Friday, March 29, 2024

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நூறு சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மார்ச் 29-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் மாநில ஊரக மற்றும் நகர்புர வாழ்தார இயக்கம் சார்பில் வாக்காளர் 100% வாக்கு பதிவை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம்100% வாக்களிக்க தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹூமுகமதுநசீர் உத்தரவின் பேரில் மாவட்ட வள நபர் பெருமாள் தலைமையில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது,. முன்னதாக பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இப்பேரணி பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி பாலக்கோடு பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பாலக்கோடு பேரூராட்சி வரை வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற பரிவு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ARO) தனபிரியா தொடங்கி வைத்தார். 

இந்த பேரணியில் தாசீல்தார் ஆறுமுகம் , வட்டார வளர்ச்சி அலுவலர் சுருலிநாதன் , ஜெகதிசன் , பேரூராட்சி செயலர் டார்த்தி, VAO சின்னசாமி கலந்து கொண்டு 100 சதவிம் வாக்களிக்க ஆட்டோ விளம்பரம் , துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு இந்நிலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வட்டார இயக்க மேலாளர் சிவலிங்கம் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வள்ளி, தனலட்சுமி, ஜெயசுதா, தமிழ்ச்செல்வி,சாலா மற்றும் நகர் புர வாழ்வாதார இயக்கம் ஒருங்கிணைப்பு அலுவலர் தவமணி. கலந்து கொண்டனர். அனைவரும் கலந்து கொண்டு 100 சதவிம் வாக்களிக்க வலியுறுத்தினர்

Labels:

Monday, March 25, 2024

ஏரியூர் நாகமரை 4 சாலை பகுதியில் உரிய ஆவணயின்றி ஆட்டோவில் எடுத்துவரப்பட்ட ₹ 3,0,2500 நிலையான குழுவினர் பறிமுதல் செய்தனர்

பென்னாகரம் மார்ச் 25-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையினர் மற்றும் நிலையான குழுவினர் என 6  குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை செய்து வருகின்றனர் இதில் ஏரியூர் நாகமரை நான்கு சாலை சந்திப்பில் நிலையான குழுவினர் வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணம்யின்றி 3,0,2500 ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்த நிலையில் மூன்று லட்சத்து 2500 ரூபாய் பறிமுதல் செய்து கருவூலம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நர்மதா வட்டாட்சியர் சுகுமார் நிலையான குழு விமலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Labels:

Sunday, March 24, 2024

சேலத்தில் மாநகர காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சேலம் மார்ச் 24-

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் சேலத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் காவல்துறையினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சேலம் மாநகர காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் மாநகர துணை கமிஷனர் பிருந்தா அவர்கள் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் அஸ்தம்பட்டி, மணக்காடு, ஜான்சன் பேட்டை, காந்தி ரோடு, வழியாக மீண்டும் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் அருகில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவத்தின் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Labels:

Friday, March 15, 2024

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புநாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து உடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Labels:

சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையமும் (டேன்கேம்) இணைந்து தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் பெண்களுக்கான மிகப்பெரிய ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன



சேலம் மார் 15- 

பெண் மாணவிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், சிக்கலைத் தீர்ப்பதில் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தவும் ஒரு தளத்தை உருவாக்கி, படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான ஊக்கியாகச் செயல்பட, டேன்கேம் இன்ஜினியரிங் பெண்களுக்கான ஹேக்கத்தான் போட்டிகள் வடிவமைத்துள்ளது. மேலும் மாறுபட்ட பொறியியல் சமூகத்தை வளர்ப்பதில் உறுதி பூண்டுள்ளது, அங்கு பெண்கள் செழித்து, வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் பொறியியல் துறையில் பெண்களுக்கான மிகப்பெரிய ஹேக்கத்தான் போட்டிகள் சோனா கல்லூயில் நடைப்பெற்றன.


முன்னதாக சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்புவிருந்தினர்களாக டசால்ட் சிஸ்டம்ஸ், கேட்டியா பிராண்ட் நிறுவனத்தின் உலகளாவிய துணைத்தலைவர் பெசன் ஃபிரடெரிக் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

இதனைத்தொடர்ந்து சூரிய சக்தி நகர்ப்புற இயக்கம், நிலையான நகர்ப்புற விவசாயத்திற்கான ஹைட்ரோபோனிக் செங்குத்து விவசாய முறை, மலிவு விலையில் பேரழிவை எதிர்க்கும் வீடு,சுத்தமான நீர் அணுகலுக்கான புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் சிறிய உப்புநீக்க சாதனம், நிலையான போக்குவரத்து மையம், பசுமை கட்டிட கண்டுபிடிப்புகள் என்ற தலைப்புகளில் போட்டிகள் நடைப்பெற்றன இந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிராம், மூன்றாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மேலும் முதல் 7 அணிகளுக்கு சிறப்பு பரிசாக ரூ10 ஆயிரம் ரூபாய்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை கல்லூரியின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் மற்றும் சிறப்புவிருந்தினர்கள் ஆகியோர் வழங்கி அவர்களுக்கு தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சோனா கல்லூரியின் மெக்கானீகல் துறைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர் வெங்கடேஷ் ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் குழு சிறப்பாக செய்திருந்தனர்.

Labels:

Monday, March 11, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி வருகை


தருமபுரி மார் 11- 

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ 560 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை 8736 வழங்கும் விழாவுக்கு தருமபுரி அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை!

அவ்வையார் வரலாற்றில் தகடூருக்கு என்ன பங்குண்டோ அதே பங்கு மகளிர் வாழ்வில் ஒளி விளக்காக விளங்கும் மகளிர் சுய உதவி குழுக்கள் துவக்கப்பட்ட தருமபுரிக்குகு உண்டு!

- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Labels:

Saturday, March 9, 2024

தருமபுரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகையொட்டி அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

தருமபுரி மார்ச் 9-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வருகை தர உள்ளார் . அது குறித்து மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி, தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு தடங்கம் பெ. சுப்ரமணி, ஆகியோர் நிகழ்ச்சி நடைபெறும் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இடத்தை ஆய்வு செய்தார்.

Labels: