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கோவிலின் மேற்கூரை மற்றும் சுவர்கள் ஆலமர விழுதுகளால் சிதிலடைந்தள்ளதாலும் மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்திட திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, 2024-25 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், சூளை, லட்சுமி அம்மன் கோவில் சுற்றுச் சுவருக்கு உள்ளே பூங்கா நகர், சென்னமல்லீஸ்வரர் கோவிலின் அடிமனை தாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டு உள்ள கடைகள் மற்றும் இரும்பு பட்டறைகள், திரவுபதி அம்மன் தர்மராஜா கோவில் சுற்றுச்சுவருக்கு உட்புறம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 10 கடைகள், வேம்புலி அம்மன் கோவிலின் சுற்றுச்சுவருக்கு முன்புறம் கோவில் மற்றும் அதற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ள 2 கடைகள் ஆகியவற்றை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். தர்மராஜா கோவிலுக்கு எதிரே சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி சுவா தீனம் பெறப்பட்ட கந்தக்கோட்டம், முத்துகுமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தினை புனரமைத்து மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Labels:

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாb

நாகர்கோவில் அக் 26-

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாவானது கடந்த 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்டது. இந்த கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது. மேலும் 282 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ரூ.1.28 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம் சங்கத்தின் செயலாட்சியர் லீலா கூட்டுறவு சார்பதிவாளரால் பெறப்பட்டது.

Labels:

Thursday, October 26, 2023

அக்டோபர் 31 தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

சென்னை அக் 26-

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்....

” தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற செவ்வாய்கிழமை மாலை 6.30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த குறிப்புகள் அமைச்சர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆளுநரிடம் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்கள், புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

Labels:

நல்லம்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி அக் 26-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் தருமபுரி மாவட்டம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சமுதாய வளைகாப்பு விழா நல்லம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா வரவேற்புரை ஆற்றினார். சமுதாய வளைகாப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் தலைமையேற்று விழா பேரூரை ஆற்றினார். அதனை தொடர்ந்து நல்லம்பள்ளி வட்டாரத்திற்கு உட்பட்ட 100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி பெண்களுக்கு வளையல் அனிவித்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் ஏ.எஸ் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், தொகுதி மேற்பார்வையாளர்கள் சந்திரா, தமிழ்ச்செல்வி, ஜெயா, அன்புகரசி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Labels:

Tuesday, October 24, 2023

5-வது நாளாக தொடர்ந்து நீடிக்கும் போராட்டம்

 கோயம்புத்தூர்  அக் 24-

கோவை மாநகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த 20-ந்தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் தற்போது 5-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானத்தில் இன்று காலை திரண்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், மாநகராட்சி அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Labels:

நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

சென்னை அக் 24- 

உலக கோப்பை கிரிக்கெட்டின் நேற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 283 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம் 92 ரன்களும், அப்துல்லா சாஃபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 284 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 286 ரன்களை எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 113 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர். அதேபோல், அடுத்து களமிறங்கிய ரஹமத் ஷா 84 பந்துகளில் 77 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 45 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர்.

Labels:

அரசு பேருந்தும் டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி பலி

திருவண்ணாமலை அக் 23-

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில் அந்தனூர் பகுதியில் அரசு பேருந்தும் டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த 4 நபர்கள் மற்றும் எதிரே வந்த பேருந்தில் பயணம் செய்த 10 நபர்கள் என 14 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி டாட்டா சுமோ காரில் சுமார் பத்து நபர்கள் பயணம் செய்தனர். பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து செங்கம் அருகே வந்து கொண்டு இருந்தது. அவ்வாறு வரும்போது செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதி அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற டாடா சுமோ காரும் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டாடா சுமோ காரில் பயணம் செய்த 6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகினர். மேலும் காரில் பயணம் செய்த நான்கு நபர்கள் மற்றும் எதிரே வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 10 நபர்கள் என 14 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து மேல்செங்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Labels:

