Saturday, February 4, 2023

தாராபுரம் நகர திமுக சார்பில் அண்ணாவின் நினைவு தினத்தில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திமுக கழகம் சார்பில் அண்ணாவின் 54 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது தாராபுரம் அமராவதிஆறு பாலம் ரவுண்டானா அருகே மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவப் படத்தை கையில் ஏந்தியவாறு மௌன ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி ரோடு பூக்கடை கார்னர் பெரிய கடைவீதி வழியாக பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலையை வந்து அடைந்தனர் அங்கே உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு ரோஜா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் திரளாக மகளிர் அணியினர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Labels: ,

அருரில் 3ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகடூர் புத்தகப் பேரவை, அரூர் அரிமா சங்கம், அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை  ஆகியவை இணைந்து நடத்தும் 3ஆம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியது.


 இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் ஆய்வாளர் திருமதி.சு. அனிதா, முதன்மை கல்வி அலுவர். கு.குணசேகரன் அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். ப.வசந்தி, மாவட்டக் கல்வி அலுவலர் இராஜகோபால், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சகீல் அகமது, மாவட்ட நூலகர் தனலட்சுமி, தலைமை ஆசிரியர்கள் ஆறுமுகம், இராணி, காவல் துணைக்கண்காணிப்பாளர் எஸ்.புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் பெருமாள், மருத்துவர் செந்தில் Ex Mp, சின்னசாமி தலைவர் அலகு அரூர் காப்போம், ரேணுகோபால் தனியார் பள்ளி, DEO அரிமா செயலாளர் எஸ்.தீபாக்குமார், தகடூர் புத்தகப் பேரவை ஒருங்கினைப்பாளர், தங்கமணி நன்றியுரை கூறினார். 

Labels: ,

பெரியபாளையம் ஊராட்சி சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார்10,000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் வணிக வளாகங்கள் ஹோட்டல்கள் வீடுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரத்தில் ஊராட்சியின் சார்பில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டிச் செல்வார்கள் அப்படி கொட்டி செல்லும் குப்பைகளை மறுநாள் ஊராட்சியில் பணி செய்யும் தூய்மை பணியாளர்கள் வைத்து குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்துவது வழக்கம். 


ஆனால் குப்பை தொட்டிகள் பழுதடைந்து சரியான முறையில் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பெரியபாளையம் ஊராட்சி பாளையக்காரர் தெரு, பெரியபாளையம்  காவல் நிலையம் சாலை அருகே மற்றும் கலைஞர் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வெளியேறும் குப்பைகள் தேங்கி நிற்கின்றன. இதனை ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் அப்புறப்படுத்தாததால்  அப்பகுதிகள் சுற்றித் திரியும் மாடுகள், பன்றிகள், நாய்கள், உள்ளிட்டவை குப்பையில் உணவு தேடி கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. 


இதனால் அவ்வையாகச் செல்லும்  வாகன ஓட்டிகளும் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நாள்தோறும் குடியிருப்பு ஹோட்டல்கள் வணிக வளாகங்களில் இருந்து  வந்து சேரும் குப்பைகளை தேங்காத வண்ணம்  பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் முறையாக கண்டுகொண்டு குப்பைகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும் என்று  கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Labels:

சோழவந்தானில் அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் கொட்டும் மழையில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு.


சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி சிவன் கோவிலில்  தைமாத வளர்பிறை பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு  சனீஸ்வர லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும்  பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். 


விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் செய்திருந்தனர். 


ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோடைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் சனி பிரதோஷ விழா நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Labels: ,

எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் தீவிரம்.


நாளை (பிப். 5ம் தேதி) மதுரை, ராமநாதபுரத்திற்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு எழர்ச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது,  சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோயில் அருகே, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் , பத்தாயிரம்  எடப்பாடியார் தலைமையேற்று,  இணையும் விழா நடைபெறும் இடத்தினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்  தலைவர் ஆர்.பி.உதயகுமார்  ஆய்வு செய்தார். 


அவருடன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆர் பி .உதயகுமார் கூறியதாவது: கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார், தென் மாவட்ட மக்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை, திண்டுக்கல், பழனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகை புரிந்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத் தொண்டர்கள் எழுச்சிமிகு வரவேற்பை அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஐந்தாம் தேதி தைப்பூசம் அன்று கழகத் தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக எடப்பாடியார் வருகை தருகிறார். 


5ம் தேதி, காலை 9 மணிக்கு ரிங் ரோடு வலையங்குளம் அருகே உள்ளகருப்பசாமி கோயில் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் பத்தாயிரம் பேர் எடப்பாடியார் சீரிய தலைமை ஏற்று, கழகத்தில் இணையும் மாபெரும் விழா நடைபெறுகிறது .


இதில், பங்கேற்கும் எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பரமக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையாவின் இல்ல திருமண விழாவை நடத்தி வைக்க பரமக்குடிக்கு சாலை மார்க்கமாக எடப்பாடியார் செல்கிறார் .அங்கு 5 முனை ரோடு அருகே  ராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.  முனியசாமி தலைமையில், எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படுகிறது என்று கூறினார்.

Labels: ,