Monday, October 23, 2023

திருவண்ணாமலையில் திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

திருவண்ணாமலை அக் 22-

பாராளுமன்ற தேர்தல் களம் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக் கனியை பறிப்போம். 2021ம் ஆண்டின் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைத்த ஊர் திருவண்ணாமலை.திமுகவின் கோட்டையாக விளங்கும் ஊர் திருவண்ணாமலை. வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் சரிபார்க்க வேண்டும்.திமுக தொண்டர்கள் தான் எனக்கான உற்சாகம். அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க வேண்டும்.அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்தி வருகிறோம். வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க வேண்டும். ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.மக்களின் தேவைகளை கேட்டு நிறைவேற்றி தர வேண்டும். திமுக அரசின் திட்டங்களை கூற நேரம் போதாது.எடப்பாடி பழனிசாமி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பெண்களுக்கு இலவச பேருந்து, காலை சிற்றுண்டி திட்டம் உங்களின் திட்டமா ? என்று ஈபிஎஸ்-ஐ கேட்கிறேன்.சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை யார் ஆட்சியில் நடந்தது? திமுக குடும்ப கட்சி தான், கோடிக்கணக்கான குடும்பங்களை வாழ வைக்கும் கட்சி.இவ்வாறு அவர் கூறினார்.

Labels:

தர்மபுரி பென்னாகரம் செயல்படாமல் இருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து

பென்னாகரம் அக் 22-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (50). இவர் எம்.கே.நகரில் பேரூராட்சி வளமீட்பு பூங்கா அருகில் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டாசு குடோன் வைத் துள்ளார். இன்று அதிகாலை 5 மணிக்கு பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு குடோனில் இருந்த வெடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் பென்னாகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் தரைமட்டமானது. அதிகாலை நேரம் என்பதாலும் ஊருக்கு சற்று ஒதுக்கு புறமாக பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சமீப காலமாக பட்டாசு குடோன் செயல்படாமல் இருந்துள்ளதும், இந்த குடோனில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் பென்னாகரம் நீதிமன்றத்தில் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டு பாதுகாத்து வந்ததும் தெரியவந்தது. இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Labels:

Saturday, October 21, 2023

6 கிலோ தங்கம் 4 சொகுசு கார்கள் 8 செல்போன்கள் பறிமுதல். தனிப்படையினருக்கு ஐஜி பாராட்டு

தர்மபுரி அக் 21-

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி பேட்டி...

தருமபுரி அருகே... 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 9 பேர் கைது 6 கிலோ தங்கம் நான்கு சொகுசு கார்கள் 8 செல்போன்கள் பறிமுதல்....மேற்கு மண்டல ஐஜி நேரில் பார்வையிட்டார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சேலம்.. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்.. பூலாப்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் காருடன் ஐந்து கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. 

இந்த நிலையில் கொள்ளையர்களைகைது..
தங்கம் பறிமுதல்  

கோவை மேற்குமண்டல ஐஜி பவானீஸ்வரி பார்வையிட்டு சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை பாராட்டி பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது
கடந்த 28.09.2023 அன்று அதிகாலை 01.45 மணிக்கு பெங்களூரு
தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாம்பட்டிகிராமத்தில் கோயமுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீ தீக்ஷா நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை
வழிமறித்து. 5 கிலோ 950 கிராம் (743 பவுன்) எடையுள்ள தங்க நகைகள் மற்றும் பணம்ரூ.60 லட்சம் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில்
காரிமங்கலம் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.கொள்ளைபோன மொத்த சொத்தின் மதிப்பு ரூ.3,95,00,000 ஆகும்.உடனடியாக சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில்நகை கடை உரிமையாளர் திரு.பிரசன்னா (40) த/பெ. கோகுல கிருஷ்ணன், எண் 15.
பழனிச்சாமி தோட்டம், எழில் நகர் பின்புறம், செல்வபுரம், கோயமுத்தூர் என்பவருக்குசொந்தமான மேற்சொன்ன ஸ்ரீ தீக்ஷா நகைக்கடைக்காக தங்க நகைகள் வாங்கிவரும்.பொருட்டு, நகைக்கடை மேலாளர் திரு.விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியாக சுரேஷ் குமார் மற்றும் ஓட்டுனர் திரு.ஜெய்சன் ஆகியோர் மேற்படி நகைக்கடைஉரிமையாளரின் காரில் பெங்களூரு அவின்யூ சாலையில் அமைந்துள்ள தர்சன் நகைக்கடையில் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும்
கோயமுத்தூர் நோக்கி சென்றுகொண்டிருக்கும் வழியில் மேற்படி பெரியாம்பட்டிபூலாப்பட்டி ஆற்றின் மேம்பாலம் முடியும் இடத்தில் அடையாளம் தெரியாத 4 கார்களில் வந்த 15 நபர்கள் மேற்படி நகைக்கடை ஊழியர்கள் பயணம் செய்து கொண்டிருந்த காரை
வழிமறித்து, காரிலிருந்த மேற்படி தங்க நகைகளையும், காரில் வைத்திருந்த பணத்தைகொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக கோயமுத்தூர் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பவானீஸ்வரி மற்றும் சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் அமைக்கப்பட்ட 10 தனிப்படைகள் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், 29.09.2023 அன்று நகைக்கடை ஊழியர்கள் பயன்படுத்திய எடியோஸ் காரை கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  கொல்லபுரியம்மன்
கோயிலருகில் வெட்காளியம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து, அந்த காரை கைப்பற்றப்பட்டது.
மேற்படி தனிப்படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் மற்ற அறிவியல் சார்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற விவரங்களில் குற்றவாளிகள் அனைவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டறியப்பட்டது.

இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1) சுஜீத் (29), 2) சரத் (36) மற்றும் 3)பிரவீன் தாஸ் (33) ஆகியோரை 16.10.2023 அன்று முதற்கட்டமாக கோயமுத்தூரில்வைத்து கைது செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மற்ற எதிரிகளான 4) கே. ஏ. சிகாபுதின் (எ) க்ஷிபு (36), 5)எம். எஸ். சைனு (30), 6)அகில் (எ) ஆம்புலன்ஸ் (30) மற்றும் 7) எ. எஸ். சஜிஸ் (எ) குட்டன்(35) ஆகியோரை 20.10.2023 ஆம் தேதி கைது செய்யப்பட்டது.மேலும், முக்கிய குற்றவாளிகளான அந்தோணி மற்றும் சிரில் ஆகியோரைசென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றவாளிகளிடமிருந்து மொத்தம் 4 கார்களும் (Suzuki Baleno &
Suzuki Ertiga, BMW, Suzuki Breeza), 8 செல்போன்களும், சுமார் 33 கிராம்
எடைகொண்ட இரண்டு தங்கச் சங்கலிகளும் கைப்பற்றப்பட்டும் மற்றும் மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் 5.950 கிலோ கிராம் அப்படியே கைப்பற்றப்பட்டும்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூ.19,50,000/- ம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட
பணத்தில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் வாங்கிய BMW காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.மொத்தம் மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் ரூ.3,71,24,900 ஆகும். மேலும் தலைமறைவாக உள்ள 6 குற்றவாளிகளை பிடிக்க தொடர் புலன் விசாரணை நடைபெற்றுவருவதாக மேற்கு மணடல ஐஜி பவானீஸ்வரி பேட்டியில் தெரிவித்தார்.

Labels:

ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்வு.. பூக்கள் வாங்குவதற்காக மக்கள் அலைமோதல்

சேலம் அக் 21- 

சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.700-க்கு விற்பனை யானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்ற சன்னமல்லி ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும், கலர் காக்கட்டான் ரூ.360-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.440-க்கும், நந்தியாவட்டம் ரூ.400-க்கும் விற்பனையானது.விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.

Labels:

விடுதி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி அக்-21,

தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதி காப்பாளர் சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம் தருமபுரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் தேவன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.வேனு,ஆர்.மூர்த்தி,எம்.அன்பழகன் ,எஸ்.தினமணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக எஸ்.பச்சியப்பன்,மாவட்ட செயலாளராக ஜி.எம்.சங்கர்,மாவட்ட பொருளாளராக ஏ.மணிவணன்,ஆகியோரும் துணை தலைவர்களாக எம்.மகேஸ்குமார்,டி.மணிகண்டன்,துணை செயலாளர்களாக என்.மாரியப்பன்,பி.பச்சியப்பன்,இணைச்செயலாளர்களாக கே.பொன்னரசு,எஸ்.சரவணன்,பிரச்சார செயலாளர் ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.விடுதி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் .புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Labels:

தர்மபுரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு- 63 குண்டுகள் முழங்க எஸ்.பி மலர் வளையம் வைத்து மரியாதை.

தர்மபுரி அக் 21-

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 நாள் இதேநாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து 10, ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி, காவலர் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், இந்த ஆண்டு தர்மபுரி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி, பணியின்போது உயிரிழந்த 189 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் வீர வணக்க நினைவு தூணுக்கு தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காவல் துறையின் சோக கீதங்களுடன் 63 குண்டுகள் முழங்க காவல் துறையினர் வீரவணக்கம் செலுத்தினர். இந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Labels:

Thursday, October 19, 2023

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி அக் 19-

நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம் பெ.சுப்ரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாமில் தாது உப்பு கலவை வழங்குதல், சினை ஊசி போடுதல்,
சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சை
கால்நடை கண்காட்சி, குடனர்புண் நீக்கம்,  தீவன பயிர் கண்காட்சி ஆகியவற்றை தொடங்கி வைத்தார் இறுதியில் சிறந்த கால்நடைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.வைகுந்தம்,  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் இரவி,  தொண்டரணி துணை அமைப்பாளர் காந்தி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,  மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Labels:

பருவ நிலைக்கு ஏற்ற விதைகள் உரங்கள் தர்மபுரி வேளாண் இடுபொருள் நிலையங்களில் தயார் நிலையில் உள்ளன

தர்மபுரி அக் 20-

நடப்பு ரபி பருவத்திற்கு தேவையான  7 மெட்ரிக் டன் நெல் ரகங்கள்,சிறு தானியங்கள் 15 மெட்ரிக் டன்,பயிர் வகைகள் 20.5 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 30 மெட்ரிக் டன்  விதை கிராமம் மற்றும் NFSM திட்டத்தின் கீழ் விநியோகம் செயிதிட தர்மபுரி வட்டாரத்தில் உள்ள 2 வேளாண் இடுபொருள் விற்பனை நிலையங்களிலும் தயார் நிலையில் உள்ளது.

மேலும் நடப்பு ரபி பருவத்திற்கு தேவையான 1805 மெட்ரிக் டன் யூரியா,739 மெட்ரிக் டன் டிஎபி,494 மெட்ரிக் டன் பொட்டாஸ் மற்றும் 1533 மெட்ரிக் டன் நைட்ரஜன்,பொட்டாசியம் காம்ப்ளெக்ஸ் உரம்,104 மெட்ரிக் டன் சூப்பர் உரங்கள் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி போதுமான அளவில் கிடைத்திட அனைத்து தனியார் உரக்கடைகளிலும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தரமான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துங்கள் கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் தரக்கட்டுப்பாடு பிரிவின் மூலம் திடீர் ஆய்வு குலுக்கள் அமைக்கப்பட்டு தர்மபுரி வட்டாரம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிட உத்தரவிடப்படுள்ளது என்று தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மு.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.                                          

Labels:

Wednesday, October 18, 2023

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் உதயநிதி செங்கல்பட்டு மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு

சென்னை அக் 18-

தமிழ்நாடு இளைஞர் நலன்   மற்றும்  விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக எந்தவொரு மாவட்டத்துக்குச் சென்றாலும் அங்குள்ள அரசு மாணவர் விடுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசுக் கல்லூரி மாணவர் விடுதியில் நேற்று ஆய்வு செய்தார் .

விடுதி மாணவர் பதிவேடு, சமையல் கூடம், உணவருந்தும் இடம், உணவுப்பொருள் சேமிப்பு அறை, மாணவர்கள் தங்கும் அறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு . 

விடுதியில் உள்ள வசதிகள் குறித்து தமிழ்நாடு  இளைஞர் நலன் மற்றும் மற்றும்  விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் மாணவர்களிடம் கேட்டறிந்தோம். விடுதி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் தரமுடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விடுதி காப்பாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் - அதிகாரிகளை அறிவுறுத்தினார் .

Labels:

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி அரூரில் நடைபெற்றது

அரூர் அக் 17-

கலைஞர் நூற்றாண்டு விழாவை
முன்னிட்டு  தருமபுரி மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் நேற்று செவ்வாய்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை  6.00 மணிவரை அரூர் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்க்கு பேச்சு, கட்டுரை போட்டி  முத்தமிழறிஞர் கலைஞர்100  பேச்சும் எழுத்தும்!  நடைபெற்றது. 

தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் எம்.சந்தர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பேச்சு,கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் சான்றிதழ். பதக்கம்,
பரிசுகள் வழங்கி  தருமபுரி 
மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநில மாணவர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர்.இரா.தமிழரசன், அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஆர்.சி.பிரபு, இரா.முனுசாமி, செ.அரவிந்த், சகா.சுர்ஜித், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் மாரி.கருணாநிதி, கவி.முகிலன்,
அ.வேடியப்பன், கார்த்திகேயன், அண்ணாமலை, பிரேம்சந்தர், ஆகியோர் நடுவராக பணியாற்றினர்.
நிகழ்வில் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி டி.சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆ.மணி, செ.கிருஷ்ணகுமார், எம்.ராஜகுமரி,
மாவட்ட பொருளாளர் எம்.எம்.முருகன், 
பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், கோ.சந்திரமோகன்,  வே.செளந்தரராசு, எம்.ரத்தினவேல், சி.முத்துக்குமார். பி.எஸ்.சரவணன், பேரூர் கழக செயலாளர்கள் முல்லை ரவி,
பி.கே.முரளி, எம்.எ.வெங்கடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டி.சந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவகுரு, மாவட்ட சிறுபான்மை நல பிரிவு முகாமுகமது அலி, மாவட்ட  விவசாய அணி தலைவர் சி.தென்னரசு,  ஆதிதிராவிடர் நலக்குழு கே.திருமால், இலக்கிய அணி ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தீ.கோடிஸ்வரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் சி.சண்முகம், எம்.ராஜ்கமல், ஆதம், மற்றும் 300 க்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஆர்.புனிதா நன்றியுரை ஆற்றினார்.

Labels:

Tuesday, October 17, 2023

வேளான்மைத் துறையில் பணமில்லா பரிவர்த்தனை

தர்மபுரி அக் 17-

தருமபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்போது பணமில்லா பரிவர்த்தனை என்பது நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 

கூகுள் பே (GOOGLE PAY), போன் பே(PHONE PAY), பே டி எம்(PAYTM) போன்ற நிறுவனங்கள் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேளான்மைத்துரையிலும் பணமில்லாத பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதேபோல் தருமபுரி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. QR 0 ஸ்கேன் கோடு, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி இனி விவசாயிகள் வேளாண்மை இடுப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த பணமில்லா பரிவர்த்தனையை தர்மபுரி வட்டார விவசாயிகள் பயன்படுதிக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Labels:

திமுக இளைஞரணி செயலாளர் பெயர் பதித்த பாய் பரிசளிப்பு

தர்மபுரி அக் 17-

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம்  பைசுஅள்ளி ஊராட்சி குண்டலஅள்ளி பகுதியை சேர்ந்த  சுபா மேட்ஸ் உரிமையாளர் பாபு அவர்கள் திமுக இளைஞர் அணி செயலாளரும் மாண்புமிகு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்  Udhayanidhi Stalin அவர்களுக்கு உதயநிதி பெயர் பதித்த பாய் வழங்கினார்.

Labels:

சித்தேரி ஊராட்சியில் 14 கோடியே 13 இலட்சத்தில் 18 கிராம சாலை அமைக்கும் பணி தொடக்கம்

அரூர் அக் 17-
 
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரி ஊராட்சியில் 14 கோடியே 13 லட்சத்தில் 18 கிராம சாலை அமைக்கும் பணி தொடக்கவிழா நேற்று 16.10.2023 சித்தேரியில் நடைபெற்றது. 

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்  அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.S.செந்தில்குமார் MP, ஆகியோர் 
சாலைப் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.முத்துகுமார்,
மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் அ.சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன்,
சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், துணைத் தலைவர் சாந்தி சக்திவேல் சன்முகம்,
ஒன்றிய குழு உறுப்பினர்கள் பழனியம்மாள் மாணிக்கம்,மற்றும் சந்தோஸ்குமார் கழக நிர்வாகிகள் சித்தேரி ஊராட்சி பொதுமக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Labels:

Monday, October 16, 2023

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 261 கன அடி தண்ணீர் வந்தது.

ஈரோடு அக் 16-

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் வாய்க்காலுக்கு பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பவானி ஆற்றில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்காக மற்றும் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மேலும் பாசனப்பகுதியில் பரவலாக மழை பெய்து உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுவது வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 67.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 261 கன அடி தண்ணீர் வந்தது.

 பவானிசாகர் அணையின் வரலாறு

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர். நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம் 1956 இல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும். இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கனஅடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். [1]. அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது


Labels:

தர்மபுரி செந்தில் மெட்ரிக் பள்ளியில் 500 படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி

தர்மபுரி அக் 15-

தர்மபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் மழலையர் வண்ண விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவுக்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி தலைமை தாங்கி அறிவியல் கண்காட்சி, உணவுத் திருவிழா மற்றும் மழலையர் வண்ண விழாவை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே. தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிர்வாக அலுவலர் சி. சக்திவேல் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் 500-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்திராயன் விண்கலம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. சிறுதானியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தது.

மேலும் வண்ண விழாவில் குழந்தைகளின் அணிவகுப்பம், பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்பட்டிருந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்த கண்காட்சி மற்றும் திருவிழாவினை ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர்கள் வள்ளியம்மாள், ரபீக் அகமது, துணை முதல்வர் கவிதா மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் செய்திருந்தனர். தொடர்ந்து இந்த அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா  (திங்கட்கிழமை) மாலை வரை நடைபெற உள்ளது.

Labels:

Sunday, October 15, 2023

இஸ்ரேலில் இருந்து 274 தாயகம் வந்துள்ளனா். அவர்களில் 27 தமிழா்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்

சென்னை அக் 15-

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போா் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசின் சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. அங்கு 128 தமிழா்கள் இருப்பது அறியப்பட்டது. அவா்களில் முதல்கட்டமாக, 21 போ் வெள்ளிக்கிழமை தமிழகம் வந்தடைந்தனா். 2-ஆம் கட்டமாக மதுரை, திண்டுக்கல், கரூா், தென்காசி, தருமபுரி, திருப்பூா், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூா், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 28 தமிழா்கள், இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக சனிக்கிழமை காலை தில்லி வந்தடைந்தனா்.

அதன்பிறகு, தமிழ்நாடு அரசு மூலம் அனைவரும் சென்னை மற்றும் கோவைக்கு வந்து சோ்ந்தனா். சென்னை விமான நிலையத்துக்கு 16 பேரும், கோவைக்கு 12 பேரும் வந்தனா். பின்னா் அவா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 'ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் ஒரு பகுதியாக, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலில் சிக்கித் தவித்த 274 இந்தியர்கள் 4 -ஆவது சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தனா். தில்லி வந்த இந்தியர்களில் 27 தமிழர்கள் 3 -ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

இதையும் படிக்க |திருவனந்தபுரத்தில் தொடரும் கனமழை: மூன்று ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தில்லியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த 27 தமிழா்களை அரசின் சாா்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இஸ்ரேலில் இருந்து 110 பேர் இதுவரை தமிழகம் வந்துள்ளனர். இன்னும் 18 பேர் வரவேண்டியுள்ளது. அவகளையும் மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடரும்.

இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரம் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 95 சதவிகிதம் பேர் மேற்படிப்புகளுக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

வெளிநாடு செல்லும் தமிழர்களின் தரவுகளை உள்ளடக்கிய இணையதளத்தை தொடங்க உள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Labels:

தமிழக கேரளா வனப் பகுதியில், இரு மாநில அதிரடி படை போலீசார் தொடர் கண்காணிப்பு

பந்தலூர்

தமிழக கேரளா எல்லை பகுதியாக உள்ளது, நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா .தற்போது வயநாடு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், தமிழக கேரளா வனப் பகுதியில், இரு மாநில அதிரடி படை போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணியில் குறித்து, நீலகிரி எஸ்.பி. பிரபாகர் நேரடி ஆய்வு செய்தார். சோதனை சாவடியில் மேற்கொள்ளப்படும் சோதனை பணிகள் மற்றும் புதிதாக வரும் வாகனங்களை சோதனை செய்வதன் விவரங்கள் குறித்து, காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு ஆய்வு செய்தார். தற்போது தமிழக கேரளா எல்லையில் நக்சல்கள் நடமாடி வருவதால், சோதனை சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு மற்றும் வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Labels:

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் மினி மாராத்தான் போட்டி.போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாராத்தான் போட்டி எஸ்பி துவக்கி வைத்தார்

தர்மபுரி அக் 15-

தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று காலை தர்மபுரி எலைட் ரோட்டரி சங்கத்தின் சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாராத்தான் போட்டி நடத்தப்பட்டது .

இந்த போட்டியை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் துவக்கி வைத்தார்.


தர்மபுரியில் இன்று காலை போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஓடியதை படத்தில் காணலாம்.
தர்மபுரி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து 3500 மாணவர்கள் தன்னவாலர் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசாக 44 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பேசும்போது தர்மபுரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தடுக்கும் விதமாக பல்வேறு வகையில் விழிப்புணர்வு பணிகள் காவல்துறையை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நான்கு கிராமங்களில் உள்ள அனைத்து பொதுமக்களும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுள்ளனர் .அதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பொதுமக்கள் இடையேயும் பல்வேறு வகைகளை விழிப்புணர்வு பணிகளை காவல்துறை செய்து வருவதாகவும் தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் போதைப்பொருட்களை தடுக்கும் விதமான பணிகள் அனைத்தும் காவல்துறை மேற்கொள்ளும் எனவும் உரையாற்றினார் .

மேலும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு மாணவிகளுக்கு கல்லூரி மாணவர் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உற்சாகமளிக்கும் விதமாக அவர்களுக்கும் தனியாக மினிமராத்தான் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது . தனித்தனி பிரிவுகளில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது . சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Labels:

Saturday, October 14, 2023

பேளாரள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், உணவு பாதுகாப்பு துறையினர் விழிப்புணர்வு

தர்மபுரி அக் 14-

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் வழிகாட்டல் படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு ஒன்றியம் பேளாரள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவர்களிடையே உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பொருள் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வுடன், புகையிலை பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதனை தவிர்த்தல்,தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேளாரள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முத்துசாமி, வேலுசாமி மற்றும் ஆசிரியை ராதா ஆகியோர் முன்னிலையில்,
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் , உணவு பொருள் பாக்கெட்டுகள் மற்றும் தின்பண்ட, குளிர்பான பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும் என உணவு பொருள் பாக்கெட்டுகள் கொண்டு விழிப்புணர்வு செய்தார். அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார். மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் விற்பனை கண்டால் ஆசிரியர்கள் மூலம் தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார் . புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பாபு சுந்தரம் மற்றும் ஆசிரியை திருமதி. யாழினி செய்திருந்தனர். பள்ளி தமிழ் ஆசிரியர் திரு. மகேந்திரன் நன்றி உரையாற்றினார்.

Labels:

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தர்மபுரி அக் 14-

மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தொடங்கி வைத்தார்

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் விவரம் பதிவு செய்யும் நிகழ்ச்சி தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், செல்வராஜ், ராஜகோபால், கலைச்செல்வன், கார்த்திக், முத்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தொடங்கி வைத்து இளைஞர் அணி நிர்வாகிகளிடம் அதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் அவர் 2-வது இளைஞர் அணி மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பெயர்களை பதிவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு, ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தடங்கம் இளைய சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Labels:

Thursday, October 12, 2023

மாவட்ட அளவிலான நடைபெற்ற நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவி 2 ஆம் இடம்

தர்மபுரி அக் 11-

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ராஜாஜி நீச்சல் குளத்தில்  இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இலக்கியம்பட்டி  பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு  படிக்கும் மாணவி எஸ்.பி. விஷாலினி 50 மீட்டர் நீச்சல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

Labels:

தர்மபுரி சாலையில் தேங்கிய மழை நீரில் நூதன முறையில் நாற்று நட்டு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்

தர்மபுரி அக் 11-

தர்மபுரி மாவட்டம் நூலஅள்ளியில் இருந்து உழவன் கொட்டை செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் ஆங்காங்கே சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சாலை சேரும் சகதியமாக உள்ளது. பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினம்தோறும் இந்த சாலை வழியே மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள். பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர் அவ்வப்போது சாலையில் வழுக்கி விழுந்து விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த சாலையானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. பழுதான சாலையை அமைக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கிராமத்துப் பெண்கள் நூதன முறையில் சாலையில் உள்ள சேற்றில் பெண்கள் நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Labels:

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

தருமபுரி அக் 12-

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய பேரவை கூட்டம் தருமபுரி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித்தார்.என்.ராஜம்மாள் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.என்.நூராணி வரவேற்றார்.மாவட்ட பொருளாளர் பி.வளர்மதி துவக்கி வைத்து பேசினார்.ஒன்றியசெயலாளர் எஸ்.ரீனா வேலை அறிக்கை வாசித்தார்.ஒன்றியபொருளாளர் பி.ம்தம்மாள் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்.மாவட்ட துணைத்தலைவர் ராமன் வாழ்த்தி பேசினார்.மாவட்ட தலைவர் சி.காவேரி சிறப்புரையாற்றினார்.
மாநில செயலாளர் பி.மகேஸ்வரி நிறைவுறையாற்றினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய தலைவராக எம்.ஜெயந்தி,ஒன்றிய செயலாளராக எஸ்.ரீனா பொருளாளராக பி.மாதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதலமைச்சரின் 
காலை உணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவாப்பதை நிறுத்திவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 
விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய உள்கட்டமைப்பு வசதியின் உள்ள சத்துணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.ஓய்வுபெறும் அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலட்சமும் சமையலர் மற்றும் சமையல் ஈதவியாளருக்கு ரூ 3 இலட்சம் வழங்கவேண்டும்.ஓய்வுபெறும் சத்துணவு ஊழியருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஊதியம் ரூ 9000வழஙகவேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அம்பிகா நன்றி கூறினார்.

Labels:

Wednesday, October 11, 2023

நூறுநாள் வேலை இடங்களில் அடிப்படை வசதி செய்ய கோரி தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்.

தருமபுரி அக்-11,

நூறுநாள் வேலை இடங்களில் அடிப்படை வசதி செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை தினக்கூலி ரூபாய் 600 வழங்கவேண்டும்.வேலை செய்யும் இடங்களில் அடிப்படை வசதிகளான நிழற்கூடம் மருத்துவவசதி குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கவேண்டும்.வேலைசெய்து முடித்த தொழிலாளர்களுக்கு சமபளபாக்கி உடனே வழங்கவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் எம்.முத்து , மாநிலக்குழு உறுப்பினர்கள் இ.கே.முருகன்,ஜி.பாண்டியம்மாள்,மாவட்ட துணை செயலாளர்கள் சி.ராஜா,எம்.செல்வம்,மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.வெங்கடாச்சலம் பி.கிருஷ்ணவேணி , மாவட்டக்குழு உறுப்பினர்கள் தீ.மாரியப்பன்,கே.குமரேசன்,டி.ஜடையாண்டி,பி.வீரப்பன்,கே.எல்லப்பன்,எம்
தங்கராஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Labels:

ஈரோடு சோலார் பஸ் நிலையம் தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு வரும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

ஈரோடு அக் 11-

ஈரோடு சோலார் பஸ் நிலையம் தீபாவளிக்கு பிறகு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்காலி பஸ் நிலையம்

ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பே தற்காலிக பஸ் நிலையம் தயாரானது. ஆனால் இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு தற்காலிக பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

ஈரோடு சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 23 ஏக்கர் பரப்பளவில் ரூ.63½ கோடி செலவில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடக்கிறது. தற்காலிக பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சாலை, பயணிகள் நிழற்கூடை, கழிப்பறை ஆகியன அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் நிற்கும் இடங்களில் அதன் வழித்தட விவரங்களின் பெயர் பதாகைகள் பொருத்தப்பட்டு உள்ளன.

காலஅவகாசம்

மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கரூர், திருச்சி, வெள்ளக்கோவில், மூலனூர், திண்டுக்கல் போன்ற வழித்தடங்களில் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை சோலார் பஸ் நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனும், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு அவர்களது கருத்துகளும் கேட்கப்பட்டன.

ஈரோடு மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கால அவகாசம் வேண்டும் என்று அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது. மேலும், தீபாவளி பண்டிகைக்கு வெளியூருக்கு பயணிகள் சென்று வருவதால், புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் சிரமம் ஏற்படும். எனவே தற்காலிக பஸ் நிலையம் தீபாவளி பண்டிகைக்கு பிறகே பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Labels:

பணி நிரந்தரம் செய்ய கோரி போராடும் செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்


தருமபுரி அக் 11-

சென்னையில் போராட்டம் நடத்திவரும் எம்ஆர்பி செவிலியருக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம்.ஆர்.பி.செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னை மருத்துவக் கல்வி இயக்கம் வளாகத்தில் செவிலியர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டம் நடத்திய எம்.ஆர்.பி.
செவிலியர்களை காவல்துறை 
கைது செய்து செய்ததை கண்டித்தும்
அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும், தேர்தல் கால
வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயவாளர்‌ குணசேகரன் தலைமை வகித்தார்.

மாநிலதுணைத்தலைவர் கோ.பழணியம்மாள்,
மாவட்ட செயலாளர் ஏ.சேகர் மாவட்ட பொருளாளர்‌ பி.எஸ்.இளவேணில், ஜாக்டோ ஜியோ ,நிதி காப்பாளர் கே.புகழேந்தி ,வட்ட நிர்வாகிகள் குமரன்,பன்னீர்செலவம் , ஆகியோர் பேசினர்.

Labels:

நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தருமபுரி அக்-10

நூறுநாள் வேலை திட்டத்தில் சம்பள பாக்கி கேட்டு தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சம்பள பாக்கி உடனே வழங்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை 200 நாளாகவும்
சம்பளத்தை ரூ.600/- ஆகவும் உயர்த்தி உடனே வழங்கவேண்டும்.அணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிபந்தனை இன்றி வேலை வழங்கவேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மற்றும் ஊதா கலர் அட்டையை உத்திரவாதப்படுத்தவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வருகைப்பதிவேடு வைக்க
வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒன்றிய தலைவர் பி.திருஞானம், தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து ஒன்றிய தலைவர் கே.சுசிலா,
மாவட்டக்குழு உறுப்பினர்கள். மாதம் மாதம் எஸ்.துளசி, ராமசாமி,ஜெயக்கொடி, அங்கம்மாள் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Labels: